வகை  |  odb

குடும்பத்தின் அங்கத்தினர்

ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி நாடகம், இதில் ஒரு கற்பனை குடும்பம் 1900 களின் முற்பகுதியில் இருந்த சமூக கட்டமைப்பின் வழியே பயணிப்பதை பற்றி இருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரம், ஆரம்பத்தில் அந்த குடும்பத்தின் பணியாளராய் வேலை செய்து, பின்னர் எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் அதே குடும்பத்தின் இளையவளாக இருந்த மகளை திருமணம் செய்தார். குறிப்பிட்ட காலம் துரத்திவிடப்பட்ட அந்த தம்பதியினர், அவர்களுடைய குடும்பத்திற்கும், வீட்டுக்கும் திரும்புகின்றனர், இப்போது அந்த புது மாப்பிளை அந்த குடும்பத்தின் அங்கத்தினராக மாறுகிறார், ஒரு வேலைக்காரனாக அவருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும், சலுகைகளும் இப்போது குடும்பத்தின் அங்கத்தினராக அவருக்கு கிடைக்கிறது.

நாமும் கூட,"அந்நியரும் பரதேசிகளுமாய்" (எபேசியர் 2:19) முன்னர் இருந்தோம். மேலும் தேவனுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளுக்கு புறம்பாயிருந்தோம். ஆனால் இயேசுவால், அணைத்து விசுவாசிகளும், அவர்கள் யாராய் இருந்திருந்தாலும், தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு "தேவனுடைய வீட்டார்" (வ.19) என அழைக்கப்படுகிறார்கள்.

தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராக இருப்பது வியத்தகு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குகிறது. நமக்கு "தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது."(3:12) அதினால் தேவனோடு அளவில்லாத, தடையில்லாத தொடர்பை நாம் அனுபவிக்கிறோம். நாம், இன்னும் பெரிய குடும்பத்தின் அங்கத்தினராய் மாறுகிறோம், நம்மை தாங்கவும், உற்சாகப்படுத்தவும் இருக்கும் விசுவாச சமூகமே அது (2:19-22). தேவகுடும்பத்தின் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் உதவும் சலுகை உடையவர்களாய், தேவனுடைய அளவிட முடியா அன்பை மகத்தாய் பற்றிகொள்ளமுடியும் (3:18).

பயம் அல்லது சந்தேகம் நம்மை சுலபமாக அந்நியரை போல உணரவைக்கும், மேலும் தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாய் மாறுவதால் உண்டாகும் பலன்களை அனுபவிப்பதில் இருந்து முற்றிலுமாய் நம்மை விலக்கி போடும். ஆனால் தேவனுடைய இலவசமும், உதாரத்துவமுமான அன்பின் வெகுமதிகளின் உண்மை தன்மைக்கு செவிகொடுத்து, மீண்டும் ஒருமுறை அதை பற்றிக் கொள்ளலாம் (2:8-10). மேலும் அவருடையவர்களாய் இருப்பதினால் உண்டாகும் பிரமிப்பில் நாம் களிகூரலாம்.

கதவை தவிர்க்கவும்

அந்த எலியின் மூக்கை ஏதோ ஒன்று சுண்டி இழுத்தது. ஏதோ ஒன்று மிக ருசிகரமான உணவு அருகிலேயே இருந்தது. திடமாக அந்த மணம், பறவைகள் உண்ணும் ருசிகரமான விதைகள் நிறைந்த தீவனத்தொட்டிக்கு நேரே இட்டுச்சென்றது. அந்த எலி சங்கிலியின் வழியே கீழே இறங்கி தீவனத்தை நோக்கி வந்தது, கதவின் இடுக்கின் உள்ளே நுழைந்து இரவெல்லாம்  தின்று கொண்டே இருந்தது. காலையில்தான் தான் சிக்கியிருந்த ஆபத்தை உணர்ந்தது. இப்பொழுது பறவைகள் அந்த தீவனத்தொட்டியின் வழியே அதை கொத்த துவங்கின. ஆனால் விதைகளை தெவிட்ட தெவிட்ட அதிகம் தின்ற காரணத்தினால், அது பெருத்துப் போய் தப்பிக்க இயலாமல் மாட்டிக்கொண்டது.

