வகை  |  odb

தேவனின் பேரன்பின் சுழற்சி

என் முப்பது வயதில், இயேசுவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணித்தபின் புதிய விசுவாசியான என் உள்ளத்தில் அதிக கேள்விகள் இருந்தன. நான் வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கியபோது, கேள்விகள் இன்னும் அதிகமாயிற்று. "தேவனின் அனைத்து கட்டளைகளுக்கும் எப்படிக் கீழ்ப்படிய கூடும்? நான் இன்று காலைதான் என் கணவரை மனமுடையச் செய்துவிட்டேனே!" என்று ஒரு நண்பரிடம் கேட்டேன்.

"வேதாகமத்தை தொடர்ந்து வாசி, இயேசு உன்னை நேசிப்பது போல நீயும் பிறரை நேசிக்க உதவுமாறு பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடு" என்றாள் தோழி.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேவனுடைய பிள்ளையாக வாழ்ந்த பிறகு, அந்த எளிய ஆனால் ஆழமான சத்தியம் அவருடைய பேரன்பின் சுழற்சியின் மூன்று படிகளை கடைப்பிடிக்க இன்னும் எனக்கு உதவுகிறது: முதலாவதாக, அப்போஸ்தலன் பவுல், இயேசுவை பின்பற்றுவோர் வாழ்வில் அன்பே மையமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் "ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கான கடனை" கடைப்பிடிப்பதின் மூலம், ஆண்டவருக்கு கீழ்ப்படிவார்கள். "பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்." (ரோமர் 13:8). இறுதியாக, "அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது;"(வ.10) என்பதால் இதைச் கடைப்பிடிப்பதின் மூலம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.

 

கிறிஸ்து சிலுவையில் நமக்காகப் பலியாகக் கொடுக்கப்பட்டதால் தேவனுடைய பேரன்பை நாம்  அனுபவித்திருப்பதால், நாம் நன்றியுள்ள இருதயத்தோடு இவ்வன்பைப் பிரதிபலிக்க முடியும். இயேசுவுக்கான நமது நன்றியுணர்வு, நமது வார்த்தைகள், செயல்கள் மற்றும் மனப்பான்மைகளால் மற்றவர்களை நேசிக்க வழிவகுக்கிறது. அன்பாகவே இருக்கும் உண்மையான தேவனிடமிருந்தே அந்த மெய்யான அன்பு பாய்ந்தோடுகிறது, (1 யோவான் 4:16,19).

அன்பு தேவனே, உம் பேரன்பின் சுழற்சியினால் இயங்கிட எங்களுக்கு உதவும்!

தாழ்த்தப்படுதல்

பெருமை கனவீனத்திற்கு வழிவகுக்கிறது என்பதை நார்வேயில் உள்ள ஒருவன் அறிந்துகொண்டான். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கார்ஸ்டன் வார்ஹோல்முவிடம், ஓடுவதற்கு ஏற்ற உடைகள் கூட அணியாத ஒருவன் தன்னுடன் போட்டிப்போடும்படி, திமிராகச் சவால் விடுத்தான். உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்துகொண்டிருந்த வார்ஹோம், சவாலை ஏற்று அவனைத் தோற்கடித்தார். எல்லைக்கோட்டில், தனக்குச் சரியான துவக்கம் கிடைக்கவில்லையென்றும், மீண்டும் பந்தயம் நடத்த வேண்டுமென்றும் அவன் கூறியபோது இரண்டு முறை உலக சாம்பியனான அவர் நகைத்தார்!

"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்" என நீதிமொழிகள் 29:23-ல் நாம் வாசிக்கிறோம். நீதிமொழிகளின் புத்தகத்தில் தேவன் அகந்தை உள்ளவர்களை நடத்தும் விதத்தைப் பற்றி எழுதுவது சாலொமோனுக்கு பிடித்த ஒன்றாகும் (11:2; 16:18; 18:12). இந்த வசனங்களில் அகந்தை அல்லது இறுமாப்பு என்ற வார்த்தைக்கு " புடைத்தல்" அல்லது "பொங்குதல்" என்று பொருள். அது தேவனுக்குரிய கனத்தை நாம் எடுத்துக்கொள்வதாகும். நாம் அகந்தைக்கொள்கையில்,  நம்மைப் பற்றி இருப்பதை விட உயர்வாக நாம் நினைக்கிறோம்.

இயேசு ஒருமுறை, "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (மத்தேயு 23:12) என்றார். அவரும், சாலொமோனும் தாழ்மையையும், பணிவையும் பின்பற்ற நம்மை நடத்துகிறார்கள். இது மாய்மாலமான தாழ்மை அல்ல, மாறாக, நம்மை சரிப்படுத்தி, நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை ஒப்புக்கொள்வதாகும்.  தன் வார்த்தைகளில் பதறாமல் (நீதிமொழிகள் 29:20) ஞானமாய் இருப்பதாகும்.

அவரைக் கனப்படுத்துவதற்கும் அவமானத்தைத் தவிர்ப்பதற்கும், நம்மைத் தாழ்த்திக்கொள்ளும் இதயத்தையும் ஞானத்தையும் நமக்குத் தரும்படி தேவனிடம் கேட்போம்.

