வகை  |  odb

எதை பார்க்க முடியாது?

​ஜூலை 16, 1945 இல் நியூ மெக்ஸிகோவின் தொலைதூர பாலைவனத்தில் முதல் அணு ஆயுதம் வெடித்தபோது, ​ அணு வயது தொடங்கியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் கிரேக்க தத்துவஞானி டெமோக்ரிட்டஸ் (சி. 460–370 கி.மு ) பிரபஞ்சத்தின் இந்த சிறிய கட்டுமானத் தொகுதிகளைக் கூட காணக்கூடிய எதையும் கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அணுவின் இருப்பு மற்றும் சக்தியை ஆராய்ந்து கொண்டிருந்தார். டெமோகிரிட்டஸ் அவர் பார்க்க முடிந்ததை விட அதிகமாக புரிந்து கொண்டார் மற்றும் அதன் விளைவு அணுக் கோட்பாடாகும்.

விசுவாசத்தின் சாராம்சம் காண முடியாததைத் தழுவுகிறது என்று வேதம் சொல்கிறது. எபிரெயர் 11: 1 "இப்போது விசுவாசம் என்பது நம்பபடுகிறதின் உறுதி, காணப்படாதவைகளின் நிச்சயம்." என்றும் உறுதிப்படுத்துகிறது, இந்த உத்தரவாதம் விருப்பத்தினால் அல்லது நேர்மறையான சிந்தனையின் விளைவாகவும் அல்ல. யாருடைய இருப்பு பிரபஞ்சத்தில் உண்மையான உண்மையோ அந்த காண முடியாத தேவன் மீதான நமது நம்பிக்கை. அவருடைய யதார்த்தம் அவருடைய படைப்பின் கிரியையில் காட்டப்பட்டுள்ளது (சங்கீதம் 19: 1) மற்றும் பிதாவின் அன்பை நமக்குக் காட்ட வந்த அவருடைய குமாரனாகிய இயேசுவில் அவருடைய கண்ணுக்குத் தெரியாத தன்மையையும் வழிகளையும் வெளிப்படுத்துவதன் மூலம் விளங்கபன்னினார் (யோவான் 1:18).

அப்போஸ்தலன் பவுல் (அப்போஸ்தலர் 17:28) கூறியது போல் இந்த தேவனுக்குள் “நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்”. ஆகவே, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5: 6). எனினும் நாம் தனியாக நடக்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத தேவன் ஒவ்வொரு அடியிலும் நம்முடன் நடக்கிறார்.

எங்கள் இதயங்களில் வசிப்பது

சில சமயங்களில் குழந்தைகளின் வார்த்தைகள் தேவனின் சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு நம்மைத் தூண்டக்கூடும். என் மகள் இளமையாக இருந்தபோது  ஒரு நாள் மாலையில், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு உன்னத இரகசயத்தை பற்றி அவளிடம் சொன்னேன் - தேவன் தம்முடைய குமாரன் மற்றும் ஆவியின் மூலமாக அவருடைய பிள்ளைகளுள் வாசம்செய்கிறார். நான் அவளை படுக்கையில் கட்டிக்கொண்டபோது, ​​இயேசு அவளுடனும் அவளுக்குள்ளும் இருப்பதாக சொன்னேன். "அவர் என் வயிற்றில் இருக்கிறாரா?" என்று அவள் கேட்டாள். "உன்மையில், நீ அவரை விழுங்கவில்லை," என்று நான் பதிலளித்தேன். "ஆனால் அவர் உன்னுடன் இருக்கிறார்." 

இயேசுவை “அவள் வயிற்றில்” வைத்திருப்பதாக என் மகள் நேரடியாக அர்தம் கொண்டபோது என்னை நிதானித்தேன், இயேசுவை என் இரட்சகராகக் வரும்படி கேட்டபோது, ​​அவர் வந்து எனக்குள் எப்படி வாசம்பன்னினார் என்பதைக் கருத்தில் கொண்டேன்.

பரிசுத்த ஆவியானவர் எபேசுவில் உள்ள விசுவாசிகளை பலப்படுத்துவார் என்று பிரார்த்தனை செய்தபோது அப்போஸ்தலன் பவுல் இந்த இரகசியத்தை குறிப்பிட்டார், இதனால் கிறிஸ்து “விசுவாசத்தினாலே [அவர்களுடைய இருதயங்களில்] வாசம்பன்னுவார்” (எபேசியர் 3:17). இயேசு உள்ளே வாசம்பன்னுவதால், அவர் அவர்களை எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அன்பினால் தூண்டப்பட்டு, அவர்கள் தங்கள் விசுவாசத்தில் முதிர்ச்சியடைவார்கள், அன்பின் உண்மையை பேசும்போது மற்றவர்களை மனத்தாழ்மையுடனும் மென்மையுடனும் நேசிப்பார்கள் (4: 2, 25).

இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குள் வாசம்பன்னுவது என்றால், அவருடைய அன்பு அவரை வரவேற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் விட்டு விலகாது. அவருடைய அன்பு அறிவுக்கு எட்டாதது (3:19) நம்மை அவரிடம் வேரூன்ற செய்து, அவர் நம்மை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட வார்த்தைகள் இதைச் சிறப்பாகச் எடுத்துரைக்கும்: “ஆம், இயேசு என்னை நேசிக்கிறார்!”

பால் முதலில் வருகிறது

ஏழாம் நூற்றாண்டில், இப்போது ஐக்கிய இராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் நாடு பல ராஜ்யங்களாக பிரிந்து அடிக்கடி போர் புரிந்து கொண்டிருந்தது. நார்த்தம்ப்ரியாவின் ஓஸ்வால்ட் ராஜா இயேசுவின் விசுவாசியாக மாறினபோது, அவர் தனது பகுதியில் சுவிசேஷம் அறுவிக்க ஒரு மிஷினெரியை அழைத்தார். கோர்மன் என்னும் பெயருடைய மனிதர் அனுப்பப்பட்டார், ஆனால் சரியான பலன் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் “பிடிவாதமாக,” “காட்டுமிராண்டித்தனமாக,” இருப்பதை மற்றும் அவரது பிரசங்கத்தில் அக்கறை இல்லாததையும் கண்டு, அவர் விரக்தியுடன் வீடு திரும்பினார்.

ஐடான் என்ற ஒரு துறவி கோர்மனிடம், “கற்றுக் கொள்ளாதவர்களிடம் நீங்கள் இருந்ததை விட நீங்கள் மிகவும் கடுமையாக இருந்தீர்கள்” என்று கூறினார். நார்த்ம்பிரியர்களுக்கு " பாலை போல் மிகவும் எளிதான கோட்பாட்டை" கொடுப்பதற்கு பதிலாக, புரிந்துகொள்ள முடியாதவற்றை கோர்மன் பிரசங்கித்திருந்தார்.  ஐடன் நார்தம்பிரியாவுக்குச் சென்று , தனது பிரசங்கத்தை மக்களின் புரிதலுக்கு ஏற்றவாறு மாற்றினார் , ஆயிரக்கணக்கானோர் இயேசுவை விசுவாசித்தார்கள்.

ஐடனுக்கு இந்த முக்கியமான அணுகுமுறை வேதத்திலிருந்து கிடைத்தது. பவுல் கொரிந்தியரிடம், “நீங்கள் பெலனில்லாதவர்களானதால் உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்” (1 கொரிந்தியர் 3:2). சரியான வாழ்க்கை மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதற்கு முன்பு, இயேசுவைப் பற்றிய அடிப்படை போதனை, மனந்திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம் ஆகியவற்றைப் மக்கள் புரிந்திருக்க வேண்டும் (எபிரெயர் 5: 13–6: 2). முதிர்ச்சி பின்பற்றப்பட வேண்டும் (5:14), வரிசையை தவறவிடக்கூடாது. இறைச்சிக்கு முன் பால் வருகிறது. மக்களால் புரிந்து கொள்ளாத போதனைகளுக்குக் கீழ்ப்படிய இயலாது. 

நார்த்ம்பிரியர்களின் நம்பிக்கை இறுதியில் தங்கள் நாட்டிற்கு அப்பால் பல நாடுகளுக்கு  பரவியது. ஐடனைப் போலவே, மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​அவர்கள் இருக்கும் நிலையிலேயே நாம் அவர்களை சந்திக்கிறோம்.

ஒன்றாக வேலை செய்தல்

ஜோ ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தார், பெரும்பாலும் இடைவெளி எடுக்காமல். ஒரு தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கு பெரும்பாலான நேரம் மற்றும் ஆற்றல் தேவைப்பட்டது. அவர் வீட்டிற்கு வந்த போது தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும்  செலவிட குறைவான நேரமே இருந்தது. நாள்பட்ட மன அழுத்தததிற்கு பின்னர் ஜோவை மருத்துவமனையில் சேர்ர்க்க நேர்ந்தது, ஒரு நண்பர் அவருக்கு உதவ ஒரு குழுவை ஏற்பாடு செய்ய முன்வந்தார். தனது தொண்டு நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கைவிடுவதற்கு அவர் பயந்தாலும், ஜோ தனது தற்போதைய வேகத்தைத் தொடர முடியாது என்று அறிந்திருந்தார். அவர் தனது நண்பரையும் ... தேவனையும் நம்புவதற்கு ஒப்புக்கொண்டார், ஏனெனில் அவர்கள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்த நபர்களின் குழுவிற்கு பொறுப்புகளை அவர் ஒப்படைத்தார்.  தேவன் அனுப்பிய உதவியை அவர் மறுத்திருந்தால், தொண்டு நிறுவனமும் அவரது குடும்பத்தினரும் ஒருபோதும் இது போன்றதோரு முன்னேற்றம் அடைந்திருக்காது என்பதை ஒரு வருடத்திற்கு பின்னர் ஜோ ஒப்புக்கொண்டார்.

அன்பான சமூகத்தின் ஆதரவு இல்லாமல் வளர்ச்சி அடையும்படி தேவன் மக்களை  வடிவமைக்கவில்லை. யாத்திராகமம் 18-ல் மோசே இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் வழிநடத்தினார். அவர் ஒரு ஆசிரியராக, ஆலோசகராக, ஒரு நீதிபதியாக தேவனுடைய மக்களுக்கு சேவை செய்ய முயன்றார். அவரது மாமனார் வந்து சந்தித்தபோது ​​அவர் மோசேக்கு ஆலோசனைவழங்கினார்:  “நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்து போவீர்கள். இது உமக்கு மிகவும் பாரமான காரியம். நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலேகூடாது” என்று எத்திரோ கூறினார்.(யாத்திராகமம் 18:18). விசுவாசமுள்ளவர்களுடன் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்ள மோசேயை அவர் ஊக்குவித்தார். மோசே உதவியை ஏற்றுக்கொண்டார், முழு சமூகமும் பயனடைந்தது.

நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது, ​​தேவன் தம்முடைய எல்லா  மக்களிடமும் அவர்கள் மூலமாகவும் செயல்படுகிறார் என்று நாம் நம்பும்போது , உண்மையான இளைபாறுதலை காணலாம்.