நள்ளிரவு மணி சரியாக 12 அடிக்கும்போது,  நியூயார்க் நகரத்தின் டைம் ஸ்குவேர்-ல்  மக்கள் கூடியிருப்பார்கள். லண்டனின் பிக்பென் மணிக்கூண்டில் மணியடிக்கும் போது கூடியிருக்கும்  மக்களும் அதனோடு சேர்ந்து பின்னோக்கி எண்ணுவார்கள் (கவுண்ட்  டவுன் ) சிட்னி துறைமுகம் வாணவேடிக்கைகளால் அலங்கரிக்கப்படும். ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதத்தில் புதிய ஆண்டையும் அதனோடு சேர்ந்து வரும் ஊதிய துவக்கத்தையும்  வரவேற்கிறது. புதிய நட்புகளும் புதிய வாய்ப்புகளும் கண்டுபிடிக்கும்படியாக  புத்தாண்டின் முதல் நாளில்  நாம் புதிய நீரோட்டத்திற்குள் கடந்து செல்கிறோம்.

புத்தாண்டு எவ்வளவு விசேஷமாக இருந்தாலும் நமக்கு வரும் நாட்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எப்படிப்பட்ட புயல்களை நாம்கடந்து போக போகிறோம் என்று நமக்கு தெரியாது. வாணவேடிக்கைகள் சீனாவில் அசுத்த ஆவிகளை துரத்தி அந்த காலத்தை செழிப்பாக மாற்றுவதற்கு கண்டுபிடிக்கப்பட்டவை என்பது புத்தாண்டுகளை  பற்றிய ஒரு சீன மரபு.

பாபிலோனில் பழங்காலத்து பழக்கவழக்கமாக புத்தாண்டு பிறக்கும்போது தங்கள் தேவர்களுடன் சமாதானம் படுத்துவதற்கு புது தீர்மானங்கள் எடுக்கப்படும். இப்படியாக தங்கள் முன் வரும் எதிராக்காலத்தை பாதுகாக்க முடிவுகள் எடுக்கப்பட்டன.

தங்கள் தேவர்களுக்கு சத்தியங்கள் செய்யாத நேரத்தில் பாபிலோனியர்கள் இஸ்ரவேலர் முதற்கொண்டு மற்ற தேசங்களையும் கைப்பற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தேவனுடைய வார்த்தை அடிமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்கு வந்தது: “பயப்படாதே… நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்” (ஏசாயா 43:1-2). இதே போன்றுதான் புயலில் மாட்டிக்கொண்ட சீஷர்களை பார்த்து “ஏன் பயப்படுகிறீர்கள்” என்றார் இயேசு (மத்தேயு 8:23-27).

இதே போன்று இன்றும் அறியப்படாத நீரோட்டத்திற்குள்ளாக தள்ளப்படலாம்.ஆனால் எப்பேர்ப்பட்ட அலைகளையும் அமர்த்த அதிகாரம்  கொண்ட தேவன் எப்பொழுதும் நம் பக்கத்தில் இருக்கிறார்.