கதவுகள் நம்மை மிகவும் அற்புதமான இடங்களுக்கு நேரே நடத்தும், அல்லது ஆபத்தான இடங்களுக்கும் நடத்தும். நீதிமொழிகள் 5ல், பாலியல் சோதனைகளை தவிர்க்கும்படியான சாலமோனின் அறிவுரைகளிலும், கதவு பிரதான அம்சமாய் இருக்கிறது. பாலியல் பாவம் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒன்றாய் இருப்பினும், அதைப் பின்தொடர்ந்தால், ஆபத்து காத்திருக்கிறது (5:3-6) என்று அவர் கூறுகிறார். அதைவிட்டு தூரமாய் தள்ளி இருப்பதே சிறந்தது; ஏனெனில், அந்த கதவின் வழியாக நீங்கள் நடந்தால், நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள், உங்களுடைய மரியாதையை இழந்து, உங்கள் செல்வமெல்லாம் அன்னியர்களால் பிடுங்கிக் கொள்ளப்படும் (வ.7-11) மாறாக, நம்முடைய வாழ்க்கை துணைகளோடு இன்பமாய் இருப்பதையே சாலமோன் அறிவுறுத்துகிறார் (வ.15-20). அவருடைய அறிவுரை இதற்காக மட்டுமல்லாமல் மற்ற பாவங்களுக்கும் பொருந்தும். பெருந்திண்டியின் சோதனையோ, அல்லது அதிகமாக செலவழிக்கும் சோதனையோ, அல்லது வேறு எதுவாயிருந்தாலும், நாம் சிக்கிக் கொள்ளக் கூடிய கதவை தவிர்ப்பதற்கு தேவன் நமக்கு உதவுவார்.

அந்த வீட்டின் எஜமான், தனது பறவைகளின் தீவனத் தொட்டியில் சிக்கிக்கொண்ட எலியை கண்டு, அதை தனது தோட்டத்தில் விடுவிக்கும் போது, அந்த எலி மிகுந்த சந்தோஷமாய் இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, தேவனுடைய கரமும் நாம் சிக்கிக்கொள்ளும் போது நம்மை விடுவிக்க ஆயத்தமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் முன்னராகவே, நாம் சிக்கிக்கொள்ளும் கதவை நாம் தவிர்க்க தேவனின் பெலத்தை கேட்டு பெற்றுக்கொள்வோம்.

தலைவனை பின்பற்று

வார்த்தைகளே இல்லை. வெறும் இசையும், அசைவும் தான். கோவிட் -19 பெருந்தொற்றின் மத்தியிலே 24 மணி நேர  ஜும்பா தொடர் பயிற்சியில் உலகமெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்தனர். அவர்கள் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பகுதிகள், மற்றும் பல இடங்களில் இருந்து அவர்களை, நடத்தின பயிற்சியாளர்களை ஊடக வாயிலில் பின்பற்றினார்கள். இந்த வேறுபட்ட தனிநபர்கள் மொழிகளின் தடைகள் இல்லாமல் ஒன்றாக இசைந்து அசைய முடிந்தது ஏன்? காரணம், 1990களின் மத்தியில் கொலம்பியாவின் உடற்பயிற்சியாளரால் உருவாக்கப்பட்ட இந்த ஜும்பா என்கிற உடற்பயிற்சி  முறையின் பயிற்சியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வாய்மொழி குறிப்புகளை பயன்படுத்துவது கிடையாது. வகுப்பில் பயிற்சியாளர்கள் அசைய, மாணவர்கள் அவர்கள் அசைவை பின்பற்றுவார்கள். ஒரு வார்த்தையும் இன்றி, கூச்சலும் இன்றி அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள்.

