

ஏதோ புதியது
புதிய நீர் இல்லாத பகுதிகளில் விவசாயம் செய்வது கடினம். இந்த சிக்கலை தீர்க்க உதவுவதற்காக, கடல் நீர் கிரீன்ஹவுஸ் நிறுவனம் சோமாலிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் இதே போன்ற தட்பவெப்பநிலைகளைக் கொண்ட பிற நாடுகளில் “குளிரூட்டும் வீடுகளை” உருவாக்கியுள்ளது. நெளி அட்டைகளால் செய்யப்பட்ட சுவர்கள் மீது உப்புநீரைத் தூற்றுவதற்கு குளிரூட்டும் வீடுகள் சூரிய விசையியக்கக் குழாய்களைப் (solar pumps) பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பேனலுக்கும் கீழே நீர் செல்லும்போது, அதன் உப்பை பின்னால் விட்டு விடுகிறது. மீதமுள்ள நன்னீர் பெரும்பகுதி கட்டமைப்பிற்குள் ஆவியாகிறது, இது பழம் மற்றும் காய்கறி பயிர்கள் செழிக்கக்கூடிய ஈரப்பதமான இடமாக மாற்றும்.
ஏசாயா தீர்க்கதரிசி மூலம், பண்டைய இஸ்ரவேலுக்காக “அவாந்தரவெளியிலே ஆறுகளை” வழங்கியதால் தேவன் ஒரு “புதிய காரியத்தை” செய்வதாக வாக்குறுதி அளித்தார் (ஏசா. 43:19). இந்த புதிய காரியம் எகிப்திய இராணுவத்திடமிருந்து தனது மக்களை மீட்பதற்காக அவர் செய்த பழைய காரியத்திற்கு முரணானது. செங்கடல் சம்பவம் நினைவிருக்கிறதா? தம்முடைய மக்கள் கடந்த காலத்தை நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்பினார், ஆனால் அது அவர்களின் வாழ்க்கையில் அவருடைய தற்போதைய ஈடுபாட்டை மறைக்க விடக்கூடாது (வச. 18). அவர், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியை உண்டாக்குவேன்.” என்று சொன்னார் (வச. 19).
கடந்த காலத்தைப் பார்ப்பது தேவனுடைய சித்தத்தில் நம்முடைய நம்பிக்கையை உயர்த்தும் அதே வேளையில், கடந்த காலங்களில் வாழ்வது இன்று தேவனுடைய ஆவியின் அனைத்து புதிய வேலைகளுக்கும் நம்மை குருடாக்குகிறது. அவருடைய மக்களுக்கு உதவுதல், மறுபடியும் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் அவர் தற்போது எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் காட்டும்படி தேவனிடம் நாம் கேட்கலாம். இந்த விழிப்புணர்வு, அருகிலுள்ள மற்றும் தொலைதூர மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவருடன் கூட்டாளராக இருக்கும்படி நம்மைத் தூண்டட்டும்.

ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம்
எனது நண்பர் டேவின் வாலிப மகள் மெலிசா இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு எனது நண்பர் ஷரோன் காலமானார். அவர்கள் இருவரும் கார் விபத்துக்களில் கோரமாக கொல்லப்பட்டனர். ஒரு இரவு ஷரோன் மற்றும் மெலிசா இருவரும் என் கனவில் வந்தார்கள். ஒரு பெரிய விருந்து மண்டபத்தில் அவர்கள் அலங்காரங்களை தொங்கவிட்டு கொண்டிருந்தபோது சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த அறைக்குள் நுழைந்த போது என்னைப் புறக்கணித்தார்கள். ஒரு நீண்ட மேஜை வெள்ளைத்துணிகளாலும் தங்கத் தட்டுகளும் கோப்பைகளுடனும் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. நானும் அலங்காரத்தில் உதவட்டுமா என்று நான் கேட்டதை அவர்கள் கேட்காதது போல வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் ஷரோன், “இந்த விருந்து மெலிசாவின் திருமண வரவேற்பு” என்றார்.
“மணவாளன் யார்?” நான் கேட்டேன். இருவரும் பதிலளிக்கவில்லை, ஆனால் புன்னகைத்து ஒருவருக்கொருவர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். இறுதியாக, அது எனக்கு வெளிப்பட்டது - அது இயேசு!
“இயேசு மணவாளன்” என்று நான் எழுந்தவுடன் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இயேசு திரும்பி வரும் போது விசுவாசிகள் அவரோடு சந்தோஷமாக கொண்டாடும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை கனவு என் மனதில் கொண்டு வருகிறது. இது "ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து" (19:9) என்று அழைக்கப்படும் ஒரு பகட்டான விருந்தாக வெளிப்படுத்துதலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் முதல் வருகைக்கு மக்களை தயார்படுத்திய யோவான் ஸ்நானகன், அவரை “ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அழைத்தார் (யோவா. 1:29). அவர் இயேசுவை “மணவாளன்” என்றும், தன்னை "மணவாளனுடைய தோழன்" (சிறந்த மனிதனைப் போல) என்றும் காத்திருந்தார் (3:29).
அந்த விருந்து நாளிலும், நித்திய காலத்திலும், இயேசு, நம்முடைய மணவாளன், ஷரோன், மெலிசா மற்றும் கடவுளின் மக்கள் அனைவருடனும் இடைவிடாத ஐக்கியத்தை அனுபவிப்போம்.

