வகை  |  odb

எனது நோக்கம் என்ன?

"நான் மிகவும் பயனற்றவனாக உணருகிறேன்" என ஹெரால்டு கூறினார். "விதவைகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த குடும்பங்களுடன் மும்முரமாக இருக்கிறார்கள், சுவரில் நிழல்களைப் பார்த்துக்கொண்டு அமைதியான மதியங்களை செலவிடுகிறார்கள்"‌ என‌ அவர் தனது மகளிடம் அடிக்கடி கூறுவார். “நான் வயதாகிவிட்டேன், நிறைவான வாழ்க்கையையும் வாழ்ந்து விட்டேன். இனி எனக்கு எந்த நோக்கமும் இல்லை. தேவன் என்னை எந்த நேரத்திலும் தம்மிடத்திற்கு அழைத்துச் செல்வார்” என்பார்.

 

இருப்பினும், ஒரு பிற்பகல் உரையாடல் ஹெரால்டின் மனதை மாற்றியது. "என் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவருடைய குழந்தைகளுடன் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால் நான் அவருக்காக ஜெபித்தேன்" என்று ஹெரால்டு கூறினார். “பின்னர், நான் அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்". அப்பொழுதுதான் என் வாழ்க்கைக்கு இன்னும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்! இயேசுவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்கும் வரை, நான் அவர்களுக்கு இரட்சகரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றார்.

 

ஹெரால்டு தனது விசுவாசத்தை எப்போதும் போன்ற சாதாரண சந்திப்பில் பகிர்ந்தபோது, அவரது அயலாகத்தாரின் வாழ்கை மாறியது. 2தீமோத்தேயு 1 ல், அப்போஸ்தலனாகிய பவுல் இன்னொருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு, தேவனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றி குறிப்பிடுகிறார்: பவுலின் இளம் சக ஊழியனான தீமோத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி லோவிசாள் மற்றும் தாயார் ஐனிக்கேயாள் ஆகியோர் "மாயமற்ற விசுவாசத்தை" கொண்டிருந்தனர் (வ.5) எனக் காண்கிறோம். ஒரு சாதாரண குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகள் மூலம், இளம் தீமோத்தேயு ஒரு மாயமற்ற விசுவாசத்தைக் கற்றுக்கொண்டார். அவனுடைய வளர்ச்சி, இயேசுவின் உண்மையுள்ள சீஷனாகவும், இறுதியில்‌ எபேசு தேவாலயத்தின் தலைவனாக அவனுடைய ஊழியத்தை வடிவமைத்தது.

 

நம்முடைய வயது, பின்னணி அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் நமக்கும் உண்டு

ஜெபமும், மாற்றமும்

1982 ஆம் ஆண்டில், போதகர் கிறிஸ்டியன் ஃபூரர் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் திங்கட்கிழமை ஜெபக் கூட்டங்களைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக உலகளாவிய வன்முறை, அடக்குமுறை மற்றும் கிழக்கு ஜெர்மன் ஆட்சியின் நடுவிலும் தேவனிடம் சமாதானம் வேண்டி ஒரு சிலர் கூடி ஜெபித்தனர். கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தேவாலயங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த போதிலும், சபை வாசலுக்கு வெளியே வெகுஜனக் கூட்டம் வரும் வரை, அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அக்டோபர் 9, 1989 அன்று, எழுபதாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த கலவரத்திற்கும் பதிலடி கொடுக்க ஆறாயிரம் கிழக்கு ஜெர்மன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அமைதியாக இருந்தது, ஆனால் வரலாற்றாசிரியர்கள் இந்நாளை ஒரு  வரலாற்றுத சிறப்பாகவே கருதுகின்றனர். ஒரு மாதம் கழித்து, பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது. பெரிய மாற்றம் ஜெபக்கூட்டத்துடன் தொடங்கியது.

 

நாம் தேவனிடம் திரும்பி, அவருடைய ஞானத்தையும், பலத்தையும் நம்பத் தொடங்கும் போது, ​​விஷயங்கள் பெரும்பாலும் மாறவும், மாற்றி அமைக்கப்படவும் தொடங்குகின்றன. இஸ்ரவேலைப் போலவே, "[நம்] துன்பத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது," நம்முடைய மிக மோசமான இக்கட்டான நிலைகளை, ஆழமாக மாற்றியமைக்கவும், நம்முடைய மிகவும் வேதனையான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கூடிய தேவனை நாம் கண்டு கொள்வோம் (சங்கீதம் 107:28). தேவன் "கொந்தளிப்பை அமர்த்துகிறார்", "அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும்" மாற்றுகிறார் (வச. 29, 35). நாம் யாரிடம் ஜெபிக்கிறோமோ, அவரே நமக்கு விரக்தியிலிருந்து நம்பிக்கையையும், அலங்கோலத்திலிருந்து அழகையும் கொண்டுவருகிறவர்.

