வகை  |  odb

அணைத்துக் கொள்ளுதல்

“அப்பா, நீங்கள் எனக்காக படித்து காட்டுவீர்களா?” என் மகள் கேட்டாள். அது ஒரு குழந்தை பெற்றோரிடம் கேட்கும் வழக்கமில்லாத கேள்வி அல்ல. ஆனால் என் மகளுக்கு இப்போது பதினொரு வயது. இந்த சமயத்தில் அத்தகைய கோரிக்கைகள் அவள் இளமையாக இருந்தபோது இருந்ததை விட குறைவாகவே உள்ளன. "ஆம்,"என்று நான் மகிழ்ச்சியுடன் சொன்னேன், அவள் படுக்கையில் என் அருகில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

நான் அவளுக்காக படித்து காட்டியபோது அவள் உண்மையாகவே என்னுள் உருகினாள்.  நம்முடைய பிதா நம்மீது வைத்திருக்கும் நேர்த்தியான அன்பு, ​​அவருடைய பிரசன்னத்திற்குள்ளும் நம்மீதுள்ள அன்பிற்குள்ளும் நம்மை “அணைக்க வேண்டும்” என்ற அவருடைய ஆழ்ந்த விருப்பம் ஆகியவற்றின் அறிகுறியை நாம் உணரும்போது ஒரு தந்தையாக பல சிறப்பான தருணங்களில் இதுவும் ஒன்று,

நான் என் பதினொரு வயது உள்ள எனது மகளை போல் அந்த தருணத்தில் உணர்ந்தேன். பெரும்பாலான நேரம், நான் யாரையும் சாராமல் இருப்பதில் கவனம் செலுத்துகிறேன். தேவன் நம்மீது வைத்திருக்கும் மென்மையான மற்றும் பாதுகாப்பான அன்பிலிருக்கும் தொடர்பை இழப்பது மிகவும் எளிது, சங்கீதம் 116 “கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர். நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்” என்று விவரிக்கிறது (வச. 5). இந்த அன்பில், என் மகளைப் போலவே, தேவனின் மடியில், அவரது வீட்டில் எனக்கு மகிழ்ச்சி இருக்கும்.

சங்கீதம் 116: 7, தேவனின் நல்ல அன்பை நாம் தவறாமல் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும், பின்னர்  காத்திருக்கும் அவருடைய கரங்களில் தவழ்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது: "என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மைசெய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு". அது  உண்மையாகவே, அவரிடம் உள்ளது. 

முட்டாள்தனத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஒரு நபர் மளிகை கடைக்குள் நடந்து சென்று கவுண்டரில் ரூ.500-யை வைத்து கொண்டு சில்லரை  கேட்டார். கடைகாரர் பணப் பெட்டியை திறந்த போது, அந்த மனிதன் ஒரு துப்பாக்கியை எடுத்து அனைத்து பணத்தையும் கேட்டார்  அந்த கடைக்காரர் உடனடியாக முழுவதையும் வழங்கினார். அந்த நபர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார், ஐதூறு ரூபாய் நோட்டை கவுண்டரிலேயே  விட்டுவிட்டார் . அந்த பணப் பெட்டியிலிருந்து அவர் பெற்ற மொத்த பணம்?முன்னூறு ரூபாய்.

நாம் அனைவரும் சில நேரங்களில் முட்டாள்தனமாக செயல்படுகிறோம் ... இந்த திருடனைப் போலல்லாமல், நாம் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறோம். முக்கியமானது நமது முட்டாள்தனமான நடக்கையிலிருந்து நாம் எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். திருத்தம் செய்யவில்லை என்றால், நமது மோசமான தேர்வுகள் பழக்கமாக மாறக்கூடும், அது நம் தன்மையை எதிர்மறையாக வடிவமைக்கும். நாம் “முட்டாள்கள்” ஆகிவிடுவோம். . . மதிகெட்டவனாக” (பிரசங்கி 10: 3). 

சில நேரங்களில் நம் முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்வது கடினம், ஏனெனில் அதற்கு கூடுதலான செயல்பாடு தேவைப்படுகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட குறைபாட்டை நாம் பிரதிபலிக்க வேண்டும், அது வேதனையானது. அல்லது ஒரு முடிவு அவசரமாக எடுக்கப்பட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அடுத்த முறை நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், நம்முடைய முட்டாள்தனமான வழிகளைப் புறக்கணிக்க அது ஒருபோதும் உதவாது.

