பயத்தை மேற்கொள்ள-நாள் 6
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம். சங்கீதம் 20:7
முப்பத்திரண்டு ஆண்டுகள் ஓர் மனிதனின்…
பயத்தை எதிர்கொள்வது-நாள் 5
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்சூழ்நிலையின்நடுவிலும் . சங்கீதம் 56:3
ஓர் சிறிய நகரத்திலுள்ள தேவாலயத்திற்குப் போதகராக வாரன் இடம் பெயர்ந்து சென்றார். ஊழியத்தின் தொடக்கத்தில் ஒருசில முயற்சிகளில்…
பயத்தால் சூழப்படுவது-நாள் 4
தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள். லூக்கா 12:31
2020ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் கொடிய தாக்கம் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர், நாடுகள் அடைபட்டன, விமானங்கள் மற்றும்…
சிறியது முதல் பெரிய காரியம் வரை-நாள் 3
கர்த்தர்: உனக்குச்(கிதியோன்) சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். நியாயாதிபதிகள் 6:23
முதல் முறையாக தூண்டிலில் மீன்பிடிக்கும் ஆசையிலிருந்த பத்து வயதான க்ளியோ, கொள்கனில் இருந்த புழுக்களைப்பார்த்த…
பதுங்கியிருக்கும் சிங்கங்கள்-நாள் 2
கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை. எண்ணாகமம் 14:9
நான் சிறுவனாக இருந்த போது, எனது அப்பா புதருக்குள் ஒளிந்துகொண்டு சிங்கம் போல் உறுமியபடி எங்களை "பயமுறுத்துவார்".…
பக்குவமற்ற பயங்கள்-நாள் 1
நான் உன்னை மறப்பதில்லை! ஏசாயா 49:15
எனது பெற்றோர் மூன்று மாத காலத்திற்குள் அடுத்தடுத்து இறந்தபோது, அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்ற எனது பயத்தில் எவ்வித…

அந்நியர்களை உபசரித்தல்
ஆயிரக்கணக்கான உக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் போரிலிருந்து தப்பி பெர்லினின் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அவர்கள் ஒரு ஆச்சரியத்தை எதிர்கொண்டனர். ஜெர்மன் குடும்பங்கள் அகதிகளுக்கு ஆதரவளிப்பதாக தங்கள் கைகளினால் எழுதப்பட்ட வாசகங்களை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். “இரண்டு பேரை உபசரிக்க முடியம்” என்று ஒரு அடையாளம் வாசிக்கப்பட்டது. “பெரிய அறை இருக்கிறது” என்று இன்னொரு வாசகம் தென்பட்டது. அந்நியர்களுக்கு ஏன் இத்தகைய உபசரிப்பு வழங்குகிறீர்கள் என்று ஒரு பெண்ணை கேட்டதற்கு, அவள், நாசிசவாதிகளிடமிருந்து தப்பிச்செல்லும் போது தனது தாய்க்கு அடைக்கலம் தேவைப்பட்டதாகவும், அத்தகைய தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தான் உதவ விரும்புவதாகவும் அவள் கூறினாள்.
உபாகமத்தில், தேவன் வெகுதொலைவிலிருந்து வரும் அயலகத்தார்களை உபசரிக்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஏன்? ஏனென்றால் “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (10:18). மேலும் அவர்களைப் பார்த்து, “எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” (வச. 19) என்றும் அறிவுறுத்துகிறார். அவர்களை பட்சாதாபத்துடன் பராமரிக்கும்படிக்கு தூண்கிறார்.
ஆனால் அதற்கு மறுபக்கமும் இருக்கிறது. ஆபிரகாம் தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களை உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டதுபோல (ஆதியாகமம் 18:1-5), சாரிபாத் விதவை எலியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டாள் (1 இராஜாக்கள் 17:9-24). தேவன் விருந்தினர்களை ஆசீர்வதிப்பதற்காக அல்லாமல், அவர்களை உபசரிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதையே அதிகம் விரும்புகிறார்.
ஒரு புதிய நபரை உங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பது என்பது கடினமானது. ஆனால், அந்த ஜெர்மானிய குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாமும் பெலவீனமானவர்கள் மீது அக்கறைகொள்ளும்போது, அவர்கள் மூலமாய் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்களுக்கு பாத்திரராக முடியும்.