 

ஆனால் தேவன்தான் (அவரது காலத்தில், நம்முடையது அல்ல) மாற்றத்தை ஏற்படுத்துகிறவர். அவர் செய்யும் மறுரூபமாக்கும் பணியில் நாம் எவ்வாறு பங்கு கொள்கிறோம் என்பதே ஜெபம்.

அனுதின அதிகாரம்

“ஒவ்வொரு வினாடியும் புனிதமானது” என்பது உணவைத் தயாரிப்பது, துணி துவைப்பது போன்ற பல்வேறு செயல்களுக்கான பிரார்த்தனைகளின் அழகான புத்தகமாகும். அதாவது மீண்டும், மீண்டும் செய்யக்கூடிய பணிகள் அல்லது அவசியமான‌ மற்றும் ‌சாதாரணமாக உணரக்கூடிய பணிகளைக் குறிக்கிறது. இப்பணிகள் சலிப்பூட்டுகிறவைகளாயிருக்கும். இவை எழுத்தாளரான ஜி.கே. செஸ்டெர்டென்னின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது. “உணவுக்கு முன் கிருபை வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது நல்லது தான். ஆனால் நான் வர்ணம் தீட்டுவதற்கு முன்னும், நீச்சல் அடிப்பதற்கு முன்னும், வேலி  இடுவதற்கு முன்னும், குத்துச்சண்டை போடும் முன்னும், நடக்கும் முன்னும், விளையாடும் முன்னும், நடனமாடும் முன்னும், பேனாவிற்கு மையை ஊற்றும் முன்னும் தேவனுடைய கிருபைக்காக கேட்கிறேன்.”

 

இத்தகைய ஊக்கம் எனது நாளின் செயல்பாடுகள் குறித்த எனது கண்ணோட்டத்தை மாற்றியமைக்கிறது. சில சமயங்களில் ஆவிக்குரிய வாழ்க்கையில், முக்கியமானது, முக்கியமற்றது என இரண்டு வகைகளாக பிரிக்க முற்படுகிறேன்.  இயேசுவுக்காக வாழத் தெரிந்துகொண்ட கொலோசே மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அந்தப் பிரிவினையை அழித்தார். அவர் இந்த வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: ”வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து”. (கொலோசெயர் 3:17). இயேசுவின் நாமத்தில் காரியங்களைச் செய்வதென்பது, நாம் அவற்றைச் செய்வது மட்டுமல்லாமல், அதன் மூலம் அவரைக் கனப்படுத்துவதும், அவற்றை நிறைவேற்றுவதற்கு அவருடைய ஆவி நம்மைப் பலப்படுத்துகிறது என்ற உறுதியைக் கொண்டிருப்பதும் ஆகும்.

 

"நீங்கள் எதைச் செய்தாலும்." நம் வாழ்வின் அனைத்து சாதாரண செயல்களையும், ஒவ்வொரு நேரமும், தேவ ஆவியால் பலப்படுத்தப்பட்டு, இயேசுவைக் கனப்படுத்தும் விதத்தில் செய்யலாம்.

ஆழமான தண்ணீர்

1992 இல் பில் பிங்க்னி தனியாக உலகம் முழுவதும் கடல் வழி பயணம் செய்தார், அவர் ஆபத்தான “கிரேட் சதர்ன் கேப்ஸைச்” சுற்றி உள்ளதான கடினமான பாதையில் சென்றார். அவர் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக அவ்வாறு செய்தார். அவரது பயணம் குழந்தைகளுக்கான கல்வியை வலியுறுத்தி, ஊக்கம் அளித்தது. அவரது முன்னாள் சிகாகோ நகர தொடக்கப் பள்ளி மாணவர்களும் அதில் உள்ளடங்குவர். அவரது இலக்கு என்ன? கடினமாகப் படிப்பதன் மூலமும் அர்ப்பணிப்புடன் இருப்பதன் மூலமும், மாணவர்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் காட்ட வேண்டும் என்பதே. அவர் தனது படகின் பெயரை அதற்கேற்றார் போலவே தேர்ந்தெடுத்தார் (அர்ப்பணிப்பு). பில், பள்ளி மாணவர்களை “அர்ப்பணிப்பு” என்ற படகில் கூட்டிச்செல்லும் போது இவ்வாறு கூறுகிறார், “உங்கள் கையில்தான் உழவு இயந்திரம் உள்ளது, நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் உங்கள் குழுவுடன் இசைந்து கற்க வேண்டும்”. வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவருக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் அவர் மாணவர்களுக்கு கற்றுத்தந்தார்.

