
உடைக்கப்பட்டவரின் ஜெபம்
'பரலோகப் பிதாவே, நான் ஒரு ஜெபிக்கிற மனிதன் அல்ல, ஆனால் நீர் இங்கிருந்து என் ஜெபத்தை கேட்பவரானால், திக்கற்றவனாய் இருக்கிறேன். எனக்கு வழி காட்டும்". இட்ஸ் எ வண்டர்ஃபுல் லைஃப் என்ற தரமான திரைப்படத்தின் உடைந்துபோன பாத்திரமான, ஜார்ஜ் பெய்லி என்ற பெயரில் நடிக்கும் கதாபாத்திரத்தின் ஜெபம். இப்போது புகழ் பெற்ற அந்தக் காட்சியில், பெய்லியின் கண்கள் கண்ணீரால் நிரம்பினது. அந்த ஜெபம் ஸ்க்ரிப்டின் ஓரு பகுதியல்ல, ஆனால் அவர் அந்த ஜெபத்தை சொல்லும்போது, 'எங்கு செல்வது என்று வழி தெரியாத மக்களின் தனிமையையும், நம்பிக்கையற்ற தன்மையையும் நான் உணர்ந்தேன்" என்று கூறினார். அது அவரின் இருதயத்தை உடைத்ததாக ஸ்டீவார்ட் கூறினார்.
பெய்லியின் ஜெபம் 'எனக்கு உதவும்" என்பதே. சங்கீதம் 109ல் அதே தான் சொல்லப்பட்டுள்ளது. தாவீது அடுத்து செய்வதறியாத, சிறுமையும் எளிமையுமானவனும், இருதயம் குத்தப்பட்டவனாயும் (வச. 22), மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போனவனுமாய் இருந்தான் (வச. 24). அவன் சாயும் நிழலைப்போல அகன்று போனான் (வச. 23). தன் பகைவர்களுக்கு முன்பாக நிந்தையுள்ளவனாய் உணர்ந்தான் (வச. 25). இப்படிப்பட்ட தீவிர உடைந்த நிலையில் அவருக்கு வேறு எவரும் இல்லை. ஆண்டவரிடம் தனக்கு வழி காட்டும்படி, 'என் தேவனாகிய கர்த்தாவே எனக்கு சகாயம் பண்ணும்" (வச. 26) என்று கூக்குரலிட்டார்.
நம் வாழ்வில் உடைந்துப் போகும் தருணங்கள் இதை பற்றி கூறுகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் ஜெபிப்பது கடினமானதாகி விடுகிறது. நம் அன்பான தேவன் நாம் உதவிக்காக ஏறெடுக்கும் சாதாரண ஜெபத்திற்கும் பதில் கொடுப்பார்.

பெட்டி ஆன்டியின் வழி
நான் சிறுவனாயிருக்கும்போது என்னுடைய அத்தை எங்களை பார்க்க வரும்போதெல்லாம் அது கிறிஸ்மஸ் போல இருந்தது. வரும்போது எனக்கு ஸ்டார் வார் (star war) பொம்மைகள் கொண்டு வருவார்கள். போகும்போது பணம் கொடுத்துவிட்டு செல்வார்கள். அவர்களுடன் நான் தங்கும்போதெல்லாம் காய்கறிகள் சமைக்கமாட்டார்கள் பதிலாக குளிர் சாதனப்பெட்டியில் ஐஸ் கிரிம்களை நிரப்பி வைப்பார்கள். அவருக்கு சில விதிகள் இருந்தன. என்னை தாமதமாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தார்கள். என் அத்தை தேவனின் பெருந்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு அற்புதமானவர். ஆனாலும் நான் ஆரோக்கியமாக வளர்வதற்கு, என் அத்தை என்னை கவனிப்பதைப் பார்க்கிலும் அதிக கவனம் தேவைப்பட்டது. என்னுடைய பெற்றோர்கள் என் மீதும் என் நடத்தை மீதும் எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டுமென்றும் என்னை அவர்களோடு வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாயிருந்தது.
அத்தை பெட்டியைப் பார்க்கிலும் தேவன் என்னிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார். நாம் அவருக்கு எதிர்த்து நின்றாலும் அல்லது அவரை விட்டு ஓடினாலும் - அவர் நம்மேல் அசைக்கமுடியாத அன்பு வைத்திருந்தாலும், அவர் நம்மிடமிருந்து ஏதாவது எதிர்பார்க்கிறார். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு எப்படி வாழவேண்டும் என அறிவுறுத்தும்போது பத்து பரிந்துரைகளை அல்ல பத்து கட்டளைகளை வழங்கினார் (யாத்திராகமம் 20:1-17). நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுவோம் என்று அறிந்து நாம் தேவனிடத்தில் அன்பு கூறவும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் (1 யோவான் 5:3). அதிர்ஷ்டவசமாக தேவனின் கற்பனைகள் பாரமானவைகள் அல்ல (வச. 3). பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவனுடைய அன்பையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பதால், நாம் அவருடைய கற்பனைகளின்படி வாழ முடியும். நம்மேல் அவர் வைத்துள்ள அன்பு இடைவிடாதது. ஆனால் அதற்கு பதிலாக நாம் தேவனை நேசிக்கின்றோமா என்பதை அறிந்துக்கொள்ள வேதாகமம் சில கேள்விகளை வைத்துள்ளது. ஆவியானவர் வழிநடத்தும் விதமாக நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறோமா? நாம் தேவனிடத்தில் அன்பு கூறுகிறோமென்று சொல்லலாம், ஆனால் அவருடைய பலத்தினால் நாம் என்ன செய்கிறோமென்பது தான் உண்மையானதை வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்மஸ் கால விற்பனை
ஒரு தாயார் தான் கிறிஸ்மஸ் பரிசுகளுக்காக அதிகமான பணம் செலவு செய்வதை உணர்ந்தார்கள். அதனால் ஒரு வருடம் எதாவது வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தார்கள். கிறிஸ்மஸ் விடுமுறைக்கு சில மாதங்களுக்கு முன்பு, முற்றத்தில் விற்பனையாகும் மலிவான மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களை எடுத்துக்
கொண்டார்கள், அவர்கள் வழக்கத்தைவிட அதிகமான பொருட்களை வாங்கினார்கள் ஆனால் குறைந்த விலையில். கிறிஸ்மஸ்க்கு முந்தய நாளில், அவருடைய பிள்ளைகள் தங்கள் தங்கள் பரிசுகளை ஒன்றின்பின ஒன்றாக பிரித்தனர். அடுத்த நாள் இன்னும் அனேக பரிசுகள் காத்திருந்தன. புதிய பரிசுகளை வாங்காதது அந்த தாயாருக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியதால், கிறிஸ்மஸ் அன்றைக்கும் காலையில் கூடுதலாக பரிசுகளை வாங்கி வைத்தார் அம்மா. பிள்ளைகள் பரிசுகளை பிரித்து கொண்டு விரைவாக 'இனி பரிசுகளை திறக்க நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். எங்களுக்கு மிக அதிகமாக கொடுத்தீர்கள்" என்று குறை கூறினார்கள். இது பிள்ளைகளிடமிருந்து கிறிஸ்மஸ் அன்றைக்கு பொதுவாக வரும் பதில் இல்லை.
