அறிமுகம்
மேகமூட்டமான காட்சி

மார்ச் 2013 இல், ஆர்க்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ள ஒரு நார்வே நகரமான ட்ரொம்சோவிலும் அப்பகுதியை சுற்றிலும் ஒரு வாரம் கழித்தேன். பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஒரு மாநில நகரத்திலிருந்து வந்த நான், அதன் மென்மையான தூள் வடிவில் பனிப்பொழிவை அனுபவிக்கக் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை விட நான் வடக்கு விளக்குகள் என்றும் அழைக்கப்படும் அரோரா பொரியாலிஸைப் பார்க்க வேண்டும் என்றே எதிர்பார்த்தேன்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் முந்தியதைக் கண்டேன் (எனது வெப்பமண்டல கண்ணாடிகள் மூலம் கண்ட பனிப்பொழிவு பிரமிக்க வைத்தது) ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிந்தியதைப் பார்க்கவில்லை. நாங்கள் நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு அறையில் சில இரவுகளைக் கழித்தோம், இன்னும் நாங்கள் அரோராவைப் பார்க்கவில்லை.

வீட்டிற்குத் திரும்பியபோது, ​​நான் நன்றாக உணர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஏமாற்றத்துடன் பதிலளித்தேன்: வானிலை முன்னறிவிப்பைச் சரிபார்த்தீர்களா? (ஆம்.) நீங்கள் நீண்ட நேரம் இரவில் காத்திருந்தீர்களா? (ஆம்.) குறைந்தது மூன்று இரவுகளாவது தங்கினீர்களா? வடக்கு விளக்குகளைப் பின்தொடர்ந்து பயணப்பட்டீர்களா? (ஆம் ஆம் ஆம்) நான் அதை மறக்க முயன்றேன், ஆனால் உண்மையில் அது மிகவும் மேகமூட்டமாக இருந்தது.

நான் தேவையான அனைத்தையும் செய்துவிட்டேன், இன்னும் நான் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறவில்லை. வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இதே உணர்வு என்னைத் தாக்குகிறது. உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறதா? உடைந்துபோகும் திருமண உறவு, மற்றொரு வேலை நேர்காணலில் நிராகரிப்பு, ​பதவி உயர்வு தடை, புதிய மருந்துகளும் பலனளிக்கவில்லை என்ற செய்தியால் ஏற்படும் சோர்வு என்று இதுபோல பாடுபட்டும், தேவையானதைச் செய்த பிறகும், நாம் எதிர்பார்ப்பதைப் பெறுவோம் என்பதில் எந்த நிச்சயமும் இல்லாத நிலை.

வெறுப்பாக உள்ளது, இல்லையா? சிலமுறை உதவியற்றவராகவும் தோன்றும். நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்தும், இன்னும், விஷயங்கள் தவறாக நடக்கலாம்.

என் வாழ்க்கையில் ஒரு தாழ்வான நிலையில், என்னை நானே கேட்டுக்கொண்டேன்: இது எப்படி இவ்வளவு தவறாக நடந்தது? பல ஆண்டுகள் தலைவர்காளாகப் பணியாற்றிய பிறகும், எனக்கும் என் கணவருக்கும் சபை மக்களின் ஐக்கியம் கிடைக்காத காலமாக இருந்தது அது. அதே நேரத்தில், நான் அரிக்கும் தோலழற்சியின் கடுமையான வெடிப்புடன் போராடினேன். என் கணவரின் வேலை காரணமாக எங்கள் நிதி நிலைமை குறித்து சொல்லொண்ணா கவலை இருந்தது, மேலும் எங்கள் உறவில் முன்னிருந்த இருந்த நெருக்கமான உணர்வின் ஆழம் இல்லை. எந்த ஒரு நேர்மறையான முன்னேற்றமும் இல்லாமல் வாரங்களும், மாதங்களும் கழிந்தன. நான் வாழ்வை வெறுக்க ஆரம்பித்தேன், நான் எதிர்பார்க்காத மற்றும் கடந்து போகுமென்று தோன்றாத ஒரு பருவத்தில் சிக்கிக்கொண்டேன்.

அந்த காலகட்டத்தில், கடந்து போக மறுக்கும் ஒரு கனமான கருமேகத்தின் கீழ் வாழ்ந்ததைப் போல இருந்தது என்று மட்டுமே என் அனுபவத்தைப் பற்றி விவரிக்க முடியும். அது ஒரு நம்பிக்கையற்ற உணர்வு என்பதை இப்போது நான் காண்கிறேன். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், எங்கள் திருமணம், என் உடல்நலம், அவருடைய வேலை, சபையுடனான எங்கள் உறவு போன்றவற்றைக் குறித்து நம்பிக்கை கொள்வதே கடினமாகத் தோன்றியது.