 

பிங்க்னியின் வார்த்தைகள் சாலமோனின் ஞானத்தின் உருவப்படத்தை காட்டுகின்றன. ”மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” (நீதிமொழிகள் 20:5). சாலமோன் மக்கள் தங்கள் இலக்குகளை ஆராய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். இல்லையெனில், "அது ஒரு பொறி, "என சாலமோன் குறிப்பிடுகிறார். ”பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்” (வ.25).

 

இதற்கு மாறாக, பிங்க்னிக்கு ஒரு தெளிவான நோக்கம் இருந்தது, அது இறுதியில் அமெரிக்கா முழுவதும் உள்ள முப்பதாயிரம் மாணவர்களை அவரது பயணத்திலிருந்து கற்றுக்கொள்ளத் தூண்டியது. அவர் “நேஷனல் செய்லிங் ஹால் ஆஃப் ஃபேம்” இல்  சேர்க்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆனார். "குழந்தைகள் கவனித்துக் கொண்டிருந்தனர்," என அவர் கூறினார். இதே போன்ற நோக்கத்துடன், தேவன் நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆழமான ஆலோசனையின்படியே நம் வாழ்க்கையை அமைப்போம்.

தனிப்பட்ட பொறுப்பு

நான் என்ன உணர்கிறேன் என்பதை என் நண்பனின் கண்கள் வெளிப்படுத்தின - பயம்! வாலிப வயதினரான நாங்கள் இருவரும் மோசமாக நடந்து கொண்டதால், அந்த முகாம் இயக்குனருக்கு பயந்து கொண்டிருந்தோம். அவர் எங்கள் தகப்பன்மார்களை நன்கு அறிந்தவர், எங்கள் தகப்பன்மார்கள் இதனால் பெரிதும் ஏமாற்றமடைவார்கள் என்பதை அன்புடன் எங்களுக்குச் சுட்டிக்காட்டினார். எங்கள் குற்றத்திற்கான தனிப்பட்ட பொறுப்பை நாங்கள் எண்ணிப்பார்க்கும்போது நிமிர்ந்து நடக்க கூட தகுதியற்றிருந்தோம்.

 

யூதாவின் மக்களுக்காக தேவன் செப்பனியாவுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார், அதில் பாவத்திற்கான தனிப்பட்ட பொறுப்பைப் பற்றிய வல்லமை மிகுந்த வார்த்தைகளை (செப்பனியா 1:1, 6-7) காண்கிறோம். யூதாவின் பகைவர்களுக்கு எதிராக அவர் கொண்டு வரும் தீர்ப்புகளை விவரித்த பிறகு (அதிகாரம் 2), அவர் தனது பார்வையை குற்றம் செய்து குற்ற மனசாட்சியுடன் இருக்கும் தம் மக்கள் மீது திருப்பினார் (அதி. 3). ”இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!“ (செப்பனியா3.1). “அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்” (செப்பனியா 3: 7)

 

அவர் தனது மக்களின் கடின இதயங்களைக் கண்டார். அவர்களின் ஆவிக்குரிய அக்கறையின்மை, சமூக அநீதி மற்றும் மோசமான பேராசை ஆகியவற்றைக் கண்டு, அன்புடன் ஒழுக்கத்தை அவர்களுள் கொண்டு வந்தார். தனிநபர்கள், தலைவர்கள், நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள் (வ. 3-4) என்றெல்லாம் அல்ல. எல்லோரும் அவருக்கு முன்பாக குற்றவாளிகள்தான்.

 

பாவத்தில் நிலைத்திருந்த இயேசுவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினார், “தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்” (ரோமர் 2:5,6). எனவே, துக்கம் ஏற்படுத்தாதபடிக்கு இயேசுவின் வல்லமையில், நம்முடைய பரிசுத்தமான, அன்பான தகப்பனைக் கனம்பண்ணும் விதத்தில், மணந்திரும்பி வாழ்வோம்.