ஜூலை 16, 1945இல் நியூ மெக்ஸிகோவின் தொலைதூர பாலைவனத்தில் முதல் அணு ஆயுதம் வெடித்தபோது, அணு யுகம் துவங்கியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் கிரேக்க தத்துவஞானி டெமோக்ரிட்டஸ் (கி.மு. 460-370) பிரபஞ்சத்தின் இந்த சிறிய கட்டுமானத் தொகுதிகளைக் கூட காணக்கூடிய எதையும் கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அணு சக்தியைக் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தார். டெமோகிரிட்டஸ், வெகுகாலங்களுக்கு முன்னே இதை கணித்திருந்தார். அதன் விளைவே அணுக்கோட்பாடாகும். 

காணக்கூடாததை விசுவாசிப்பதே விசுவாசத்தின் சாராம்சம் என்று வேதம் சொல்லுகிறது. எபிரெயர் 11:1ல், “இப்போது விசுவாசம் என்பது நம்பப்படுகிறதின் உறுதி, காணப்படாதவைகளின் நிச்சயம்” என்றும் உறுதிப்படுத்துகிறது. இது விருப்பத்தினாலே அல்லது நேர்மறையான பார்வையினால் ஏற்படக்கூடிய உத்தரவாதம் அல்ல. இது உலகத்தில் நிஜமாகவே தோன்றியுள்ள, காணமுடியாத ஒரு தேவன் மீது வைக்கிற நம்பிக்கை. அவர் இருக்கிறார் என்பதை அவருடைய சிருஷ்டிப்பு பிரதிபலிக்கிறது (சங்கீதம் 19:1). மேலும் அவருடைய காணமுடியாத குணாதிசயங்களையும் வழிகளையும், பிதாவின் அன்பைப் பிரதிபலிக்க வந்த அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் வெளியரங்கமாக்கியுள்ளார் (யோவான் 1:18).

அப்போஸ்தலர் பவுல் கூறியது போல், இந்த தேவனுக்குள் “நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” (அப்போஸ்தலர் 17:28). ஆகவே, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:6). எனினும் நாம் தனியாக நடக்கவில்லை; கண்ணுக்குத் தெரியாத தேவன் நம்முடைய ஒவ்வொரு அடியிலும் நம்முடன் நடக்கிறார்.