ஒவ்வொரு இரவும் நான் தூங்க முடியாமல் தவிக்கையில், ​​அடுத்த நாளுக்கான பயத்தால் நான், ‘தேவனே, எனக்கு உதவும்’ என்று ஜெபிப்பேன், இந்த மூன்று சிறிய வார்த்தைகளே என்னிடம் இருந்தது; வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த கனமான கருமேகம் எழுவதற்குப் பல மாதங்கள் ஆனது மற்றும் பிற சிக்கல்கள் தீர்வதற்கு இன்னும் அதிக காலம் எடுத்தது.

ஆனால் அந்த இருண்ட நாட்களில், நான் இருந்த இடத்தில் தேவன் என்னைச் சந்தித்தார். புலம்பல் 3:21-23 இல் உள்ள வார்த்தைகளை நான் பற்றிக்கொண்டன்:

இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

திகிலுடன் ஒரு புதிய நாளுக்காக எழுந்திருக்கையில், ஜீவிப்பதே கடினமாக உணர்கையில், அந்தக் காலங்களில்தான் தேவனின் உண்மைத்தன்மையை நான் புரிந்துகொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, நாள் முழுவதும் சகித்திட அவர் எனக்கு உதவினார், நம்பிக்கை உண்டென்பதை அவர் எனக்குக் காட்டினார். இது சூழ்நிலைகள் தராத ஒரு நம்பிக்கை, மிகச் சிறந்த சூழ்நிலைகளிலும் இது இருக்காது, ஆனால் ஒரு நபரிடம் மட்டும் காணப்படுகின்றது; அது இயேசுவைத் தவிர வேறு யாரும் இல்லை.

இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் (1 பேதுரு 1:4). நாம் இயேசுவை நம்பும் போது, ​​நமக்கு எதிர்காலம் குறித்த நிச்சயமுண்டு. “பலவிதமான சோதனைகளினாலே”(வ. 6) துக்கப்பட்டாலும், நமக்கு நம்பிக்கை இருப்பதால் நாம் மகிழ்ச்சியடையலாம்; ஏதோவொரு நம்பிக்கை இல்லை, ஆனால் மெய்யானதும் நிச்சயமானதுமான நம்பிக்கை.

அந்த நார்வே பயணத்தின் போது வடக்கு விளக்குகளைப் பார்க்க முடியாமல் போனது எங்கள் பார்வை பற்றி எனக்குச் சிலவற்றை கற்றுக் கொடுத்தது. அரோராக்களின் விஷயம் என்னவென்றால், அவை தொடர்ந்து நிகழ்கின்றன. இருப்பினும், இருப்பிடம், ஒளி மாசுபாடு அல்லது மேக நிலைகள் காரணமாகப் பூமியிலிருந்து அவற்றை நாம் எப்போதும் பார்க்க முடியாது. அவை அங்கு இல்லை என்பதல்ல; நாம் அவைகளைப் பார்க்கவில்லை என்பதுதான்.

நம்பிக்கையும் அப்படித்தான். நம்பிக்கை எப்போதும் இருக்கும், ஆனால் நாம் அதை எப்போதும் பார்ப்பதோ, உணருவதோ இல்லை. நம்பிக்கை பிரச்சனை அல்ல, நமது பார்வைதான் தவறு. சில நேரங்களில் அதைத் தவறான இடங்களில் தேடலாம் அல்லது சில நேரங்களில் அது மேகமூட்டத்தில் மறைந்திருக்கலாம். நீங்கள் இப்போது எங்கிருந்தாலும், நம்பிக்கை இருக்கிறது. சரியான சூழ்நிலைகளுக்காக அல்லது சரியான காரியங்கள் நடக்க நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்ததால், இந்த வாழ்க்கைக்கான நம்பிக்கை நமக்குண்டு.

பின்வரும் வேத தியான கட்டுரைகளை நீங்கள் வாசிக்கையில், ​​உங்களுக்கான என்னுடைய ஜெபம் எபேசியர் 1:18ல் உள்ள வார்த்தைகள்: நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும் நீங்கள் புரிந்துகொள்ளும்படிக்கு உங்கள் இதயங்கள் ஒளியால் நிரம்பி வழிய வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.

ஜாஸ்மின் கோ, நமது அனுதின மன்னா ஆசிரியர்


 

| நாள் 1: நிலைதடுமாற்றம்

வேலைக்காக ஏங்கின ஒருவன், ஆறு மாதங்கள் கரையிலிருந்து பல மைல் தொலைவிலிருந்த சிறிய மீன்பிடி குடிசையில், மீன்களைக் கவர விளக்குகளை ஏற்றும் வேளைக்கு ஒப்புக்கொண்டான். வாரத்திற்கு ஒருமுறை பொருட்கள் விநியோகிக்கப்படும்…

