வகை  |  odb

துதிப்பதில் மகிழ்ச்சியைக் கண்டறிதல்

பிரபல பிரிட்டன் நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ் முதன்முதலில் தனது வாழ்க்கையை இயேசுவுக்குக் கொடுத்தபோது, ​​ஆரம்பத்தில் தேவனை துதிப்பதை அவர் எதிர்த்தார். உண்மையில், அவர் அதை "ஒரு இடையூரு" என்று அழைத்தார். "தேவனே அதைக் கோரியது." தான் அவரது பிரச்சனை. ஆயினும்கூட லூயிஸ் இறுதியாக உணர்ந்தார் “அது ஆராதிக்கப்படும் செயல்முறையில் உள்ள போது தேவன் தம்முடைய பிரசன்னத்தை” தம்முடைய மக்களுக்கு அளிக்கிறார் என்று. பின்னர், "தேவனோடுள்ள பரிபூரண அன்பினால்", " ஒரு கண்ணாடி பெறும் பிரகாசத்தை விட அதிகமாய் அது பிரதிபலிக்கிறது போல" பிரிக்க முடியாத சந்தோஷத்தை அவருள் கண்டடைகிறோம்.

இந்த முடிவுக்கு ஆபகூக் தீர்கதரிசி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்தார். யூத மக்களை குறிவைத்த தீமைகளைப் பற்றி தேவனிடம் முறையிட்ட பின், அவரைத் துதிப்பது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை ஆபகூக் கண்டறிந்தார்—தேவன் என்ன செய்கிறார் என்பதில் அல்ல, ஆனால் அவர் யார் என்பதே. இவ்வாறு, ஒரு தேசிய அல்லது உலக அளவிளான நெருக்கடியில் கூட, தேவன் இப்போதும் வல்லவராய் இருக்கிறார். தீர்க்கதரிசி அறிவித்தபடியே: 

"அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (ஆபகூக் 3:17-18).”நான் இரட்சகராகிய தேவனிடத்தில் மகிழ்ச்சியாயிருப்பேன்” என்று கூறினார்.

சி.எஸ். லூயிஸ் உணர்ந்தபடி, "உலகம் முழுவதும் துதியின் சத்தம் ஒலிக்கிறது." அதேபோல், ஆபக்கூக்கும் தேவனை எப்போதும் துதிப்பதற்கு அர்ப்பணித்தார், “நித்திய நடைகளாயிருந்தவருள்” ​​மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டார் (வச. 6).

நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம்

ஜார்ஜ் வைட்ஃபீல்ட் (1714-1770) வரலாற்றில் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள போதகர்களில் ஒருவராகவும், ஆயிரக்கணக்கானோரை இயேசுவின் விசுவாசத்தில் வழிநடத்தினவராகவும் இருந்தார். ஆனால் அவரது வாழ்க்கை சர்ச்சைக்குரியதாய் இல்லாமல் இல்லை. வெளி இடங்களில் பிரசங்கிக்கும் அவரது நடைமுறை (மிகப் பெரிய கூட்டத்திற்கு) சில சமயங்களில் அவருடைய நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியவர்களாலும், அவர் ஒரு தேவாலய கட்டிடத்தின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே பிரசிங்கிக்க வேண்டும் என்று நினைத்தவர்களாலும் விமர்சிக்கப்பட்டது.. வைட்ஃபீல்டின் கல்லறை வாசகங்கள் மற்றவர்களின் “கடுமையான வார்த்தைகளுக்கு” அவர் அளித்த பதிலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: “எனது பண்பை காட்ட நீயாத்தீர்ப்பு நாள் வரை காத்திருப்பதில் நான் திருப்தி அடைகிறேன்; நான் இறந்த பிறகு, இதைத் தவிர வேறு எந்தப் கல்லறை வாசகத்தையும் நான் விரும்பவில்லை, 'ஜார்ஜ் வைட்ஃபீல்ட் இங்கே இருக்கிறார்-அவர் எப்படிப்பட்ட மனிதர் அவர், என்பதை அந்த பெரிய நாள் வெளிப்படுத்தும்.”

பழைய ஏற்பாட்டில், தாவீது மற்றவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது, ​​அவரும் தன்னை தேவனிடம் ஒப்படைத்தார். தாவீது ஒரு கிளர்ச்சியை வழிநடத்தியதாக சவுல் பொய்யாகக் குற்றம் சாட்டியபோது, ​​சவுலின் இராணுவம் நெருங்கியபோது ஒரு குகையில் மறைந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தாவீது இருந்தபோது, ​​தாவீது “சிங்கங்களுக்கு நடுவே” இருப்பதை விவரித்தார், “அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 57: 4). ஆனால் அந்த இக்கட்டான இடத்திலும் கூட, அவர் தேவனை நோக்கிப் பார்த்து அவரிடத்தில் ஆறுதல் பெற்றார்: “உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது” (வச.. 10). 

மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்ளும்போதும் அல்லது நம்மை நிராகரிக்கும்போதும், ​​தேவனே  நம் “அடைக்கலம்” (வச.. 1). அவருடைய தவறாத மற்றும் இரக்கமுள்ள அன்பிற்காக அவர் என்றென்றும் ஸ்தோத்தரிக்கப்படுவாராக!

அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது

பெரும்பாலான சமோவா இளைஞர்கள் (ஒரு ஆஸ்திரேலிய கடலோர தீவு) அவர்களின் மக்களுக்கும் மற்றும் அவர்களது தலைமைக்கும் தங்கள் செய்ய வேண்டிய பொறுப்பை அடையாளங்களாக பச்சையாககுத்தியிறுப்பார்கள். இயற்கையாகவே, இந்த அடையாளங்கள் சமோவான் ஆண்கள் ரக்பி அணி உறுப்பினர்களின் கைகளில் இடம்பெற்றிருக்கும். பச்சை குத்தல்கள் என்றாலே எதிர்மறையான அர்த்தங்களைக் கொடுக்கும் நாடான ஜப்பானுக்குப் பயணம் செய்தபோது, ​​குழு உறுப்பினர்கள் தங்கள் பச்சை குத்தல்கள்  தங்களை அழைத்தவர்களுக்கு ஒரு சிக்கலை வழங்கியதை உணர்ந்தனர். நட்பின் வெளிப்பாடாக, சமோவான் அணியினர் தங்கள் பச்சை குத்தியதை மறைக்க வடிவமைப்புகளை உள்ளடக்கிய தோல் நிற உறைகளை அணிந்தனர். "ஜப்பானியரின் எண்ணங்களுக்கு நாங்கள் மரியாதைக்குரியவர்களாகவும் மற்றும் கவனத்துடனும் இருக்கிறோம்....ஜப்பானிய வழியில்” என்று அணியின் தலைவர் விளக்கினார். "நாங்கள் பச்சையை காண்பிப்பது சரி என்ற நிலையை நாங்கள் உறுதி செய்வோம்."

தனிமனித கருத்துக்களை முக்கியப்படுத்தும் ஒரு யுகத்தில், சுய வரம்பை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது—ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கூறிய கருத்து. சில சமயங்களில் அன்பினால் மற்றவர்களுக்காக நம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அவசியமாகிறது என்று அவர் எங்களிடம் கூறினார். நம்முடைய சுதந்திரத்தை எல்லைக்கே தள்ளுவதற்குப் பதிலாக, சில சமயங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது. பவுல் அப்போஸ்தலன் தேவாலயத்தில் சிலர் “எந்த பதார்த்தத்தையும் சாப்பிட” சுதந்திரம் இருப்பதாக நம்பினார்கள், ஆனால் மற்றவர்கள் “மரக்கறிகளை மட்டுமே” சாப்பிட்டார்கள் (ரோமர் 14: 2) என்பதை விளக்கினார்.  இது ஒரு சிறிய பிரச்சினை போல் தோன்றினாலும், முதல் நூற்றாண்டில், பழைய ஏற்பாட்டின் உணவுமுறை சட்டங்களை பின்பற்றுவது சர்ச்சைக்குரியதாக இருந்தது. சுதந்திரமாக சாப்பிட்டவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளால் தீர்மானிப்பதற்கு முன், "நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக" என்று பவுல் அனைவருக்கும் அறிவுறுத்தினார் (வச. 13). "மாம்சம் புசிக்கிறதும் மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்." (வச. 21).

சில நேரங்களில், இன்னொருவரை நேசிப்பது என்பது நமது சொந்த சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதாகும். நமக்கு முழு சுதந்திரம் உள்ளதாலேயே அனைத்தையும் எப்போதும் செய்யலாம் என்றில்லை. சில நேரங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது.

ஆதரவின் வழியாக

ஜனவரி 28, 1986 அன்று, அமெரிக்க விண்வெளி விண்கலம் சேலஞ்சர்  புறப்பட்ட எழுபத்து மூன்று வினாடிகளில் உடைந்துபோனது. தேசத்திற்கு ஆறுதல் அளிக்கும் உரையில், ஜனாதிபதி ரீகன் "ஹை பிளைட்" என்ற கவிதையில் இருந்து, அதில் இரண்டாம் உலகப் போரின் விமானியான ஜான் கில்லெஸ்பி மாகி எழுதியுள்ள " விண்வெளியின் மிகைப்படுத்தப்படாத புனிதத்தன்மை" மற்றும் தனது கையை நீட்டி "தேவனின் முகத்தை" தொடும் உணர்வு பற்றி மேற்கோள் காட்டினார்.

