
ஜெபிக்கும் மனிதன்
என்னுடைய தாத்தா விசுவாசத்திலும் ஜெபத்திலும் உறுதியானவர் என்பதை என்னுடைய குடும்பத்தினர் நினைவுகூறுகின்றனர். ஆனால் அது எப்பொழுதும் அப்படி அல்ல. “நாம் சாப்பிடுவதற்கு முன் தேவனுக்கு நன்றி கூறப்போகிறோம்” என்று தன்னுடைய தகப்பனார் முதல்முறையாக தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிவித்ததை என் அத்தை நினைவுகூர்ந்தார். அவருடைய முதல் ஜெபம் சொற்பொழிவாற்றலுக்கு அப்பாற்பட்டிருந்தது. ஆனால் தாத்தா அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த ஜெபத்தைத் தொடர்ந்தார். அந்த நாள் முழுவதும் அடிக்கடி ஜெபித்துக்கொண்டிருப்பார். அவர் இறந்தப்பொழுது என்னுடைய கணவர் என் பாட்டிக்கு ஒரு ஜெபிக்கும் கரங்களின் அருங்காட்சிப் பொருளை கொடுத்து “தாத்தா ஒரு ஜெப வீரன்”என்று சொன்னார். தேவனைப் பின்பற்றவும் அவரோடு அனுதினமும் பேச அவர் எடுத்த முடிவு தாத்தாவை கிறிஸ்துவின் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாய் மாற்றியது.
ஜெபத்தைக் குறித்து வேதாகமத்தில் அதிகமாக சொல்லப்படுகிறது. மத்தேயு 6:9-13ல் இயேசு தம்மை பினபற்றுகிறவர்களுக்கு ஒரு ஜெபத்தின் மாதிரியைக் கொடுத்து, தேவன், அவர் யாராயிருக்கிறாரோ அவரை மனமார்ந்த துதியோடு நெருங்கக் கற்றுக்கொடுத்தார். நம்முடைய விண்ணப்பங்களை தேவனிடத்தில் கொண்டு செல்லும்போது, அவர் நமக்கு “அன்றன்றுள்ள ஆகாரத்தை” தருவார் என்று விசுவாசிக்கிறோம் (வச. 11). நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை செய்யும்போது, அவரிடத்தில் மன்னிப்பையும், சோதனைகளைத் தவிர்க்க உதவியையும் கேட்கிறோம் (வச. 12-13).
ஆனால் கர்த்தர் கற்பித்த ஜெபம் மட்டும் அல்லாமல் (பரமண்டல ஜெபம்), “எந்தச் சமயத்திலும் சகலவித வேண்டுதலோடும்” (எபேசியர் 6:18) நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஜெபம் மிகவும் முக்கியமானது. மட்டுமல்லாமல் ஜெபம், நாம் தேவனோடு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வாய்ப்பளிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:17-18).
தேவனிடம் பேச வேண்டும் என்ற வாஞ்சையினால் தாழ்மையுள்ள இருதயத்தோடு நெருங்கும்போது, அவரை இன்னும் அதிகமாய் நேசிக்கவும், அறிந்துக்கொள்ளவும் உதவி செய்வார்.

வெறுமையான கரங்கள்
ராபர்ட், தான் மதிய உணவு கூட்டத்திற்கு வந்தபோது, அவர் தனது பணப்பையை கொண்டுவர மறந்துவிட்டதை உணர்ந்தபோது சங்கடப்பட்டார். அவர் மதிய உணவு சாப்பிடத்தான் வேண்டுமா அல்லது ஏதாவது குடித்தால் மட்டும் போதுமா என்று யோசிக்கும் அளவிற்கு அது அவருக்குத் தொல்லையாக இருந்தது. அவருடைய நண்பன் சொன்ன நம்பக்கூடிய வார்த்தைகளால் தனது எதிர்ப்பை விட்டுவிட்டார். அவரும் அவருடைய நண்பரும் உணவை ரசித்து உண்டனர். பிறகு தன்னுடைய நண்பன் உணவுக்குரிய கட்டணத்தை மகிழ்ச்சியுடன் செலுத்தினார்.
இப்படிப்பட்ட ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையோ அல்லது உங்களை சங்கடப்படுத்தின வேறு ஏதாவது சூழ்நிலையோடு உங்களை அடையாளப்படுத்தலாம். நம்முடைய வழியில் நாம் பணம் செலுத்துவது இயல்பானது. ஆனால் நமக்கு கிருபையாய் கொடுக்கப்படுபவைகளை நாம் தாழ்மையாய் பெற்றுக்கொள்ள அநேக சந்தர்ப்பங்கள் உண்டு.
லூக்கா 15:17-24ல் இளைய மகன் தன் மனதில் இருந்ததைப் போல ஏதாவது திருப்பி செலுத்தும் எண்ணம் இருக்கலாம் - அவன் தன் மனதில் தன் தகப்பனாரிடம் என்ன சொல்லப் போகிறான் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்ததைப் போல. “இனிமேல் உம்முடைய குமாரன் என சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்.” (வச. 19). கூலிக்காரன்? அவனுடைய தகப்பனிடத்தில் அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்காது. அவருடைய பார்வையில், மீண்டுமாய் வீட்டிற்கு வந்த, அதிகமாக நேசிக்கப்பட்ட மகன் அவன். ஆதலால் தான், அவன் தன் தந்தையின் அரவணைப்பையும், அன்பான முத்தங்களையும் (வச. 20) பெற்றுக்கொண்டான். என்ன ஒரு மகத்தான நற்செய்தி சித்திரம். இந்த நிகழ்ச்சி, தன்னிடம் வெறுங்கையுடன் வரும் பிள்ளைகளை திறந்த கையுடன் வரவேற்கும் அன்புள்ள பிதாவை இயேசு தம்முடைய மரணத்தின் மூலம் வெளிப்படுத்துவதை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒரு பாடலாசிரியர் இதை “என் கையில் நான் ஒன்றும் கொண்டுவந்ததில்லை, உம்முடைய சிலுவையைப் பற்றிக்கொள்ளுகிறேன்” என்ற வரிகள் மூலம் வெளிப்படுத்தினார்.

