ஜார்ஜ் வைட்ஃபீல்ட் (1714-1770) வரலாற்றில் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள போதகர்களில் ஒருவராகவும், ஆயிரக்கணக்கானோரை இயேசுவின் விசுவாசத்தில் வழிநடத்தினவராகவும் இருந்தார். ஆனால் அவரது வாழ்க்கை சர்ச்சைக்குரியதாய் இல்லாமல் இல்லை. வெளி இடங்களில் பிரசங்கிக்கும் அவரது நடைமுறை (மிகப் பெரிய கூட்டத்திற்கு) சில சமயங்களில் அவருடைய நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியவர்களாலும், அவர் ஒரு தேவாலய கட்டிடத்தின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே பிரசிங்கிக்க வேண்டும் என்று நினைத்தவர்களாலும் விமர்சிக்கப்பட்டது.. வைட்ஃபீல்டின் கல்லறை வாசகங்கள் மற்றவர்களின் “கடுமையான வார்த்தைகளுக்கு” அவர் அளித்த பதிலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: “எனது பண்பை காட்ட நீயாத்தீர்ப்பு நாள் வரை காத்திருப்பதில் நான் திருப்தி அடைகிறேன்; நான் இறந்த பிறகு, இதைத் தவிர வேறு எந்தப் கல்லறை வாசகத்தையும் நான் விரும்பவில்லை, ‘ஜார்ஜ் வைட்ஃபீல்ட் இங்கே இருக்கிறார்-அவர் எப்படிப்பட்ட மனிதர் அவர், என்பதை அந்த பெரிய நாள் வெளிப்படுத்தும்.”

பழைய ஏற்பாட்டில், தாவீது மற்றவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது, ​​அவரும் தன்னை தேவனிடம் ஒப்படைத்தார். தாவீது ஒரு கிளர்ச்சியை வழிநடத்தியதாக சவுல் பொய்யாகக் குற்றம் சாட்டியபோது, ​​சவுலின் இராணுவம் நெருங்கியபோது ஒரு குகையில் மறைந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தாவீது இருந்தபோது, ​​தாவீது “சிங்கங்களுக்கு நடுவே” இருப்பதை விவரித்தார், “அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 57: 4). ஆனால் அந்த இக்கட்டான இடத்திலும் கூட, அவர் தேவனை நோக்கிப் பார்த்து அவரிடத்தில் ஆறுதல் பெற்றார்: “உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது” (வச.. 10). 

மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்ளும்போதும் அல்லது நம்மை நிராகரிக்கும்போதும், ​​தேவனே  நம் “அடைக்கலம்” (வச.. 1). அவருடைய தவறாத மற்றும் இரக்கமுள்ள அன்பிற்காக அவர் என்றென்றும் ஸ்தோத்தரிக்கப்படுவாராக!