1986 ஆம் ஆண்டில், துப்பறியும் ஹெர்குல் பாய்ரோட் வேடத்தில் பெயர் பெற்ற ஆங்கில நடிகரான சர் டேவிட் சுசெட், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் புரிந்துகொள்ள ஒரு தேடலைத் தொடங்கினார். அவர் மரித்த பிறகு என்னவாகும் என்று சிந்தித்த அவர், ரோமருக்கான நிருபத்தைப் படிக்க ஆரம்பித்தார். இருபது ஆண்டுகள் கவனமாகப் பரிசீலித்த பிறகு, அவர் இயேசுவை முழுமையாக நம்பினார்.

கொரிந்தியர்களுக்கான பவுலின் முதலாம் நிருபத்தை எதிரொலித்து, “உயிர்த்தெழுதல் இல்லாமல் நம்பிக்கை இல்லை” என்று சுசேட் முடித்தார். ஆகவே, தான் நம்புவது “இயேசுவின் மரணம், சிலுவையில் அறையப்படுதல் மட்டுமல்ல, உயிர்த்தெழுதலையும் அடிப்படையாகக் கொண்டது” என்பதை அவர் அவதானித்தார். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த அற்புதம், நமக்கு நம்பிக்கையளித்து, மனிதனாகவும் தேவனாகவும் இருக்கும் அவரிடமாய் நடத்துகிறது என்றார்.

தான் நிறுவி, பதினெட்டு மாதங்கள் வாழ்ந்த கொரிந்து சபைக்கு பவுல் நிருபத்தை எழுதியபோது, ​​பிரிவினை பிரச்சனைகள் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்துக் குறைந்து வரும் நம்பிக்கை குறித்து அவர் விசாரப்பட்டார். “கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்” (1 கொரிந்தியர் 15:17) என்று கூறினார். இயேசு மட்டும் மரித்து உயிர்த்தெழவில்லை, அவருடைய விசுவாசிகளும் கூடத்தான். கொரிந்து சபை இந்த நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளவில்லை எனில், “எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்(பார்கள்)போம்” (வ.19).

இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நம்புவதற்குத் தேவன் நமக்கு உதவுகையில், ​​நாம் அவருடன் நித்திய காலமாய் வாழ்வோம் என்ற உறுதியில் நாம் மகிழ்ச்சியடையலாம். ஒரு சரியான தேடலுக்கு அதுவே ஒரு அற்புதமான முடிவு.

-எமி பவுச்சர் பை

இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், உயிருடன் இருக்கிறார் என்பதை அறிவது எப்படி உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது மற்றும் நீங்கள் வாழும் விதத்தை வடிவமைக்கிறது? இது ஏன் முக்கியமானது?

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே, சிலுவையில் மரித்து புதிய வாழ்வுக்கு எழுந்ததற்காக உமக்கு நன்றி. உம்மோடு இருக்கும் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

1 கொரிந்தியர் 15:12-24

12 கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று
பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின்
உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில்
சிலர் எப்படிச் சொல்லலாம்?
13
மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால்
கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
14
கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள்
பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
15
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன்
எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று
நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே,
தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும்
காணப்படுவோமே.
16
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும்
எழுந்திருக்கவில்லை.
17
கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம்
வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள்
பாவங்களில் இருப்பீர்கள்.
18
கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
19
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல்
நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும்
பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
20
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து,
நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
21
மனுஷனால் மரணம் உண்டானபடியால்,
மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும்
உண்டாயிற்று.
22
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல,
கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
23
அவனவன் தன்தன் வரிசையிலே
உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து;
பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள்
உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
24
அதன்பின்பு முடிவு உண்டாகும்;
அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல
அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து,
தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு
ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

1 கொரிந்தியர் 15:20

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.