
மரண மண்டலம்
2019 ஆம் ஆண்டில், ஒரு மலை ஏறுபவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்திலிருந்து தனது கடைசி சூரிய உதயத்தைக் கண்டார். அவர் ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். ஆனால் உயரமான இடம் அவரது இதயத்தை கசக்கியது. மேலும் அவர் மலையேற்றத்தில் இறந்தார். ஒரு மருத்துவ நிபுணர், மலை ஏறுபவர்கள் சிகரத்தின் உச்சத்தை தங்களுடைய பயணத்தின் முடிவாக எண்ணவேண்டாம் என எச்சரிக்கிறார். “அவர்கள் மரண மண்டலத்தில் இருக்கிறார்கள்” என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் விரைவாக புற்பபட்டு கீழே வர வேண்டும்.
தாவீது தனது ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். அவர் சிங்கங்களையும் கரடிகளையும் கொன்றார். கோலியாத்தை கொன்றார். சவுலின் ஈட்டியைத் எடுத்து இராணுவத்தைத் தொடர்ந்தார். பெலிஸ்தர்களையும் அம்மோனியர்களையும் வென்று மலையின் உச்சத்தை அடைந்தார்.
ஆனால் தாவீது, தான் மரண மண்டலத்தில் இருப்பதை மறந்துவிட்டார். அவரது வெற்றியின் உச்சத்தில், “தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்” (2 சாமுவேல் 8: 6). அவர் விபச்சாரம் மற்றும் கொலை போன்ற செய்கைகளிலும் ஈடுபட்டார். அது அவரது ஆரம்ப தவறு? அவர் மலை உச்சியில் நீடித்தார். அவருடைய இராணுவம் புதிய சவால்களுக்கு புறப்பட்டபோது, அவர் “எருசலேமில் இருந்துவிட்டான்” (11:1). தாவீது ஒருமுறை கோலியாத்தை எதிர்த்துப் போராட முன்வந்தார்; இப்போது அவர் தனது வெற்றிகளின் பாராட்டுகளில் நிதானமாக இருந்தார்.
தேவன் உட்பட எல்லோரும் நீங்கள் சிறப்புடையவர் என்று கூறும்போது நிதானமாக தலைக்கணம் இல்லாமல் இருப்பது கடினம் (7:11-16). ஆனால் நாம் அப்படி தான் இருக்க வேண்டும். நாம் சில வெற்றிகளைப் பெறும்போது, நமது சாதனையை சரியான முறையில் கொண்டாடலாம், வாழ்த்துக்களை ஏற்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து பயணம் செய்யவேண்டும். நாம் மரண மண்டலத்தில் இருக்கிறோம். மலையிலிருந்து கீழே இறங்கவேண்டும். உங்கள் இருதயத்தையும் உங்கள் நடைகளையும் பாதுகாக்கும்படி தேவனிடம் கேட்டு, பள்ளத்தாக்கில் உள்ள மற்றவர்களுக்கு பணிவுடன் சேவை செய்யுங்கள்.

வானவில் ஒளிவட்டம்
மலை உச்சியல் தாழ்வான மேகங்களுக்கு பின்பாக ஒளிருகின்ற காட்சியை அட்ரியன் பார்வையிட்டார். கீழே பார்த்தபோது, அவரது நிழலை மட்டுமல்ல, சிதயிருந்த வண்ணப் பட்டி (ப்ரோக்கன் ஸ்பெக்டர்) என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான காட்சியையும் பார்த்தார். இந்த நிகழ்வு ஒரு வானவில் ஒளிவட்டத்தை ஒத்திருந்தது. இது அந்த நபரின் நிழலை சுற்றி வளைந்திருந்தது. சூரிய ஒளி கீழே உள்ள மேகங்களை பிரதிபலிக்கும் போது இது நிகழ்கிறது. அட்ரியன் அதை ஒரு “மந்திர” தருணம் என்று கூறுகிறார். இது அவரை மிகவும் மகிழ்வித்தது.
