ராபர்ட், தான் மதிய உணவு கூட்டத்திற்கு வந்தபோது, அவர் தனது பணப்பையை கொண்டுவர மறந்துவிட்டதை உணர்ந்தபோது சங்கடப்பட்டார். அவர் மதிய உணவு சாப்பிடத்தான் வேண்டுமா அல்லது ஏதாவது குடித்தால் மட்டும் போதுமா என்று யோசிக்கும் அளவிற்கு அது அவருக்குத் தொல்லையாக இருந்தது. அவருடைய நண்பன் சொன்ன நம்பக்கூடிய வார்த்தைகளால் தனது எதிர்ப்பை விட்டுவிட்டார். அவரும் அவருடைய நண்பரும் உணவை ரசித்து உண்டனர். பிறகு தன்னுடைய நண்பன் உணவுக்குரிய கட்டணத்தை மகிழ்ச்சியுடன் செலுத்தினார்.

இப்படிப்பட்ட ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையோ அல்லது உங்களை சங்கடப்படுத்தின வேறு ஏதாவது சூழ்நிலையோடு உங்களை அடையாளப்படுத்தலாம். நம்முடைய வழியில் நாம் பணம் செலுத்துவது இயல்பானது. ஆனால் நமக்கு கிருபையாய் கொடுக்கப்படுபவைகளை நாம் தாழ்மையாய் பெற்றுக்கொள்ள அநேக சந்தர்ப்பங்கள் உண்டு.

லூக்கா 15:17-24ல் இளைய மகன் தன் மனதில் இருந்ததைப் போல ஏதாவது திருப்பி செலுத்தும் எண்ணம் இருக்கலாம் – அவன் தன் மனதில் தன் தகப்பனாரிடம் என்ன சொல்லப் போகிறான் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்ததைப் போல. “இனிமேல் உம்முடைய குமாரன் என சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்.” (வச. 19). கூலிக்காரன்? அவனுடைய தகப்பனிடத்தில் அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்காது. அவருடைய பார்வையில், மீண்டுமாய் வீட்டிற்கு வந்த, அதிகமாக நேசிக்கப்பட்ட மகன் அவன். ஆதலால் தான், அவன் தன் தந்தையின் அரவணைப்பையும், அன்பான முத்தங்களையும் (வச. 20) பெற்றுக்கொண்டான். என்ன ஒரு மகத்தான நற்செய்தி சித்திரம். இந்த நிகழ்ச்சி, தன்னிடம் வெறுங்கையுடன் வரும் பிள்ளைகளை திறந்த கையுடன் வரவேற்கும் அன்புள்ள பிதாவை இயேசு தம்முடைய மரணத்தின் மூலம் வெளிப்படுத்துவதை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒரு பாடலாசிரியர் இதை “என் கையில் நான் ஒன்றும் கொண்டுவந்ததில்லை, உம்முடைய சிலுவையைப் பற்றிக்கொள்ளுகிறேன்” என்ற வரிகள் மூலம் வெளிப்படுத்தினார்.