2019 ஆம் ஆண்டில், ஒரு மலை ஏறுபவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்திலிருந்து தனது கடைசி சூரிய உதயத்தைக் கண்டார். அவர் ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். ஆனால் உயரமான இடம் அவரது இதயத்தை கசக்கியது. மேலும் அவர் மலையேற்றத்தில் இறந்தார். ஒரு மருத்துவ நிபுணர், மலை ஏறுபவர்கள் சிகரத்தின் உச்சத்தை தங்களுடைய பயணத்தின் முடிவாக எண்ணவேண்டாம் என எச்சரிக்கிறார். “அவர்கள் மரண மண்டலத்தில் இருக்கிறார்கள்” என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் விரைவாக புற்பபட்டு கீழே வர வேண்டும்.

தாவீது தனது ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். அவர் சிங்கங்களையும் கரடிகளையும் கொன்றார். கோலியாத்தை கொன்றார். சவுலின் ஈட்டியைத் எடுத்து இராணுவத்தைத் தொடர்ந்தார். பெலிஸ்தர்களையும் அம்மோனியர்களையும் வென்று மலையின் உச்சத்தை அடைந்தார்.

ஆனால் தாவீது, தான் மரண மண்டலத்தில் இருப்பதை மறந்துவிட்டார். அவரது வெற்றியின் உச்சத்தில், “தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்” (2 சாமுவேல் 8: 6). அவர் விபச்சாரம் மற்றும் கொலை போன்ற செய்கைகளிலும் ஈடுபட்டார். அது அவரது ஆரம்ப தவறு? அவர் மலை உச்சியில் நீடித்தார். அவருடைய இராணுவம் புதிய சவால்களுக்கு புறப்பட்டபோது, அவர் “எருசலேமில் இருந்துவிட்டான்” (11:1). தாவீது ஒருமுறை கோலியாத்தை எதிர்த்துப் போராட முன்வந்தார்; இப்போது அவர் தனது வெற்றிகளின் பாராட்டுகளில் நிதானமாக இருந்தார்.

தேவன் உட்பட எல்லோரும் நீங்கள் சிறப்புடையவர் என்று கூறும்போது நிதானமாக தலைக்கணம் இல்லாமல் இருப்பது கடினம் (7:11-16). ஆனால் நாம் அப்படி தான் இருக்க வேண்டும். நாம் சில வெற்றிகளைப் பெறும்போது, நமது சாதனையை சரியான முறையில் கொண்டாடலாம், வாழ்த்துக்களை ஏற்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து பயணம் செய்யவேண்டும். நாம் மரண மண்டலத்தில் இருக்கிறோம். மலையிலிருந்து கீழே இறங்கவேண்டும். உங்கள் இருதயத்தையும் உங்கள் நடைகளையும் பாதுகாக்கும்படி தேவனிடம் கேட்டு, பள்ளத்தாக்கில் உள்ள மற்றவர்களுக்கு பணிவுடன் சேவை செய்யுங்கள்.