அதிர்ஷ்டவசமாக, தேவன் நம்முடைய முட்டாள்தனத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் நம்மை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தலாம். எந்தச் சிட்சையும் “தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல்” துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்”(எபிரெயர் 12:11). நம்முடைய முட்டாள்தனமான நடக்கைக்காக நம்முடைய பிதாவின் சிட்சையை ஏற்றுக்கொள்வோம், அவர் விரும்பும் மகன்கள் மற்றும் மகள்களைப் போல நம்மை மேலும் மாற்றும்படி அவரிடம் வேண்டிக்கொள்வோம்.

எங்களின் மோசமான நிலையில்

"அவள் சகிக்கக்கூடியவள், ஆனால் என்னை சோதிக்கும் அளவுக்கு அழகானவள் அல்ல. " ஜேன் ஆஸ்டனின் பிரைட் அண்ட் ப்ரெஜுடிஸில் திரு.டார்சி உச்சரித்த இந்த வாக்கியதால், அந்த நாவலையும் அதன் மீது எனக்கு ஏற்பட்ட தாக்கத்தையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஏனென்றால், அந்த ஒரு வாக்கியத்தைப் படித்த பிறகு, நான் ஒருபோதும் திரு.டார்சியை விரும்ப மாட்டேன் என்று உறுதியாக முடிவு செய்தேன்.

ஆனால் நான் தவறு செய்தேன். ஆஸ்டனின் கதாபாத்திரமான எலிசபெத் பென்னட்டைப் போலவே, மெதுவாகவும், மிகவும் தயக்கமின்றி-என் மனதை மாற்றிக்கொள்ளும் தாழ்மையான அனுபவம் எனக்கு இருந்தது. அவளைப் போலவே, டார்சியின் தன்மையை முழுவதுமாக அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை; அவரது மோசமான தருணங்களுக்கான எனது எதிர்வினையைப் பற்றிக்கொள்ள தெரிந்தெடுத்தேன். நாவலை முழுமையாக படித்து முடித்த பிறகு, நிஜ உலகில் அதே தவறை நான் யாருக்கு செய்தேன் என்று யோசித்தேன். விரைவான முடிவை நான் எடுக்காமட்டேன் என்பதால் நான் எந்த நட்பை இழந்தேன்?

மோசமான நிலையில், இயேசுவை விசுவாசிக்கும் உள்ளம் நம்முடைய இரட்சகரால் காணப்பட்ட, நேசிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம் ஆகும்.(ரோமர் 5: 8; 1 யோவான் 4:19). கிறிஸ்துவில் நாம் உண்மையிலேயே யார் என்பதற்காக நம்முடைய பழைய, பொய்யான விஷயங்களை நாம் அர்ப்பணிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்வதில் ஆச்சரியம் இருக்கிறது (எபேசியர் 4: 23-24). நாம் இனி தனியாக இல்லை, ஆனால் நாம் ஒரு குடும்பத்தின் ஒரு பகுதி, “அன்பின் வழி” - உண்மையான, நிபந்தனையற்ற அன்பில்  நடக்கக் கற்றுக்கொள்பவர்களின் “சரீரம்” என்பதைப் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சி. (5: 2)

கிறிஸ்து நமக்காகச் செய்ததை நாம் நினைகூரும்போது (வச.. 2), அவர் நம்மைப் பார்க்கும் விதத்தில் மற்றவர்களை எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும்?

குணமடைய ஒரு மரம்

சுமார் 2.19 கோடிக்கு, நீங்கள் ஒரு புதிய மெக்லாரன் ஆடம்பர பந்தய கார் வாங்க முடியும். இந்த வாகனம் வி8 எஞ்சினுடன் 710 குதிரைத்திறனுடனும் வருகிறது. உங்கள் காலைப் பணியின் பயணத்திற்கு உங்களுக்குத் தேவையானதை விட இது அதிகம்.

நிச்சயமாக, அதன் அனைது ஆற்றலையும் பயன்படுத்த நீங்கள் ஆசைப்படக்கூடும். ஒரு ஓட்டுநர் தனது கார் மிகவும் “வேகமாக” ஒரு உயர்மட்ட விற்பனை நிலையத்திலிருந்து இருந்து இருபத்தி நான்கு மணி நேரத்தில் பழைய இரும்பு குவியலுக்குச் செல்லக்கூடும் என்பதை கற்றுக்கொண்டார், ! கார் வாங்கிய ஒரே நாளில், அதை ஒரு மரத்தில் மோதினார். (அதிர்ஷ்டவசமாக, அவர் உயிர் தப்பினார்.)