தேவனின் முகத்தை நாம் உண்மையில் தொட முடியாது என்றாலும், சில சமயங்களில் நாம் அனுபவிக்கிற பிரம்மிக்கத்தக்க சூரிய அஸ்தமனம் அல்லது இயற்கையின் அமைதியான சூழல் அவர் அருகில் உள்ளார் என்ற சிறந்த உணர்வை நமக்கு அளிக்கிறது. சிலர் இந்த தருணங்களை “மெல்லிய இடங்கள்” என்று அழைக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் பிரிக்கும் இடைவெளி கொஞ்சம் மெல்லியதாக காணப்படுகிறது. தேவனை கொஞ்சம் நெருக்கமாக உணர்கிறோம்.

இஸ்ரவேலர்கள் பாலைவன வனாந்தரத்தில் தேவனின் அருகாமையை உணர்ந்ததால் ஒரு "மெல்லிய இடத்தை" அனுபவித்திருக்கலாம். தேவன் பாலைவனத்தின் வழியாக அவர்களை வழிநடத்த பகலில் மேக ஸ்தம்பத்தையும் இரவில் அக்கினி ஸ்தம்பத்தையும் வழங்கினார் (யாத்திராகமம் 40: 34-38). அவர்கள் பாளையத்திலே தங்கினபோது, "கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று" (வச. 35). அவர்களின் எல்லா பிரயாணங்களிலும், தேவன் அவர்களுடன் இருந்ததை அவர்கள் அறிந்தார்கள்.

தேவனின் படைப்பின் நம்பமுடியாத அழகை நாம் ரசிக்கும்போது, ​​அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது நமக்கு நனவாகிறது. நாம் ஜெபத்திலே அவருடன் பேசும்போது, ​​அவரது வார்த்தைகளை கேட்கும்போது, வேதவசனங்களைப் படிக்கும்போது, ​​எந்த நேரத்திலும் மற்றும் எங்கும் அவரோடு உள்ள ஐக்கியத்தில் மகிழலாம்.

கிறிஸ்துவில் தோழர்கள்

வயதுவந்தோருக்கான வளர்ச்சி பற்றிய ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆய்வு என்பது பல பத்தாண்டுகள் நீடித்த திட்டமாகும், இதன் விளைவாக ஆரோக்கியமான உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ள முடிந்தது. 2-ஆம் ஆண்டு படிக்கும் 268 பேர் கொண்ட மாணவர்களின் குழுவுடன் 1930-களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஆராய்ச்சி பின்னர் மேலும் 456 மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களுடன் நேர்காணல்களை நடத்தி, சில வருடங்களுக்கு ஒருமுறை அவர்களின் மருத்துவ பதிவுகளை அலசி ஆராய்ந்தனர். அவர்களின் நெருங்கிய உறவுகளே அவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை யூகிப்பதில் மிகப்பெரிய காரணி என்பதை அவர்கள் கண்டறிந்தனர். சரியான நபர்களால் நாம் சூழப்பட்டிருந்தால், ஆழ்ந்த மகிழ்ச்சியின் உணர்வை நாம் அனுபவிப்போம்.

பிலிப்பியர் 1-ல் அப்போஸ்தனாகிய பவுல் விவரிக்கிறதை இது பிரதிபலிக்கிறது. சிறையிலிருந்து அவர் எழுதுகையில், பவுலால் உதவ முடியாது எனினும் ஒவ்வொரு முறையும் அவர் அவர்களை நினைக்கிற பொழுதெல்லாம் அவர்களுக்காக தேவனை ஸ்தோத்தரித்து, "சந்தோஷத்தோடே" விண்ணப்பம்பண்ணுகிறார் என்று அவரது நண்பர்களிடம் கூறுகிறார் (வச. 4). ஆனால் இவர்கள் சாதாரண நண்பர்கள் அல்ல; இவர்கள் இயேசுவினுள் சகோதர சகோதரிகள், அவர்கள் “தேவனின் கிருபையில் பங்குள்ளவர்கள்”, பவுலுடன் சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள் (வச. 7). அவர்களின் உறவு பகிர்வினாலும் மற்றும் பரஸ்பரத்தினாலும் உருவான ஒன்று – தேவனின் அன்பினாலும் மற்றும் சுவிசேஷத்தினாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு உண்மையான ஐக்கியம்.

ஆம், நண்பர்கள் முக்கியம் தான், எனினும் கிறிஸ்துவுக்குள் உள்ள சகதோழர்கள் ஒரு உண்மையான மற்றும் ஆழ்ந்த மகிழ்ச்சியின் வினையூக்கிகள். வேறு எதை விடவும் தேவனின் கிருபையே நம்மை ஒன்றாக பிணைக்க முடியும், மேலும் வாழ்க்கையின் எந்த இருள் சூழ்ந்த காலங்களிலும் கூட இந்த பிணைப்பினால் வரும் மகிழ்ச்சி நீடிக்கும்.