மகிழ்ச்சியான நம்பிக்கை
கருணைக்கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூடியை ஒரு பெண், விலங்குகள் காப்பகத்திலிருந்து மீட்டார். அந்த நாய் அவளுக்கு துணையானது. பத்து ஆண்டுகளாக, ரூடி லிண்டாவின் படுக்கைக்கு அருகில் அமைதியாக தூங்கினது, ஆனால் அது திடீரென்று அவளுக்கு அருகில் குதித்து அவள் முகத்தை நக்க ஆரம்பித்தது. லிண்டா அதை திட்டினார், ஆனால் ஒவ்வொரு இரவும் ரூடி அதேபோல செய்தது. "விரைவில் அவர் என் மடியில் குதித்து, நான் அமரும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை நக்கியது" என்றார் லிண்டா.
ரூடியை பிராணிகள் நலமையத்திற்கு அழைத்துச் செல்ல அவள் திட்டமிட்டிருகையில்; ரூடி எத்தனை பிடிவாதமாக இருக்கிறது என்பதையும், அது தன் தாடையில் அதே இடத்தில் தன்னை எப்படி நக்குகிறது என்பதையும் லிண்டா சிந்திக்க ஆரம்பித்தாள். தயங்கியவாறே, லிண்டா மருத்துவரை அணுகுகையில், அவர் ரூடியிடம் ஒரு நுண்ணிய கட்டி இருப்பதைக் (எலும்பு புற்றுநோய்) கண்டறிந்தார். டாக்டர் லிண்டாவிடம், அவள் தாமதித்திருந்தால், அது அவளைக் கொன்றிருக்கும் என்றார். லிண்டா ரூடியின் உள்ளுணர்வை நம்பினாள், அவ்வாறு செய்ததில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.
தேவனை நம்புவது ஜீவனுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது. சங்கீதக்காரன், "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்" (40:4) என்கிறார். சில மொழிபெயர்ப்புகள் இதை இன்னும் மிகைப்படுத்தி, "கர்த்தரை தங்கள் நம்பிக்கையாக கொள்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள்" (வ. 4) என்கிறது. சங்கீதங்களில் குறிப்பிடப்படும் "மகிழ்ச்சி"; மிகுதியாகவும், பொங்குகிற, உற்சாகமான மகிழ்ச்சியாகும்.
நாம் தேவனை நம்புகையில், ஆழமான, உண்மையான மகிழ்ச்சியே இறுதி முடிவு. இந்த நம்பிக்கை எளிதில் வராமல் இருக்கலாம், மேலும் முடிவுகள் நாம் எண்ணியது போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனை நம்பினால், நாம் நம்பியதற்காக மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.

பரலோகத்தில் எஜமானன்
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் 2022 இல், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.
மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை "செவ்வையாய்" நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, "அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்" என்கிறது.
"மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே" (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் "பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று" (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், "நீதியும் செவ்வையுமாய்" (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.
ஆணி வடு கரங்கள்
என்னைப் போலவே, வடுக்களை உண்டாக்கும் சில காயங்களை நீங்கள் எப்போது பெற்றீர்கள் என்பதை அறிந்திருக்கலாம். என் மணிக்கட்டில் ஒரு சிறிய வடு, நடுநிலைப் பள்ளியில் சக இசைக்குழு…
தேவனால் அறியப்படுதல்
ஜார்ஜியாவில் (அமெரிக்கா) உள்ள ஒரு கல்லூரி மாணவர் ஒரு சக மாணவருக்கு, மரபணு சோதனை அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும் என்று காட்டுகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியபோது இவ்வாறு…
துப்பறியும் வேலை
1986 ஆம் ஆண்டில், துப்பறியும் ஹெர்குல் பாய்ரோட் வேடத்தில் பெயர் பெற்ற ஆங்கில நடிகரான சர் டேவிட் சுசெட், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் புரிந்துகொள்ள ஒரு தேடலைத் தொடங்கினார்.…
வசந்தம் குளிர்காலத்தைப் பின்தொடர்வது போல
தன்னுடைய தேசம் எந்த ஒரு தூண்டுதலுமின்றி மற்றொரு தேசத்தின்மீது படையெடுத்ததை பற்றி எழுதிய "குற்றத்திற்காக" விசாரிக்கப்படுகையில், அந்த பத்திரிகையாளர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார். எனினும் அவர்…
துப்புரவாளரின் ஜெபம்
தன் தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவரைக் கண்ட ராசா, அவருக்கு இரங்கி கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அந்த நபர் அவருக்கு நன்றி சொல்லி, அவருக்காக ஜெபிக்கலாமா என்று…
தேவன் நினைத்தருள்கிறார்
சோக் சிங் கோவிட் -19 இலிருந்து மீண்டு வந்தபோது, அவளது வயதான அம்மா பாதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவளுடைய அம்மா இறந்துவிட்டார். பின்னர் அவளைப் பிரிந்திருந்த…