தன் தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவரைக் கண்ட ராசா, அவருக்கு இரங்கி கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அந்த நபர் அவருக்கு நன்றி சொல்லி, அவருக்காக ஜெபிக்கலாமா என்று ராசாவிடம் கேட்டார். ஆச்சரியப்பட்ட ராசா, என்ன பதில் சொல்வது என்று யோசித்தார், முரண்பாடாக உணர்ந்தாலும் அவரை சந்தோஷப்படுத்த விரும்பி, அவரும் சம்மதித்தார், துப்புரவுப் பணியாளர் பணத்திற்காகவும் ராசாவிற்காகவும் நன்றி செலுத்தி, “தேவனே, தயவுசெய்து இவருக்கு வழியையும் சத்தியத்தையும் ஜீவனையும் காட்டும்” என்று கூறினார்.

ராசா இந்த ஜெபத்தால் குழப்பமடைந்தார், ஆனால் அதை மறந்துவிட்டார். எனினும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசுவை தம் இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, ​​“தேவன் என் வாழ்க்கையை மாற்றினார்” என்று கூறினார். துப்புரவாளரின் ஜெபத்திற்குத் தேவன் பதிலளித்தார் என்பதை அவர் திடீரென்று புரிந்துகொண்டார், ஏனென்றால் ராசா, இயேசுவில் வழி, சத்தியம் மற்றும் ஜீவனைக் கண்டுகொண்டார்.

இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்கு “நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்” என்றார் (யோவான் 14:4). தோமாவோ, அவர் எங்குச் செல்கிறார் என்று அவர்களுக்குத் தெரியாததால், எப்படி அவர்கள் வழியை அறிய முடியும் என்று கேட்டார். அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (வ. 6) என்றார். அவர்கள் அவரை அறிந்திருந்தால், அவர்கள் பிதாவையும் அறிவார்கள் என்று அவர் அவர்களுக்கு உறுதியளித்தார் (வ. 7).

இயேசு தடைகளைத் தகர்த்தெறிந்து நம்மை தம் பிதாவின் முன்னிலையில் கொண்டுவருகிறார். ஒரு நிறைவான வாழ்க்கைக்கு அவரே வழி; அவரே நம்மை விடுவிக்கும் சத்தியம்; அவரே நமக்கு வாழ்க்கையையும், அன்பையும், நம்பிக்கையையும் தருகிறார்.

-எமி பவுச்சர் பை

பிறருக்காக, ஒருவேளை தெருவில் பார்க்கும் அறிமுகமில்லாதவர்களுக்காகவும் ஜெபிக்கத் தேவன் உங்களை எவ்வாறு உணர்த்தக் கூடும்? உங்களுக்காக ஒருவரின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்ததை நீங்கள் எவ்வாறு கண்டீர்கள்?

அன்பு இயேசுவே, நீரே வழி, சத்தியம், ஜீவன். சிலுவையில் உமது கிரியையில் மூலம் என்னைப் பிதாவிடம் அழைத்துச் சென்றதற்கு நன்றி.

யோவான் 14:1-10

1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில்
விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள்
உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்;
ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை
ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும்
இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை
என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள்,
வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
5 தோமா அவரை நோக்கி ஆண்டவரே, நீர்
போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள்
எப்படி அறிவோம் என்றான்.
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும்
பிதாவினிடத்தில் வரான்.
7 என்னை அறிந்தீர்களானால் என்
பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை
அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே,
பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது
எங்களுக்குப் போதும் என்றான்.
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம்
நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா
என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க,
பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ
எப்படி சொல்லுகிறாய்?
10 நான் பிதாவிலும், பிதா என்னிலும்
இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே
சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை;
என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக்
கிரியைகளைச் செய்துவருகிறார்.

யோவான் 14:6

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.