முதல் வானவில்லை பார்த்த உணர்வு நோவாவுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்யலாம். அவரது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததை காட்டிலும், ஒளிவிலகலும் வெளிச்சமும் அதன் விளைவாக வரும் வண்ணங்களும் தேவனிடமிருந்து ஒரு வாக்குறுதியுடன் வந்தன. ஒரு பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, நோவாவுக்கும், பின்னர் வாழ்ந்த எல்லா “மாம்ச ஜீவன்களுக்கும்”, “இனி ஜலமானது பிரளயமாய்ப் (பெருகாதபடிக்கு) எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன் (ஆதியாகமம் 9:15) என்று தேவன் உடன்படிக்கை ஏற்படுத்துகிறார்.
நம் பூமி இன்னமும் வெள்ளம் மற்றும் பிற பயமுறுத்தும் சீதோஷ நிலை ஆகியவற்றை அனுபவிக்கிறது. அது துன்பகரமான இழப்பையும் அவ்வப்போது ஏற்படுத்துகிறது. ஆனால் வானவில் என்பது உலகளாவிய வெள்ளத்தால் பூமியை மீண்டும் தேவன் அழிக்கமாட்டார் என்பதற்கான வாக்குறுதியாகும். அவருடைய விசுவாசத்தின் இந்த வாக்குறுதி, இந்த பூமியில் தனிப்பட்ட இழப்புகள் மற்றும் உடல் ரீதியான மரணங்களை நாம் தனித்தனியாக அனுபவிப்போம் என்றாலும், நோய், இயற்கை பேரழிவு, தவறு, அல்லது வயது முதிர்வால் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் முழுவதும் தேவன் தம்முடைய அன்பையும் முன்னிலையையும் கொண்டு நம்மை மேம்படுத்துகிறார். சூரிய ஒளியானது நீரின் மூலம் வண்ணங்களை பிரதிபலிக்கிறது, அவருடைய உருவத்தைத் தாங்கி, அவருடைய மகிமையை மற்றவர்களுக்கு பிரதிபலிப்பவர்களால் பூமியை நிரப்ப அவர் உண்மையுள்ளவர் என்பதை நினைவூட்டுகிறது.

மீண்டும் செழிக்க
போதுமான சூரிய ஒளி மற்றும் தண்ணீர் இருந்தால், கலிபோர்னியாவின் காட்டுப்பூக்கள் விளையும் பகுதிகளான ஆன்டெலோப் பள்ளத்தாக்கு மற்றும் ஃபிகியூரோவா மலை போன்றவை செழிப்பாக இருக்கும். ஆனால் வறட்சி ஏற்பட்டால் என்ன ஆகும்? விஞ்ஞானிகள் சில காட்டுப்பூக்கள் மண்ணின் வழியாக முளைத்து பூக்க அனுமதிக்காமல், அவற்றின் விதைகளை பெருமளவில் நிலத்தடியில் சேமித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். வறட்சிக்குப் பிறகு, தாவரங்கள் தாங்கள் சேமித்த விதைகளைப் பயன்படுத்தி மீண்டும் செழிக்கத் தொடங்குகின்றன.
பண்டைய இஸ்ரவேலர் கடுமையான நிலைமைகளை மீறி எகிப்து தேசத்தில் செழித்து வளர்ந்தனர். அடிமைகளாயிருந்த இவர்களை வயல்களில் வேலை செய்யவும் செங்கற்களை தயாரிக்கவும் எகிப்தியர்கள் கட்டாயப்படுத்தினர். இரக்கமற்ற இந்த எகிப்திய கண்காணிகள், பார்வோனுக்கு முழு நகரத்தையும் கட்டுவதற்கு அவர்களை கட்டாயப்படுத்தினர். எகிப்தின் மன்னர் சிசுக்கொலையை நடைமுறைப்படுத்தினான். ஆயினும், தேவன் அவர்களை பாதுகாத்ததால், “அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்” (யாத்திராகமம் 1:12). பல வேத அறிஞர்கள் இஸ்ரவேலின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மக்கள் தொகை எகிப்தில் இருந்த காலத்தில் இரண்டு மில்லியனாக (அல்லது அதற்கு மேற்பட்டதாக) இருந்தது என்று மதிப்பிடுகின்றனர்.