மேலும் வாசிக்க

 

| நாள் 2: ஏமாற்றம் வருகையில்

தனது ஏமாற்றங்களிலிருந்து தன்னை விடுவிக்க முயன்ற ஒருவர், இணையத்தில் தனது பொருட்களை ஏலம் விட முடிவு செய்தார். அவர், “எனது உடைமைகள் அனைத்தும் விற்கப்படும் நாளில், எனது பணப்பை மற்றும் கடவுச்சீட்டுடன் எனது முன் வாசல் வழியே…

மேலும் வாசிக்க

 

| நாள் 3: ஏக்கத்தில் இன்புறுதல்

எழுத்தாளர் சூசன் கெய்னின் ஆய்வின்படி, மக்கள் தங்கள் விருப்ப பாடல்களின் தொகுப்புகளில் மகிழ்ச்சியான பாடல்களைச் சராசரியாக 175 முறையும், சோகமான பாடல்களை 800 முறையும் கேட்கின்றனர். சோகமான இசை என்பது பலரை ஈர்ப்பது ஏன்?…

மேலும் வாசிக்க

 

| நாள் 4: மிக மேலானது

ஜார்ஜுக்கு இயேசுவைப் பற்றி பிறரிடம் சொல்வதில் மிகுந்த வாஞ்சை இருந்தது. அவர் தனது உயர்நிலைப் பள்ளியில் ஒரு நற்செய்தி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். தனது கல்லூரி நண்பர்கள் இருவரை, மெக்சிகோவில் வேதாகமத்தை விநியோகிக்க…

மேலும் வாசிக்க

 

| நாள் 5: துப்புரவாளரின் ஜெபம்

தன் தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவரைக் கண்ட ராசா, அவருக்கு இரங்கி கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அந்த நபர் அவருக்கு நன்றி சொல்லி, அவருக்காக ஜெபிக்கலாமா என்று ராசாவிடம் கேட்டார். ஆச்சரியப்பட்ட ராசா, என்ன பதில் சொல்வது…

மேலும் வாசிக்க

 

| நாள் 6: தேவன் நினைத்தருள்கிறார்

சோக் சிங் கோவிட் -19 இலிருந்து மீண்டு வந்தபோது, ​​அவளது வயதான அம்மா பாதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவளுடைய அம்மா இறந்துவிட்டார். பின்னர் அவளைப் பிரிந்திருந்த கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார், மேலும்…

மேலும் வாசிக்க

 

| நாள் 7: வசந்தம் குளிர்காலத்தைப் பின்தொடர்வது போல

தன்னுடைய தேசம் எந்த ஒரு தூண்டுதலுமின்றி மற்றொரு தேசத்தின்மீது படையெடுத்ததை பற்றி எழுதிய “குற்றத்திற்காக” விசாரிக்கப்படுகையில், அந்த பத்திரிகையாளர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார். எனினும் அவர் தன்னை தற்காத்துக்…

மேலும் வாசிக்க

 

| நாள் 8: துப்பறியும் வேலை

1986 ஆம் ஆண்டில், துப்பறியும் ஹெர்குல் பாய்ரோட் வேடத்தில் பெயர் பெற்ற ஆங்கில நடிகரான சர் டேவிட் சுசெட், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் புரிந்துகொள்ள ஒரு தேடலைத் தொடங்கினார். அவர் மரித்த பிறகு என்னவாகும் என்று சிந்தித்த அவர்…

மேலும் வாசிக்க

 

| நாள் 9: தேவனால் அறியப்படுதல்

ஜார்ஜியாவில் (அமெரிக்கா) உள்ள ஒரு கல்லூரி மாணவர் ஒரு சக மாணவருக்கு, மரபணு சோதனை அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும் என்று காட்டுகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியபோது இவ்வாறு கேட்டார்: “யார் இந்த அந்நியன்?”. ஏறக்குறைய…

மேலும் வாசிக்க

 

| நாள் 10: ஆணி வடு கரங்கள்

என்னைப் போலவே, வடுக்களை உண்டாக்கும் சில காயங்களை நீங்கள் எப்போது பெற்றீர்கள் என்பதை அறிந்திருக்கலாம். என் மணிக்கட்டில் ஒரு சிறிய வடு, நடுநிலைப் பள்ளியில் சக இசைக்குழு உறுப்பினர், அவசரத்தில் கலப்பையில் ஏற்படுத்திய காயம்…

மேலும் வாசிக்க

 

| முடிவுரை: நம்பிக்கை உண்டு

வாழ்க்கையின் திகிலூட்டும், கசப்பான புயற்காற்றுகளை நாம் அனைவரும் சந்திப்போம். மேலே உள்ள வரிகள் நான் எழுதிய பாடலிலிருந்து, ஐந்து முறை புற்றுநோயின் பிடியிலிருந்து தப்பிய எனது பயணத்தைப் பிரதிபலிக்கிறது. மோசமான நிகழ்வுகள்…

 

மேலும் வாசிக்க

 


உங்கள் இன்பாக்ஸில் தினசரி மின்-தின தியானங்களைப் பெற விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்!
இங்கே பதிவு செய்யவும்