என்னைப் போலவே, வடுக்களை உண்டாக்கும் சில காயங்களை நீங்கள் எப்போது பெற்றீர்கள் என்பதை அறிந்திருக்கலாம். என் மணிக்கட்டில் ஒரு சிறிய வடு, நடுநிலைப் பள்ளியில் சக இசைக்குழு உறுப்பினர், அவசரத்தில் கலப்பையில் ஏற்படுத்திய காயம். என் முழங்கையில் மற்றொன்று, ஓட்டுநர் ஒருவர் முடிக்கியை பிரேக் என்று தவறாக மிதித்து எங்கள் வாகனத்தின் மீது மோதியபோது உண்டானது. மூன்றாவது, ஒரு அறுவை சிகிச்சை மூலம் உண்டானது.

நோய், இழப்பு அல்லது மரணத்தின் வலியால் உங்களுக்கும் மனரீதியான மற்றும் உணர்வுப்பூர்வமான வடுக்கள் இருக்கலாம். அற்புதமான, குணப்படுத்தும் செய்தி என்னவென்றால், காஸ்டிங் கிரவுன்ஸின் “த ஒன்லி ஸ்கார்ஸ் இன் ஹெவன்” பாடல் உறுதிப்படுத்துவது போல, பரலோகத்தில் உள்ள ஒரே தழும்புகள் இயேசுவுக்குச் சொந்தமானது. அங்கே, நாம் உடைக்கப்பட மாட்டோம் அல்லது காயமடைய மாட்டோம். சந்தேகங்கள், அச்சங்கள், மன வேதனைகள், உடல் வலிகள் இல்லாத வாழ்க்கைக்கான நம்பிக்கை நமக்குண்டு. நாம் புதிதாக்கப்பட்டு, இயேசுவோடு இருப்போம் (வெளிப்படுத்துதல் 21:4).

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர் தம்முடைய சீஷர்களுக்குத் தோன்றி, அவருடைய கைகளிலும் விலாவிலும் உள்ள தழும்புகளைக் காட்டினார் (யோவான் 20:20). தோமா அங்கு இல்லை, அதனால் அவர் இச்சங்கதியைச் சந்தேகித்தார் (வ.25). இயேசு திரும்பவும் தோன்றி, தன்னுடைய தழும்புகளைத் தொடும்படி சொல்லி, “அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்” (வ. 27). அவனது சந்தேகம் நீங்கியது. தோமா, “என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.” (வ. 28)

நம்முடைய பாவங்களைப் போக்க இயேசு மரித்தார். அவருடைய வடுக்கள் அவரை நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக அடையாளப்படுத்துகின்றன! (வெளிப்படுத்துதல் 5:6). நாம் விசுவாசித்து, களிகூர்ந்து, நம்பிக்கையால் நிறையலாம்; ஏனெனில் ஒரு நாள் அவர் நம்மை தமது ‘ஆணி வடு’ கரங்களால் பற்றிக்கொள்வார்.

-ஆலிசன் கீடா

நீங்கள் இன்னும் என்ன உணர்வுப்பூர்வமான அல்லது மனரீதியான காயங்களைக் கொண்டிருக்கிறீர்கள்? இயேசுவின் மூலம் நீங்கள் எப்படிக் குணமடைதலை அனுபவித்தீர்கள்?

அன்பு இயேசுவே, எனக்காக வடுக்களை ஏற்றதற்காக உமக்கு நன்றி. உம்மில் மகிழ எனக்கு உதவும்.

யோவான் 20:19-29

19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம்
சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த
இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள்
பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று:
உங்களுக்குச் சமாதானம் என்றார்.
20
அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும்
விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள்
கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
21
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி:
உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக;
பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை
அனுப்புகிறேன் என்று சொல்லி,
22
அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
23
எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ
அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்,
எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ
அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
24
இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில்
ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா
என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.
25
மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம்
என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு
அவன் அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான
காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என்
விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே
போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
26
மறுபடியும் எட்டு நாளைக்குப்பின்பு அவருடைய
சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்;
தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்;
கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது
இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச்
சமாதானம் என்றார்.
27
பின்பு அவர் தோமாவை நோக்கி:
நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார்,
உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு,
அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
28
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக
என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
29
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக்
கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும்
விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

யோவான் 20:27

நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு