பிரபல பிரிட்டன் நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ் முதன்முதலில் தனது வாழ்க்கையை இயேசுவுக்குக் கொடுத்தபோது, ​​ஆரம்பத்தில் தேவனை துதிப்பதை அவர் எதிர்த்தார். உண்மையில், அவர் அதை “ஒரு இடையூரு” என்று அழைத்தார். “தேவனே அதைக் கோரியது.” தான் அவரது பிரச்சனை. ஆயினும்கூட லூயிஸ் இறுதியாக உணர்ந்தார் “அது ஆராதிக்கப்படும் செயல்முறையில் உள்ள போது தேவன் தம்முடைய பிரசன்னத்தை” தம்முடைய மக்களுக்கு அளிக்கிறார் என்று. பின்னர், “தேவனோடுள்ள பரிபூரண அன்பினால்”, ” ஒரு கண்ணாடி பெறும் பிரகாசத்தை விட அதிகமாய் அது பிரதிபலிக்கிறது போல” பிரிக்க முடியாத சந்தோஷத்தை அவருள் கண்டடைகிறோம்.

இந்த முடிவுக்கு ஆபகூக் தீர்கதரிசி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்தார். யூத மக்களை குறிவைத்த தீமைகளைப் பற்றி தேவனிடம் முறையிட்ட பின், அவரைத் துதிப்பது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை ஆபகூக் கண்டறிந்தார்—தேவன் என்ன செய்கிறார் என்பதில் அல்ல, ஆனால் அவர் யார் என்பதே. இவ்வாறு, ஒரு தேசிய அல்லது உலக அளவிளான நெருக்கடியில் கூட, தேவன் இப்போதும் வல்லவராய் இருக்கிறார். தீர்க்கதரிசி அறிவித்தபடியே: 

“அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆபகூக் 3:17-18).”நான் இரட்சகராகிய தேவனிடத்தில் மகிழ்ச்சியாயிருப்பேன்” என்று கூறினார்.

சி.எஸ். லூயிஸ் உணர்ந்தபடி, “உலகம் முழுவதும் துதியின் சத்தம் ஒலிக்கிறது.” அதேபோல், ஆபக்கூக்கும் தேவனை எப்போதும் துதிப்பதற்கு அர்ப்பணித்தார், “நித்திய நடைகளாயிருந்தவருள்” ​​மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டார் (வச. 6).