கடின சூழலில் கடக்க
இரண்டு பாதை உண்டு தெரிந்தெடுக்க
ஒரு பாதை விரக்தி, அது வேண்டாம்
நம்பிக்கை உண்டு இங்கே நடக்க.

வாழ்க்கையின் திகிலூட்டும், கசப்பான புயற்காற்றுகளை நாம் அனைவரும் சந்திப்போம். மேலே உள்ள வரிகள் நான் எழுதிய பாடலிலிருந்து, ஐந்து முறை புற்றுநோயின் பிடியிலிருந்து தப்பிய எனது பயணத்தைப் பிரதிபலிக்கிறது. மோசமான நிகழ்வுகள் மற்றும் அமைதியைக் குலைக்கும் நோய்கள் போன்றவை பனிக்கால மழை போல் நம்மீது விழுகையில், எளிதில் எதிர்கொள்ள இயலாது. எவ்வாறாயினும், விரக்தியில் மூழ்கி இருப்பதற்கு அல்லது நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு என்று நாம் இரடனில் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம்.

இருளானாலும், பயமானாலும்
வெளிச்சம் உதிக்கும், விரைவில் பாதை தெளியும்
பரத்தை நோக்கு, ஏனெனில் தேவன்பில் நம்பிக்கை உண்டு.

வாழ்க்கையால் பந்தாடப்படுகையில் பயம், பதட்டம் மற்றும் மனச்சோர்வால் நம் இதயங்கள் நிரம்பலாம். அது இயற்கை. நீங்கள் அவற்றை அனுபவிக்கையில், உங்களை நீங்களே நொந்து கொள்ளாதீர்கள். ஏற்ற காலத்தில், தேவனின் கிருபையால், வெளிச்சமும் மகிழ்ச்சியும் திரும்ப உண்டாகும். வாழ்க்கையின் மோசமான புயல்கள் என்னை புரட்டிடும்படி அச்சுறுத்துகையில், நான் பற்றிக்கொண்ட சில ஜீவனருளும் வார்த்தைகள் இவையே: “பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” (ரோமர் 15:13).

தலையை உயர்த்து, பார்வையை உயர்த்து,
தரிசித்தல்ல, விசுவாசத்தால் நட
ஒரு எட்டெடு, துவங்கிடு
தேவ நம்பிக்கை உன் உள்ளம் நிரப்பட்டும்.

பவுல் ரோமர் 15:13 ஐ ரோமாபுரியில் உள்ள சபைக்கான நிறைவு ஜெபமாக எழுதினார்; அவர் அந்த சபையாரைச் சந்தித்ததேயில்லை. அவருடைய நிருபம் அங்குள்ள இயேசுவின் விசுவாசிகளுக்கு ஒரு அறிமுகமாக இருந்தது, தேவனை “நம்பிக்கையின் ஆதாரம்” என்று அவர் ஏன் நம்பினார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக எழுதப்பட்டது.

களிமண் குடுவை போல,
சரீரம் தோற்கின்றது, ஆனால் ஒன்று மறையாது
அது நிலைக்கும், ஏனெனில் வலியினூடே நம்பிக்கை உண்டு.

கொரிந்துவில் உள்ள சபைக்கான மற்றொரு நிருபத்தில், “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து” (1 கொரிந்தியர் 15:3-4) என்று பவுல் எழுதினார். இயேசுவின் உயிர்த்தெழுதலின் உண்மையின் காரணமாக, அப்போஸ்தலன் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் கடுமையான துன்பங்களை எதிர்கொண்டிருந்தாலும் (பார்க்க 2 கொரிந்தியர் 11:24-27), கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் பாவம் மற்றும் மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுவார்கள் என்று கிறிஸ்து வாக்குறுதி அளித்திருப்பதை பவுல் அறிந்திருந்தார், “என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9).

இயேசுவை விசுவாசிக்கிறவர்களும் அவரோடு என்றும் வாழ்வார்கள். கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததைப் போலவே, ஒருநாள் நம்முடைய சொந்த மறுரூபமாக்கப்பட்ட உயிர்த்தெழுந்த சரீரங்களைப் பெறும்போது ஈஸ்டர் நம்பிக்கையை நாமும் அனுபவிக்க முடியும், “கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்” (1 கொரிந்தியர் 15:43)

இருண்ட இரவிலே
தேவ பிரசன்னத்தின் ஒளி பிரகாசிப்பதைப்போலே
நம்பிக்கை உண்டு
அது மங்கும்போது, காத்திரு, ஏனெனில் நம்பிக்கை உண்டு.

தேவனுக்கு எதிரான நமது கலகத்தால் மோசமாக உடைந்த உலகின் இருளில் நாம் வாழ்கிறோம். எனினும், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் நிமித்தம் நாம் நம்பிக்கையையும் சமாதானத்தையும் அனுபவிக்க முடியும், இது “விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதை” சாத்தியமாக்குகிறது (ரோமர் 5:1). முன்னதாக, பவுல் தனது நிருபத்தில், “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (6:23) என்று எழுதினார்.

உண்மையான நம்பிக்கை இயேசு வழங்கும் இரட்சிப்பை பெறுவதில் துவங்குகிறது. நமது விசுவாசத்தை அவர் வெளிப்படுத்துவதன் மூலம் இதைச் செய்கிறோம். நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்து, அவரில் ஜீவனைப் பெற விரும்பினால், இவ்வாறு ஜெபியுங்கள்:

அன்பு இயேசுவே, நான் உம்மைவிட்டு வெகு தொலைவிலிருந்தேன் என்பதை நான் அறிவேன்; என் பாவம் மற்றும் கலகத்தின் நிமித்தம் நம்பிக்கையற்ற நிலையில் காணாமல் போயிருந்தேன். நான் உமக்கு விரோதமாகச் செய்த தவற்றை ஒப்புக்கொள்கிறேன், மேலும் நீர் மட்டுமே அருளும் இரட்சிப்பைப் பெற விரும்புகிறேன். நீர் பூமிக்கு வந்து, என் பாவங்களுக்காகச் சிலுவையில் மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். உமது உயிர்த்தெழுதலின் வல்லமையால் மெய்யான சமாதானத்தையும் நம்பிக்கையையும் வழங்குபவர் நீரே. நான் உம்மை துதித்து, என் வாழ்நாள் முழுவதையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

நீங்கள் கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெற ஜெபித்திருந்தால் அல்லது மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், மேலும் தகவலுக்குக் கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் மற்றும் எங்களுடன் தொடர்பு கொள்ளவும், ஆகவே நாங்கள் உங்களை ஊக்குவிக்க முடியும். வாழ்க்கை இன்னும் கடுமையான புயலையும், சவாலான நேரங்களை வழங்கும், ஆனால் நீங்கள் அவற்றை எதிர்கொள்ளும்போது, ​​இப்போது உங்களால். . .

பரத்தை நோக்க முடியும், தேவன்பில் நம்பிக்கையுண்டே. டாம் பெல்டன், நமது அனுதின மன்னா ஆசிரியர்