வார்த்தைகள் சிலசமயம் நம்மை இடையமறித்து தடை உண்டு பண்ணக்கூடும். கொரிந்தியர்கள் அனுபவித்தாற்போல சில குழப்பங்களையும் ஏற்படுத்த கூடும், அவர்களுக்கான முதல் நிருபத்தில் பவுல் இதை குறிப்பிடுகிறார். குறி[பிட்ட உணவுகளை உட்கொள்வதை குறித்து உண்டான தர்க்கங்களை விவாதிக்கையில் எழும்பின குழப்பமே அது (1 கொரிந்தியர் 10:27-30). ஆனால் நமது செயல்கள், தடைகளையும், குழப்பங்களையும் கூட கடந்து நிற்கும். இன்றைய வேத வாசிப்பு பகுதியில் பவுல் குறிப்பிடுவது போல, இயேசுவை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று ஜனங்களுக்கு நாம் நமது செயல்கள் மூலம் காண்பிக்க வேண்டும், “அநேகருடைய நன்மையை” விரும்பி தேட வேண்டும் (10:32-33) நாம் இயேசுவின் மாதிரியை பின்பற்றுகையில் (11 :1), அவரை விசுவாசிக்கும்படி நாம் உலகத்தாரை அழைக்கிறோம்.

யாரோ ஒருவர் சொன்னது போல,"சுவிசேஷத்தை எப்போதும் பிரசங்கியுங்கள், தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை உபயோகியுங்கள்". நாம் இயேசுவின் தலைமையை பின்பற்றும்போது, அவர் நமது செயல்களையே நமது விசுவாசத்தின் உண்மையான அடையாளங்களாக வழிநடத்தி மற்றவர்களுக்கு தருவாராக. மேலும் நமது வார்த்தைகளும், செயல்களும் "தேவனுடைய மகிமைக்கென்றே" (10:31) இருப்பதாக.

நட்சத்திரங்களின் சவால்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே, இத்தாலிய கவிஞர் எப்.டி. மறிநேட்டி  வருங்காலவியல் என்ற கலை இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் கடந்த காலத்தை புறக்கணித்து, அழகை குறித்ததான பாரம்பரிய கருத்துக்களை ஏளனம் செய்தது, மாறாக இயந்திரங்களை அது உயர்வாக கருதியது. 1909ஆம் ஆண்டு மறிநேட்டி, வருங்காலவியலின்  கொள்கை விளக்கத்தை எழுதினார், அதில் அவர்: பெண்களை குறித்து இழிவாகவும், வன்முறையை உயர்வாகவும் அறிவித்திருந்தார். மேலும், "நாம் யுத்தங்களை மேன்மைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார். அவருடைய கொள்கை விளக்க உரை இவ்வாறு நிறைவடைந்தது: "உலகத்தின் உச்சியில் நின்று கொண்டு நாங்கள் மீண்டுமாக நட்சத்திரங்களுக்கு விரோதமான கொடூரமான யுத்தத்தை துவங்குகிறோம்"

மறிநேட்டி கொள்கை விளக்கத்தை அறிவித்து, ஐந்து ஆண்டுகளில் நவீன போர் மிகவும் தீவிரமாக ஆரம்பமானது. முதலாம் உலகப் போர் யாருக்கும் எந்த புகழையும் கொண்டு வரவில்லை. மறிநேட்டியே 1944-ல் மரித்தார். ஆனால் இவைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், நட்சத்திரங்கள் அதினதின் இடத்திலே நிலைத்திருந்தன.

 தாவீது ராஜா, இந்த நட்சத்திரங்களை குறைத்து கவித்துவமாக பாடியிருந்தார் ஆனால் வியப்பூட்டும் வகையில் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு. அவர் எழுதுகிறார்,"உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்."(சங்கீதம்) என்று. தாவீதின் இந்தக் கேள்வி அவிசுவாசத்தினால் வந்தது அல்ல ஆனால் வியப்பினால் தன்னை தாழ்த்தினார். இந்த அகண்ட அண்ட சராசரங்களை உண்டாக்கின தேவன், மெய்யாகவே நம் மீது சிந்தையாய் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்முடைய ஒவ்வொரு விபரத்தையும் கவனிக்கிறார், நம்முடைய நன்மை, தீமை, தாழ்மை, கொடூரம், ஏன் அபத்தத்தை கூட கவனிக்கிறார்.

நட்சத்திரங்களுக்கு சவால் விடுவது என்பது முட்டாள்தனமானது, மாறாக அவைகள் நம்முடைய சிருஷ்டிகரை துதிக்கும்படி நமக்கு சவால் விடுகின்றன.