சுவர்களில் தேவதூதர்கள்

வாலஸ் மற்றும் மேரி பிரவுன் இருவரும் இங்கிலாந்தின் ஏழ்மையான பகுதிக்கு குடிபெயர்ந்து, மரித்த நிலையில் இருக்கும் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றிட சென்றனர். ஒரு கூட்டத்தினர் தங்கள் திருச்சபைக்குச் சொந்தமான மைதானத்தையும் வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியாது. இக்கூட்டம்  ஜன்னல் வழியாகச் செங்கற்களை வீசி, வேலிகளுக்கு தீ வைத்து, குழந்தைகளை மிரட்டினர். இந்த தாக்குதல் பல மாதங்கள் தொடர்ந்தது; காவல்துறையால் கூட அவர்களைத் தடுக்க முடியவில்லை.

நெகேமியாவின் புத்தகம் இடிபட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும்  இஸ்ரவேலர்கள் எவ்வாறு கட்டினர் என்பதை விவரிக்கிறது. அதன் உள்ளூர் வாசிகள் "பிரச்சினையைத் தூண்டி", யுத்தத்தினால் எதிர்க்கையில் (நெகேமியா 4:8), இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி. . .ஜாமங்காக்கிறவர்களை வைத்தனா் (வ. 9). இந்த வேதபகுதியின் மூலம் தேவன் வழிநடத்துவதை உணர்ந்த பிரவுன் குடும்பத்தினர் மற்றும் சிலர், அவர்கள் ஆலயத்தை சுற்றி நடந்து, தேவன் தங்களது சுற்று சுவர்களில் தங்களைக் காக்கும்படி தூதர்களை நிறுத்தும்படி ஜெபித்தனர். இதைக் கண்ட அந்த கும்பல் கேலி செய்தது, ஆனால் அடுத்த நாள், அவர்களில் பாதி பேர் மட்டுமே வந்தனர். அதற்கு அடுத்த நாள், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்; மறுநாள், யாரும் வரவில்லை. பின்னர் அந்த கும்பல் மக்களை அச்சுறுத்துவதைக் கைவிட்டதாக ஊழியர்கள் கேள்விப்பட்டனர்.

ஜெபத்திற்கான இந்த அற்புதமான பதில், நமது சொந்த பாதுகாப்பிற்கான சூத்திரம் அல்ல. மாறாக ஊழியத்திற்கு எதிர்ப்புகள் வரும், அதை ஜெபமென்னும் ஆயுதத்தால் போரிட வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. நெகேமியா இஸ்ரவேலர்களுக்கு சொன்னது "மகத்துவமும் பயங்கரமுமுள்ள கர்த்தரை நினைவுகூருங்கள்" (வ. 14). கொடுமை நிறைந்த இருதயங்களை கூட தேவன் விடுவிப்பார்.

தேவனிடம் சரணடைதல்

ஒரு பண்ணை வீட்டில் பிறந்த ஜட்சன் வான் டிவென்டர் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார், ஓவியக் கலை பயின்று, ஒரு கலை ஆசிரியரானார். ஆனால், தேவன் அவருக்கு வைத்திருந்த திட்டம் வேறாயிருந்தது. திருச்சபையில் அவரது பனியின் அருமை அறிந்த நண்பர்கள் அவரை சுவிசேஷ பணிசெய்ய உற்சாகப்படுத்தினர். ஜட்சனும் தேவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார், ஆனால் ஓவிய பணிக்கான ஈடுபாட்டை விடுவது கடினமாக இருந்தது. அவர் தேவனோடு போராடினார். இறுதியில் அவர், "என் வாழ்க்கையின் முக்கியமான நேரம் வந்தது, நான் அனைத்தையும் தேவனிடம் ஒப்படைத்தேன்" என எழுதினார்.

தேவன் ஆபிரகாமை தன் மகன் ஈசாக்கை பலியாக அர்ப்பணிக்க அழைத்தபோது அவர் மனம் பட்டபாடுகளை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. "அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்" (ஆதியாகமம் 22:2). தேவன் நம்மைப் பலியிட அழைக்கும் விலைமதிப்பற்ற பொருள் எது என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்? தேவன் இறுதியில் ஈசாக்கைக் காப்பாற்றினார் என நாம் அறிவோம் (வ.12). ஆனால் நோக்கம் நிறைவேறிற்று: "தனக்கு மிகவும் விலைமதிப்புள்ளதை ஆபிரகாம் ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தார்". மிகவும் கடினமான அழைப்பின் மத்தியில் தேவன் வழங்குவார் என்று அவர் நம்பினார்.

தேவன் மீது அன்பு கூறுகிறோம் என்கிற நாம், நமக்கு மிகவும் பிடித்ததை தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்கிறோமா? சுவிசேஷ பணிக்காகத் தேவனின் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜட்சன் வான் டிவென்டர் பின்னர் "இயேசுவுக்கே அர்ப்பணித்தேன்" என்ற அற்புதமான பாடலை எழுதினார். பிற்காலத்தில், தேவன் ஜட்சனை மீண்டும் ஆசிரியரான பணியாற்ற வாய்ப்பளித்தார். அவரது மாணவர்களில் ஒருவர்தான் இளம் பில்லி கிரஹாம்.

நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் நாம் கற்பனை செய்ய முடியாத நோக்கங்களைக் கொண்டுள்ளது. நமக்குப் பிரியமானதைக் கொடுக்க நாம் விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். நாம் செய்யக்கூடியது இது தான் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தம்முடைய ஒரே மகனைப் பலியிட்டார்.

நாள் 5: அவரே போதுமானவர்

“உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்” (மத்தேயு 15: 27).

சில சமயங்களில் நாம் வாழ்க்கையால் மூழ்கடிக்கப்படுகிறோம். ஏமாற்றம், தீராத கடன், வேலை இழப்பு…