“அப்பா, நீங்கள் எனக்காக படித்து காட்டுவீர்களா?” என் மகள் கேட்டாள். அது ஒரு குழந்தை பெற்றோரிடம் கேட்கும் வழக்கமில்லாத கேள்வி அல்ல. ஆனால் என் மகளுக்கு இப்போது பதினொரு வயது. இந்த சமயத்தில் அத்தகைய கோரிக்கைகள் அவள் இளமையாக இருந்தபோது இருந்ததை விட குறைவாகவே உள்ளன. “ஆம்,”என்று நான் மகிழ்ச்சியுடன் சொன்னேன், அவள் படுக்கையில் என் அருகில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

நான் அவளுக்காக படித்து காட்டியபோது அவள் உண்மையாகவே என்னுள் உருகினாள்.  நம்முடைய பிதா நம்மீது வைத்திருக்கும் நேர்த்தியான அன்பு, ​​அவருடைய பிரசன்னத்திற்குள்ளும் நம்மீதுள்ள அன்பிற்குள்ளும் நம்மை “அணைக்க வேண்டும்” என்ற அவருடைய ஆழ்ந்த விருப்பம் ஆகியவற்றின் அறிகுறியை நாம் உணரும்போது ஒரு தந்தையாக பல சிறப்பான தருணங்களில் இதுவும் ஒன்று,

நான் என் பதினொரு வயது உள்ள எனது மகளை போல் அந்த தருணத்தில் உணர்ந்தேன். பெரும்பாலான நேரம், நான் யாரையும் சாராமல் இருப்பதில் கவனம் செலுத்துகிறேன். தேவன் நம்மீது வைத்திருக்கும் மென்மையான மற்றும் பாதுகாப்பான அன்பிலிருக்கும் தொடர்பை இழப்பது மிகவும் எளிது, சங்கீதம் 116 “கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர். நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்” என்று விவரிக்கிறது (வச. 5). இந்த அன்பில், என் மகளைப் போலவே, தேவனின் மடியில், அவரது வீட்டில் எனக்கு மகிழ்ச்சி இருக்கும்.

சங்கீதம் 116: 7, தேவனின் நல்ல அன்பை நாம் தவறாமல் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும், பின்னர்  காத்திருக்கும் அவருடைய கரங்களில் தவழ்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது: “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மைசெய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு”. அது  உண்மையாகவே, அவரிடம் உள்ளது.