துடிக்கும் கடிகாரம்
தொழிலாளர்கள் ஒரு குழு உறைந்த ஏரியிலிருந்து பனியை வெட்டி ஒரு ஐஸ்ஹவுஸில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒருவர் ஜன்னல் இல்லாத கட்டிடத்தில் தனது கைக்கடிகாரத்தை இழந்துவிட்டார் என்பதை உணர்ந்தார். அவரும் அவரது நண்பர்களும் அதை தேடும் முயற்சி வீணை போயிற்று.
அவர்கள் தேடுவதை பிறகு, அவர்கள் வெளியேறுவதைக் கண்ட ஒரு சிறுவன் கட்டிடத்திற்குள் சென்றான். விரைவில், அவன் கடிகாரத்துடன் வெளிப்பட்டான். அவன் அதை எப்படிக் கண்டுபிடித்தான் என்று கேட்டதற்கு, “நான் உட்கார்ந்து அமைதியாக இருந்தேன், விரைவில் நான் கடிகாரத்தின் துடிக்கும் சத்தத்தை கேட்டேன்.”
அசையாமல் இருப்பதன் மதிப்பு பற்றி வேதாகமம் அதிகம் பேசுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் தேவன் சில நேரங்களில் ஒரு மெல்லிய குரலில் பேசுகிறார் (1 இரா. 19:12). வாழ்க்கையின் பரபரப்பில், அவருக்கு செவி சாய்ப்பது கடினமாகத் தோன்றலாம், ஆனால் சற்று நிதானித்து, அவருடனும் வேதாகம வசனங்களுடனும் சிறிது நேரம் செலவிட்டால், அவருடைய எண்ணங்களை நம் எண்ணங்களில் கேட்கலாம்.
தீய மக்களின் “பொல்லாத திட்டங்களிலிருந்து” நம்மை மீட்பதற்கும், நமக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும், உண்மையுள்ளவர்களாக இருக்க உதவுவதற்கும் நமது நம்பிக்கை கர்த்தர் மீது இருக்க வேண்டும் (சங். 37:1-7) நமக்கு கூறுகிறது. ஆனால் நம்மைச் சுற்றி கொந்தளிப்பு இருக்கும்போது இதை நாம் எவ்வாறு செய்ய முடியும்? 7 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” ஜெபத்திற்குப் பிறகு சில நிமிடங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்வதன் மூலம் இதை நாம் தொடங்கலாம். அல்லது அமைதியாக வேதாகமத்தைப் படித்து, வார்த்தைகளை நம் இருதயத்தில் ஊறவைப்பதன் மூலம். பின்னர், ஒருவேளை, அவருடைய ஞானம் நம்மிடம் அமைதியாகவும் நிதானமாகவும் அந்த துடிதுடிக்கும் கடிகாரத்தை போல பேசுவதை கேட்க முடியும்.

நம்பிக்கையோடு காத்திருப்பது
ஹச்சி: எ டாக்ஸ் டேல் (Hachi: A Dog's Tale) என்ற ஆங்கில திரைப்படத்தில், கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஹச்சி என்ற தெரு நாய்க்குட்டியுடன் நட்பு கொண்டிருந்தார். பேராசிரியர் வேலையிலிருந்து திரும்புவதற்காக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் காத்திருந்து நாய் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. ஒரு நாள், பேராசிரியருக்கு ஆபத்தான பக்கவாதம் ஏற்பட்டது. ஹச்சி ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தது. அடுத்த பத்து வருடங்களுக்கு ஒவ்வொரு நாளும் அது திரும்பத் திரும்ப வந்தது. அதனுடைய அன்பான எஜமானருக்காக காத்திருந்தது.
தன் எஜமானரின் வருகைக்காக பொறுமையாகக் காத்திருந்த சிமியோன் என்ற மனிதனின் கதையை லூக்கா சொல்கிறார் (லூக்கா 2:25). மேசியாவைக் காணும் வரை அவர் மரணத்தைக் காணமாட்டார் என்று பரிசுத்த ஆவியானவர் சிமியோனுக்கு வெளிப்படுத்தினார் (வச. 26). இதன் விளைவாக, கடவுளின் மக்களுக்கு “இரட்சிப்பை” அளிப்பவருக்காக சிமியோன் காத்திருந்தார் (வச. 30). மரியாளும் யோசேப்பும் இயேசுவோடு ஆலயத்திற்குள் நுழைந்தபோது, பரிசுத்த ஆவியானவர் சிமியோனிடம் இவர்தான் அவர் என்று கிசுகிசுத்தார்! காத்திருப்பு இறுதியாக முடிந்தது! சிமியோன் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை, இரட்சிப்பு மற்றும் ஆறுதலுமான கிறிஸ்துவை தன் கைகளில் வைத்திருந்தார் (வச. 28-32).
காத்திருக்கும் பருவத்தில் நாம் நம்மைக் கண்டால், ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை புதிய காதுகளால் கேட்கலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). இயேசுவின் வருகைக்காக நாம் காத்திருக்கும்போது, ஒவ்வொரு புதிய நாளுக்கும் நமக்குத் தேவையான நம்பிக்கையையும் பலத்தையும் அவர் அளிக்கிறார்.