ஜோ ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தார், பெரும்பாலும் இடைவெளி எடுக்காமல். ஒரு தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கு பெரும்பாலான நேரம் மற்றும் ஆற்றல் தேவைப்பட்டது. அவர் வீட்டிற்கு வந்த போது தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும்  செலவிட குறைவான நேரமே இருந்தது. நாள்பட்ட மன அழுத்தததிற்கு பின்னர் ஜோவை மருத்துவமனையில் சேர்ர்க்க நேர்ந்தது, ஒரு நண்பர் அவருக்கு உதவ ஒரு குழுவை ஏற்பாடு செய்ய முன்வந்தார். தனது தொண்டு நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கைவிடுவதற்கு அவர் பயந்தாலும், ஜோ தனது தற்போதைய வேகத்தைத் தொடர முடியாது என்று அறிந்திருந்தார். அவர் தனது நண்பரையும் … தேவனையும் நம்புவதற்கு ஒப்புக்கொண்டார், ஏனெனில் அவர்கள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்த நபர்களின் குழுவிற்கு பொறுப்புகளை அவர் ஒப்படைத்தார்.  தேவன் அனுப்பிய உதவியை அவர் மறுத்திருந்தால், தொண்டு நிறுவனமும் அவரது குடும்பத்தினரும் ஒருபோதும் இது போன்றதோரு முன்னேற்றம் அடைந்திருக்காது என்பதை ஒரு வருடத்திற்கு பின்னர் ஜோ ஒப்புக்கொண்டார்.

அன்பான சமூகத்தின் ஆதரவு இல்லாமல் வளர்ச்சி அடையும்படி தேவன் மக்களை  வடிவமைக்கவில்லை. யாத்திராகமம் 18-ல் மோசே இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் வழிநடத்தினார். அவர் ஒரு ஆசிரியராக, ஆலோசகராக, ஒரு நீதிபதியாக தேவனுடைய மக்களுக்கு சேவை செய்ய முயன்றார். அவரது மாமனார் வந்து சந்தித்தபோது ​​அவர் மோசேக்கு ஆலோசனைவழங்கினார்:  “நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்து போவீர்கள். இது உமக்கு மிகவும் பாரமான காரியம். நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலேகூடாது” என்று எத்திரோ கூறினார்.(யாத்திராகமம் 18:18). விசுவாசமுள்ளவர்களுடன் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்ள மோசேயை அவர் ஊக்குவித்தார். மோசே உதவியை ஏற்றுக்கொண்டார், முழு சமூகமும் பயனடைந்தது.

நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது, ​​தேவன் தம்முடைய எல்லா  மக்களிடமும் அவர்கள் மூலமாகவும் செயல்படுகிறார் என்று நாம் நம்பும்போது , உண்மையான இளைபாறுதலை காணலாம்.