
நடந்து போ, ஓடாதே!
ஒவ்வொரு நாளின் விடியலையும் அவள் வரவேற்பதை நான் காண்கிறேன். அவள் எங்கள் உள்ளூர் பவர் வாக்கர். நான் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, அவள் சாலையின் முனையில் இருப்பாள். பெரிய ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு, முழங்கால் உயரமான, வண்ணமயமான சாக்ஸ் போட்டுக்கொண்டு, அவளது கைகள் மற்றும் கால்களை மாறி மாறி இயக்கி நடந்து கொண்டு, எப்போதுமே ஒரு காலை தரையில் வைத்தவளாய் இருப்பாள். இந்த விளையாட்டு சாதாரணமான ஓடுகிற பயிற்சி விளையாட்டல்ல; இது வேறுபட்டது. பவர் வாக்கிங் என்பது ஒரு அவசியமான கட்டுப்பாட்டை உள்ளடக்கியது, ஓடுவதற்கான உடலின் இயற்கையான விருப்பத்தின் மறுசீரமைப்பு. இது ஓடுவது போல் தெரியவில்லை என்றாலும், ஓடுவதற்கு அல்லது ஜாகிங் செய்வதற்கு எவ்வளவு ஆற்றல், கவனம் மற்றும் சக்தி தேவையோ, இதை செய்வதற்கு அதைவிட அதிகம் தேவை. ஆனால் இது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பயிற்சி.
கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சக்தி - அதுதான் முக்கியம். பவர் வாக்கிங் போன்ற வேதாகம மனத்தாழ்மை பெரும்பாலும் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மை, அது இல்லை. தாழ்மை என்பது நம் பலங்களையும் திறன்களையும் குறைக்கவில்லை; மாறாக, ஒரு அதிகாலை பவர் வாக்கிங் செய்பவரை அவருடைய மனது எப்படி கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் என்று அனைத்தையும் கட்டுப்படுத்துகிறதோ, அதைப் போலவே மனத்தாழ்மை நம்மை கட்டுப்படுத்துகிறது.
“மனத்தாழ்மையாய் நட” என்ற மீகாவின் வார்த்தைகள் தேவனை மீறிப்போகும் நம்முடைய விருப்பத்தை கட்டுப்படுத்துகிறது. அவர் “நியாயஞ்செய்து இரக்கத்தை சிநேகி” என்று கூறுகிறார் (6:8). அத்தோடு ஏதாவது செய்ய வேண்டும், அதையும் விரைவாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டுவரக்கூடும். நம் உலகில் அன்றாட அநீதிகள் மிக அதிகமாக இருப்பதால் அது நியாயமானது. ஆனால் நாம் தேவனால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும். பூமியில் அவருடைய ராஜ்யத்தின் விடியலில் அவருடைய விருப்பத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதே நம்முடைய குறிக்கோள்.

அவளால் இயன்றதைச் செய்தாள்
கப் கேக்கின் பிளாஸ்டிக் கன்டைனரை கன்வேயர் பெல்ட்டின் மூலம் காசாளரை நோக்கி அனுப்பினாள். அதைத் தொடர்ந்து, பிறந்த நாள் அட்டை மற்றும் பல்வேறு சிப்ஸ் பாக்கெட்டுகள் வந்தன. அவளது தலைமுடி, குடுமியிலிருந்து சோர்வுற்ற முன்நெற்றியில் முடிசூடியது. அவளது குறுநடை போடும் குழந்தை கவனத்தை ஈர்த்தது. எழுத்தர் மொத்த தொகையை அறிவித்தார், அம்மாவின் முகம் சோர்ந்தது. “ஓ! நான் எதையாவது திருப்பி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இவை அனைத்தும் அவளுடைய கொண்டாடத்திற்கு தேவை,” என்று தன் குழந்தையைப் பார்த்து வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள்.
வரிசையில் அவள் பின்னால் நின்று, மற்றொரு வாடிக்கையாளர் இந்த தாயின் வலியை உணர்ந்தார். பெத்தானியா மரியாளுக்கு இயேசு சொன்ன வார்த்தைகளில் இந்த காட்சி நன்கு தெரியும்: “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” (மாற்கு 14:8). அவரது இறப்பு மற்றும் அடக்கத்திற்கு முன்பாக விலையுயர்ந்த தைலத்தால் அவரை அபிஷேகம் செய்த பிறகு, மரியாள் சீஷர்களால் கேலி செய்யப்பட்டார். அவள் செய்ததை பாராட்டியதின் மூலம் இயேசு தமது சீஷர்களைத் திருத்தினார். அவர் “அவளால் முடிந்த அனைத்தையும் செய்தாள்” என்று கூறவில்லை மாறாக, “அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” என்று கூறினார். வாசனை திரவியத்தின் பகட்டான செலவு அவருடைய நோக்கம் அல்ல; மரியாளின் அன்பை செயலில் முதலீடு செய்ததே முக்கியமானது. இயேசுவுடனான உறவு அதற்கான அர்த்தத்தை அளிக்கிறது.
அந்தத் தருணத்தில், அந்த தாய் மறுப்பு தெரிவிப்பதற்கு முன்பு, இரண்டாவது வாடிக்கையாளர் முன்னோக்கி சாய்ந்து தனது கிரெடிட் கார்டின் மூலம் பொருட்களை வாங்குவதற்கான அனைத்து பணத்தையும் செலுத்தினார். இது ஒரு பெரிய செலவு அல்ல; அந்த மாதத்தில் அவளின் செலவுபோக பணம் மீதமிருந்தது. ஆனால் அந்த தாய்க்கு அதுதான் எல்லாமே. அவளுடைய தேவையின் தருணத்தில் தூய அன்பின் சைகை ஊற்றப்பட்டது.