வேதத்தின் மூன்று அதிகாரங்கள் கூறும் சம்பவம் மூலமாக, ஒரு தீமையான தேர்வும் ஒரு மரமும் தேவனின் நல்ல படைப்புக்கு கேடு விளைவித்தது கற்றுக்கொள்கிறோம். ஆதாமும் ஏவாளும்  புசிக்கக்கூடாத விருட்சத்திலிருந்து கனியை புசித்தார்கள் (ஆதியாகமம் 3:11). சம்பவம் இங்கு தான் ஆரம்பமாகிறது, பூமியானது சபிக்கப்பட்டது (வச.. 14-19).

இந்த சாபத்தை நீக்குவதில் மற்றொரு மரம் பங்கு வகிக்கும்- அது இயேசு நம் சார்பாக சகித்த சிலுவை மரம். அவருடைய மரணம் அவருடன் நம் எதிர்காலத்தை சம்பாதித்த்து (உபாகமம் 21:23; கலாத்தியர் 3:13).

வேதத்தின் கடைசி அத்தியாயத்தில் கதை முழுமை பெறுகிறது. "ஜீவவிருட்சம்" "ஜீவத்தண்ணீருள்ள நதிக்கு" அருகில் வளர்ந்து வருவதைப் பற்றி நாம் வாசிக்கிறோம் (வெளிப்படுத்துதல் 22: 1-2). யோவான் விவரிப்பதுபோல், இந்த மரம் “ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவையாக” இருக்கும் (வச.. 2). "இனி ஒரு சாபமுமிராது" (வச.. 3) என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். நாம் அனைவரும் வாஞ்சிக்கிற நித்திய மகிழ்ச்சியுடன் தேவனோடு -எப்போதும் வாழ்வோம் என்பதே சம்பவத்தின் நிறைவு.

தேவனுடன் சிறந்தது

அவளது கல்லூரி கைப்பந்து அணியில், என் பேத்தி வெற்றியின் கொள்கை ஒன்றை கற்றுக்கொண்டாள். பந்து தன் வழியில் வந்தபோது, ​​எந்த நிலையிலும், அவளால் “பந்தை சிறப்பாக” விளையாட முடியும். தந்திரங்களை பயன்படுத்தாமலும், குற்றம் சாட்டாமலும், சாக்கு சொல்லாமலும், ஒரு சிறந்த சூழ்நிலையில் தனது அணியினரை கொண்டுச்செல்லும் ஒரு ஆட்டத்தை அவளால் ஆட முடியும் என்பதே. எப்போதும் இருக்கும் நிலைமையை மேம்படுத்துங்கள்.

தானியேலும் மூன்று எபிரேய நண்பர்களும் பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சரால் சிறைபிடிக்கப்பட்டபோது தானியேலின் பதிலும் அதுதான். அவர்களுக்கு புறமத பெயர்கள் வழங்கப்பட்டாலும், எதிரிகளின் அரண்மனையில் மூன்று வருட “பயிற்சி” எடுக்கும்படி கட்டளையிடப்பட்டாலும், தானியேல் ஆத்திரமடையவில்லை. அதற்கு பதிலாக, ராஜாவின் உயர்ரக  உணவையும் திராட்சரசத்தையும் சாப்பிடுவதன் மூலம் தேவனின் பார்வையில் தன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம் என்று அவர் அனுமதி கேட்டார். இந்த சுவாரஸ்யமான வேதத்தின் சம்பவம் காட்டுவது போல், மரக்றிகளையும் தண்ணீரையும் மட்டும் பத்து நாட்கள் சாப்பிட்ட பிறகு (தானியேல் 1:12), தானியேலும் அவருடைய நண்பர்களும் “ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப் பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது” (வச.. 15).

மற்றொரு முறை, நேபுகாத்நேச்சார் தானியேல் மற்றும் அரண்மனை ஞானிகள் அனைவரையும் ராஜாவின் குழப்பமான சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் சொல்ல முடியாவிட்டால் கொன்றுவிடுவேன் என்று மீண்டும் மிரட்டினார். மீண்டும், தானியேல் பீதியடையவில்லை, ஆனால் "பரலோக தேவனிடமிருந்து" இரக்கம் கோரினார், மறைபொருள் அவருக்கு ஒரு தரிசனத்தில் வெளிப்பட்டது (2:19). தேவனைப் பற்றி தானியேல் அறிவித்தபடி, “ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது” (வச.. 20). சிறைப்பிடிக்கப்பட்ட காலம் முழுவதும், தானியேல் எதிர்கொண்ட மோதல்களுக்கு மத்தியிலும் தேவனிடம் சிறந்ததை நாடினார். நம்முடைய தொல்லைகளிலும், நாம் அந்த முன்மாதிரியைப் பின்பற்றி, அதை தேவனிடம் எடுத்துச் செல்வதன் மூலம் நிலைமையைச் சிறப்பாக மாற்றுவோம்.