அப்போது தம் மக்களைப் பாதுகாத்த தேவன், இன்றும் நம்மை ஆதரிக்கிறார். எந்த சூழலிலும் அவர் நமக்கு உதவ முடியும். இன்னொரு கடினமான சூழ்நிலையை சகித்துக்கொள்வது பற்றி நாம் ஒருவேளை கவலைப்படலாம். ஆனால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டு புல்லுக்கு” தேவன் கரிசனையுடன் இருந்தால் நம் தேவைகளை அவர் கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியும் என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (மத்தேயு 6:30).

துணிச்சலான அன்பு
நான்கு சிற்றாலய போதகர்கள் கதாநாயகர்களாய் அறியப்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது, 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி இரவு, எஸ்.எஸ். டோர்செஸ்டர் என்னும் அவர்களின் போக்குவரத்துக் கப்பல், கிரீன்லாந்து கடற்கரையில் தாக்கப்பட்டது. இந்த நான்கு பேரும் பீதியடைந்த நூற்றுக்கணக்கான வீரர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். கப்பல் மூழ்கிக்கொண்டிருக்க, காயமடைந்த நபர்கள் நெரிசலான உயிர் காக்கும் படகுகளில் குதித்தனர். இந்த நான்கு போதகர்களும் அமைதியாய் “தைரியத்தைப் பிரசங்கித்து" குழப்பத்தை அமைதிப்படுத்தினர் என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறுகிறார்.
உயிர்காக்கும் லைஃப் ஜாக்கெட்டுகள் தீர்ந்துபோனபோது, இவர்கள் நால்வரும் தங்களுடையதை கழற்றி, பயந்துபோன ஒரு இளைஞனுக்குக் கொடுத்தனர். மற்றவர்கள் வாழும்படி அவர்கள் கப்பலுடன் மூழ்க தீர்மானித்தார்கள். அதில் தப்பிப்பிழைத்த ஒருவர், “இது நான் பார்த்த மிகச் சிறந்த விஷயம், அல்லது பரலோகத்தின் இந்தப் பக்கத்தைப் பார்க்க வாஞ்சிக்கிறேன்” என்று கூறுகிறார்.
கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் தங்கள் கரங்களைக் கோர்த்து, இந்த நான்கு போதகர்களும் ஒன்றாக ஜெபித்து, அவர்களுடன் அழிந்துபோகிறவர்களுக்கு ஊக்கத்தை அளித்தனர்.
துணிச்சல் அவர்களின் வீரமிகு சாதனையைக் குறிக்கிறது. இருப்பினும், அன்பானது நான்குபேர் வழங்கிய இந்த பரிசை வரையறுக்கிறது. கொரிந்துவில் புயலால் தாக்கப்பட்ட தேவாலயத்தில் உள்ளவர்கள் உட்பட அனைத்து விசுவாசிகளிடமும் இதுபோன்ற அன்பை பவுல் வலியுறுத்தினார். மோதல், ஊழல் மற்றும் பாவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவுல் “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தினார் (1கொரிந்தியர 16:13). பின்னர் அவர், “உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.” (வச.14) என்றும் வலியுறுத்தினார்.
இயேசுவில் உள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும், குறிப்பாக ஒரு நெருக்கடியின் போது இது ஒரு உத்தமமானக் கட்டளை. கிறிஸ்துவைப் பிரதிபலிப்பதும் மற்றவர்களுக்கு அவருடைய அன்பைக் கொடுப்பதுமே வாழ்க்கையில் பிரச்சனைகள் அச்சுறுத்தும் போது நம்முடைய துணிச்சலான பதிலாய் இருக்கட்டும்.