இருளை எதிர்கொள்ளுதல்
1960 களின் நடுப்பகுதியில், மனித ஆன்மாவில் இருளின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் இரண்டு பேர் பங்கேற்றனர். அவர்கள் தனித்தனி குகைகளுக்குள் நுழைந்தனர், அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உணவு மற்றும் தூக்க பழக்கத்தை கண்காணித்தனர். ஒருவர் முழு இருளில் 88 நாட்களும், மற்றொருவர் 126 நாட்களும் இருந்தனர். ஒவ்வொருவரும் எவ்வளவு காலம் முழு இருளில் இருக்கமுடியும் என்று தீர்மானித்திருந்த மாதங்களுக்குள்ளாகவே சோர்ந்து போனார்கள். ஒருவர் குறுகிய நேரம் தான் தூங்கினதாக நினைத்தார். ஆனால் உண்மையாக அவர் 30 மணிநேரம் தூங்கியுள்ளதைக் கண்டுபிடித்தார். இருள் நம்மை திசைதிருப்பும்.
தேவனின் மக்கள் தனித்துவிடப்பட்ட இருளில் தங்களைக் கண்டார்கள். என்ன நடக்கும் என்று தெரியாமல் அவர்கள் காத்திருந்தனர். ஏசாயா தீர்க்கதரிசி இருளை அவர்களின் திசைதிருப்பலுக்கான ஓர் உருவகமாகவும், தேவனின் தீர்ப்பைப் பற்றி பேசுவதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்தினார் (ஏசாயா 8:22). முன்னதாக, எகிப்தியர்களை இருள் வாதையாக சந்தித்தது (யாத்திராகமம் 10:21-29). இப்போது இஸ்ரவேல் இருளில் மூழ்கியது.
ஆனால் ஒரு ஒளி வரும். “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசாயா 9:2). அடக்குமுறை உடைக்கப்படும்; திசைதிருப்பல் முடிவுக்கு வரும். எல்லாவற்றையும் மாற்றி ஒரு புதிய நாளைக் கொண்டுவரவும் - மன்னிப்பு மற்றும் சுதந்திரத்தின் நாளைக் கொண்டுவரவும் ஒரு பாலகன் பிறப்பார் (வச.6).
இயேசு வந்தார்! உலகின் இருள் திசைதிருப்பக்கூடியதாக இருந்தாலும், கிறிஸ்துவில் காணப்படும் மன்னிப்பு, சுதந்திரம் மற்றும் ஒளியின் ஆறுதலை நாம் பூரணமாக அனுபவிக்கலாம்.

அன்பால் தொடரப்பட்டது
“இரவும் பகலும் நான் அவரை விட்டு ஓடினேன்” என்னும் வரிகள் ஆங்கிலக் கவிஞர் பிரான்சிஸ் தாம்சனின் “தி ஹவுண்ட் ஆஃப் ஹெவன்” என்ற புகழ்பெற்ற கவிதையின் துவக்க வரிகள். தேவனிடமிருந்து மறைக்க அல்லது ஓட முயற்சித்தபோதிலும், இயேசுவின் தொடர்ச்சியான தேடலை தாம்சன் விவரிக்கிறார். “அவர் என்னைத் தான் தேடுகிறார்!" என்று கவிஞர் முடிக்கிறார்.
தேவனின் தேடிவரும் அன்பே யோனா புத்தகத்தின் மையக் கருப்பொருள். நினிவே மக்களுக்கு (இஸ்ரவேல் ஜனங்களின் மோசமான எதிரிகள்) தேவனிடம் திரும்ப வேண்டிய அவசியம் குறித்து சொல்லும்படியான ஒரு பணியை தீர்க்கதரிசி பெற்றார். ஆனால் அதற்கு பதிலாக “யோனா கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி” (யோனா 1:3), நினிவேயின் எதிர்திசையில் பயணிக்கும் ஒரு கப்பலில் பயணம் செய்கிறார். ஆனால் கப்பல் பெருங்காற்றில் சிக்கியது. கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக, பெரிய மீனினால் விழுங்கப்படுவதற்காக, யோனா கடலில் வீசப்பட்டான் (1:15-17).
தேவனிடமிருந்து ஓடுவதற்கு பல முயற்சிகள் எடுத்தபோதிலும், தேவன் அவனை பின்தொடர்ந்தார் என்று யோனா தனது அழகான கவிதையில் விவரிக்கிறார். மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட யோனாவுக்கு மீட்பு அவசியப்படும்போது, அவன் ஜெபத்தில் தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய அன்பை நோக்கி திரும்புகிறார் (2:2,8). தேவன் யோனாவுக்கு மட்டுமல்லாது அவனுடைய அசீரிய எதிரிகளுக்கும் மீட்பை கட்டளையிட்டார் (3:10).
இரண்டு கவிதைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, நாம் தேவனிடமிருந்து ஓட முயற்சிக்கும் பல பருவங்கள் நம் வாழ்வில் இருக்கலாம். எனினும் இயேசு நம்மை நேசிக்கிறார், அவருடனான மீட்டெடுக்கப்பட்ட உறவுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறார் (1 யோவான் 1:9).