தேவன் நம்மை எவ்வளவு அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார், ஆனால் நாம் இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம். ஒரு பெரிய வீடு, ஒரு நல்ல கார், மிக பெரிய வங்கி கணக்கு, அல்லது வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளுங்கள்ஸ. பவுல், தீமோத்தேயு தன் சபை மக்களுக்கு 'இந்த உலகத்திற்கு நாம் ஒன்றும் கொண்டுவந்ததில்லை, இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை. உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம்" என்று நினைப்பூட்ட உற்சாகப்படுத்தினார் (1 தீமோ. 6:7-8).
தேவன், நம்முடைய தேவைகளை கொடுப்பது மட்டுமில்லாமல், நமக்கு சுவாசத்தையும் ஜீவனையும் கொடுத்திருக்கிறார். அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை புத்துணர்ச்சியோடு அனுபவித்து 'நீர் எங்களுக்கு எவ்வளவு அதிகமாய் கொடுத்திருக்கிறீர். இன்னும் எங்களுக்கு தேவையில்லை" என்று சொல்லி திருப்தியாயிருக்க வேண்டும். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (வச. 6).

இடைவிடாத அன்பு
ஹேடி மற்றும் ஜேஃப், உஷ்ணமான பருவநிலையில் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையலிருந்து தங்களுடைய வீட்டிற்க்கு வந்தனர். குளிர் காலம் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு அருகில் குடும்பமாக தங்கினர். அவர்களுடைய பத்து பிள்ளைகளில் பலருக்கு இதுவே பனியின் இயற்க்கை அழகை கண்ட முதல் அனுபவமாக இருக்கும்.
ஆனால் இங்கிருக்கும் குளிர்ச்சியான பருவநிலைக்கு அநேக வெதுவெதுப்பான உடைகள், மேல் சட்டை, கையுறைகள், மற்றும் பூட்ஸ் ஆகியவை தேவைப்படும். ஒரு பெரிய குடும்பத்திற்கு, வரப்போகும் இந்த கடுமையான குளிர் காலத்திற்கான உடைகளுக்காகும் செலவு மிக அதிகமாகும். ஆனால் தேவன் அதை சந்தித்தார். முதலில் ஒரு அண்டை வீட்டுகாரர் காலணிகள், பின்பு பனியில் அணியும் கால் சராகை, பின்பு தொப்பி மற்றும் கையுறைகளை கொண்டுவந்தார். பின்பு ஒரு தோழி தன்னுடைய சபையிலுள்ள மற்றவர்களை, அந்த குடும்பத்திலுள்ள பன்னிரெண்டு பேருக்கும் பொருத்தமான அளவிலான வெதுவெதுப்பான உடைகளை சென்று சேகரிக்க சொன்னார். பனி பொழிய தொடங்கியபோது, அந்த குடும்பத்திற்கு சரியாக எது தேவையோ அனைத்தும் அவர்களிடமிருந்த்து.
தேவனுக்கு ஊழியம் செய்யும் வழிகளில் ஒன்று தேவையுள்ளவர்களுக்கு ஊழியம் செய்வது. 1 யோவான் 3:16-18 நம்முடையவைகளின் ஏராளத்திலிருந்து மற்றவருக்கு உதவுவதை ஊக்குவிக்கிறது. ஊழியம் செய்வது நாம் இன்னும் அதிகமாய் இயேசுவை போல் மாற உதவுகிறது. மக்களை எப்படி அவர் அன்புகூர்ந்து, காண்கிறாரோ அப்படியே நாமும் செயல்பட தொடங்கிறோம்.
தேவன் பெரும்பாலும் தன்னுடைய பிள்ளைகளை கொண்டே தேவைகளை சந்திக்கவும் மற்றும் ஜெபத்திற்கு பதிலளிக்கவும் செய்கிறார். நாம் ஊழியம் செய்யும்போது மற்றவர்கள் உற்சாகம் அடைவது போல நாமும் உற்சாகம் அடைகிறோம். அதன் பலனாக, புதிய வழிகளில் நாம் ஊழியம் செய்ய தேவன் நம்மை தயார் செய்யும்போது நம்முடைய விசுவாமும் வளர்கிறது (வச.18).