வேதாகமத்தின் மாபெரும் கதை
கோலின், தான் வாங்கின கறைபடிந்த கண்ணாடித்துண்டுகளின் பெட்டியைத் திறந்தபோது, அதில், தான் ஒரு செயல்திட்டத்திற்காக ஆர்டர் செய்த கண்ணாடித் துண்டுகளுக்குப் பதிலாக முழு ஜன்னல் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அந்த ஜன்னல்களின் தோற்றத்தை ஆராய்ந்தபோது, இரண்டாம் உலகப்போரின் போது குண்டுவீச்சிலிருந்து அவைகளைப் பாதுகாக்க ஒரு தேவாலயத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்று அறிந்துக்கொண்டார். அந்த ஜன்னல்களின் வேலைப்பாடுகளையும் அந்தத் “துண்டுகள்” எவ்வாறு ஒரு அழகான சித்திரமாக்கப்பட்டிருந்ததையும் கண்டு ஆச்சரியப்பட்டார்.
நான் நேர்மையானவனாக இருந்தால், அநேக நேரங்களில் நான் வேதாகமத்தில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்கும்போது, அதாவது வம்சவரலாற்றுப் பட்டியல்கள் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள், அவைகள் இவ்வளவு பெரிய வேதாகம சித்திரத்தில் எவ்வாறு பொருந்தும் என்பதை நான் உடனடியாக அறிந்துகொள்ளவில்லை. அதேபோன்று தான் ஆதியாகமம் 11 – சேம், சேலா, ஏபேர், நாகோர் மற்றும் தேராகு போன்ற அறிமுகமில்லாதவர்களின் பெயர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு அதிகாரம் (வச. 10-32). நான் அவ்வப்போது இப்படிப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து நன்கு அறிமுகமான வேதப் பகுதிகளை, எனக்கு எளிதில் விளங்கக்கூடிய வேதப்பகுதிகளை வாசிக்க ஆசைப்படுகிறேன்.
“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டும் அவைகள் பிரயோஜனமுள்ளவைகளாய்” (2 தீமோத்தேயு 3:15) இருப்பதால், ஒரு சிறிய துண்டு எப்படி ஒரு முழுமையானதில் பொருந்த முடியும் என்பதை புரிந்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கண்களைத் திறப்பார். உதாரணமாக, சேலா, எவ்வாறு தாவீதின் மூதாதையரான ஆபிராகாமுக்கு, முக்கியமாக இயேசுவுக்கு தொடர்புடையவர் என்பதை நன்கு புரிந்துக்கொள்ள நமக்கு உதவி செய்வார் (மத் 1:2,6,16). சிறிய பகுதிகள் கூட வேதாகமம் முழுவதிலும் உள்ள தேவனுடைய பணிகளை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான சாளரம் என்னும் பொக்கிஷத்தினால் நம்மை ஆச்சரியப்படுத்தி மகிழ்விக்கிறார்.

நேரத்தை சரி செய்யவும்
எங்கள் வீட்டின் உட்புறத்திற்கு ஒரு சுத்தமான புதிய தோற்றத்தைக் கொடுக்கவேண்டிய நேரம் வந்தது. வண்ணம் பூசுவதற்கு நான் ஒரு அறையைத் தயார் செய்துக்கொண்டிருந்தபோது, நம்முடைய மாநில அரசாங்கம் கோவிட்-19 தொற்று நோய்க் காரணமாக பல வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் நான் கடைக்கு விரைந்துச் சென்று எனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டேன். சரியான பொருட்கள் இல்லாவிட்டால் மறுவடிவமைக்க முடியாது.
பவுல், எபேசியர் 4ம் அதிகாரத்தை எழுதும்போது ஒரு மறுவடிமைக்கும் திட்டம் அவருக்கு மனதில் இருந்தது. ஆனால் அவர் எந்த மாற்றங்களைக் குறித்துப் பேசினாரோ, அவை மேலோட்டமான மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தது. இயேசுவை இரட்சகராக நம்புவது நம்மை புது சிருஷ்டியாக மாற்றினாலும், பரிசுத்த ஆவியானவர் நம்மில் சில காரியங்களைத் தொடர்ந்து செய்யவேண்டியிருக்கிறது. நம்மை “மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும்” (எபேசியர் 4:24) நடத்த அவருக்கு சமயமும் செயல்பாடும் தேவைப்படுகிறது.
பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நமக்குள் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தி நம்முடைய சொல்லிலும் செயலிலும் இயேசுவை பிரதிபலிக்கச் செய்கிறது. பொய்க்கு பதிலாக “சத்தியத்தை” (வச. 25) பேச உதவி செய்கிறார். கோபத்தினால் நாம் செய்யும் பாவங்களைத் தவிர்க்க உதவி செய்கிறார் (வச. 26). “மற்றவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி பேச” அவர் நம்மை வழிநடத்துகிறார் (வச. 29). பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படும் இப்படிப்பட்ட செயல்கள் நம்முடைய உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதி. இவை கருணை, இரக்கம் மற்றும் மன்னிப்பு (வச. 32) போன்றவைகளில் வெளிப்படும். இயேசுவைப்போல நடக்கவும், நம்முடைய பரலோகத் தகப்பனின் இருதயத்தைப் பிரதிபலிக்கவும், ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார் (வச. 25; 5:1).
