கோலின், தான் வாங்கின கறைபடிந்த கண்ணாடித்துண்டுகளின் பெட்டியைத் திறந்தபோது, அதில், தான் ஒரு செயல்திட்டத்திற்காக ஆர்டர் செய்த கண்ணாடித் துண்டுகளுக்குப் பதிலாக முழு ஜன்னல் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அந்த ஜன்னல்களின் தோற்றத்தை ஆராய்ந்தபோது, இரண்டாம் உலகப்போரின் போது குண்டுவீச்சிலிருந்து அவைகளைப் பாதுகாக்க ஒரு தேவாலயத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்று அறிந்துக்கொண்டார். அந்த ஜன்னல்களின் வேலைப்பாடுகளையும் அந்தத் “துண்டுகள்” எவ்வாறு ஒரு அழகான சித்திரமாக்கப்பட்டிருந்ததையும் கண்டு ஆச்சரியப்பட்டார். 

நான் நேர்மையானவனாக இருந்தால், அநேக நேரங்களில் நான் வேதாகமத்தில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்கும்போது, அதாவது வம்சவரலாற்றுப் பட்டியல்கள் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள், அவைகள் இவ்வளவு பெரிய வேதாகம சித்திரத்தில் எவ்வாறு பொருந்தும் என்பதை நான் உடனடியாக அறிந்துகொள்ளவில்லை. அதேபோன்று தான் ஆதியாகமம் 11 – சேம், சேலா, ஏபேர், நாகோர் மற்றும் தேராகு போன்ற அறிமுகமில்லாதவர்களின் பெயர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு அதிகாரம் (வச. 10-32). நான் அவ்வப்போது இப்படிப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து நன்கு அறிமுகமான வேதப் பகுதிகளை, எனக்கு எளிதில் விளங்கக்கூடிய வேதப்பகுதிகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். 

“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டும் அவைகள் பிரயோஜனமுள்ளவைகளாய்” (2 தீமோத்தேயு 3:15) இருப்பதால், ஒரு சிறிய துண்டு எப்படி ஒரு முழுமையானதில் பொருந்த முடியும் என்பதை புரிந்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கண்களைத் திறப்பார். உதாரணமாக, சேலா, எவ்வாறு தாவீதின் மூதாதையரான ஆபிராகாமுக்கு, முக்கியமாக இயேசுவுக்கு தொடர்புடையவர் என்பதை நன்கு புரிந்துக்கொள்ள நமக்கு உதவி செய்வார் (மத் 1:2,6,16). சிறிய பகுதிகள் கூட வேதாகமம் முழுவதிலும் உள்ள தேவனுடைய பணிகளை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான சாளரம் என்னும் பொக்கிஷத்தினால் நம்மை ஆச்சரியப்படுத்தி மகிழ்விக்கிறார்.