தேவனுடைய பிள்ளைகள்
குழந்தையில்லாத தம்பதியினருக்காக ஒழுங்குசெய்யப்பட்ட பொதுவான கருத்தரங்கில் நான் பேச வேண்டியிருந்தது. அதில் பங்குபெற்ற அநேகர் குழந்தையில்லாமையால், எதிர்காலத்தைக் குறித்து சோர்ந்துபோயிருந்தார்கள். அந்த பாதையில் நடந்த அனுபவம் எனக்கும் இருந்ததால், அவர்களை உற்சாகப்படுத்த நினைத்தேன். “பெற்றோராக முடியவில்லையென்றாலும் உங்களால் அழகான வாழ்க்கை வாழமுடியும்” என்றும், “நீங்கள் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள்; உங்களைக் குறித்த புதிய நோக்கத்தை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்” என்றும் அவர்களை உற்சாகப்படுத்தினேன்.
சிறிது நேரம் கழித்து, ஒரு பெண் கண்ணீரோடு என்னிடத்திற்கு வந்து, நன்றி சொன்னாள். “குழந்தையின்மையால் சோர்ந்துபோயிருந்த நான் பிரமிக்கத்தக்க ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டவள் என்பதை இன்று அறிந்தது ஆசீர்வாதமாய் இருந்தது” என்றாள். “நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டவரா” என்று கேட்டேன். “வெகுநாட்களுக்கு முன்பு தேவனை விட்டு பின்வாங்கிப்போனேன்” என்ற அவள், “நான் மீண்டும் அந்த உறவைப் புதுப்பிக்க வேண்டும்” என்று தீர்மானம் எடுத்தாள்.
இதுபோன்ற தருணங்களில் சுவிசேஷத்தின் மேன்மை என்ன என்று புரிந்துகொள்ளமுடிகிறது. “அம்மா” “அப்பா” ஸ்தானத்தை அடைவது சிலருக்கு கடினம். நம் வேலை ஸ்தலங்களில் கொடுக்கப்படும் பதவி அந்தஸ்தையும் அவ்வப்போது நாம் இழக்கநேரிடும். ஆனால் இயேசு நமக்குக் கொடுக்கும் “பிரியமான பிள்ளைகள்” என்னும் ஸ்தானத்தை யாரும் நம்மிடத்திலிருந்து பறிக்கமுடியாது (எபேசியர் 5:1). அந்த அங்கீகாரத்தோடு இந்த உலகம் கொடுக்கும் எல்லா ஸ்தானங்களுக்கும் மேலான அன்பின் பாதையிலே நாம் நடக்கமுடியும் (வச. 2).
மனிதர்கள் அனைவரும் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டுள்ளனர் (சங்கீதம் 139:14).இயேசுவை பின்பற்றுபவர்கள் அவருடைய பிள்ளைகளாய் மாறுகின்றனர். குழந்தையின்மையால் சோர்ந்திருந்த அந்த பெண், இந்த உலகம் கொடுப்பதைக்காட்டிலும் மேன்மையான ஸ்தானத்தையும் அங்கீகாரத்தையும் தேடிப் புறப்பட்டாள்.
நமது நிஜமான அங்கீகாரம்
எனது பெற்றோரின் புகைப்பட ஆல்பத்தில் ஒரு சிறுவனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பருக்கள் நிறைந்த வட்ட முகமும் நீட்டிக்கொண்டிருந்த தலைமுடியும் அவனுக்கு இருந்தது. அவனுக்கு கேலிச் சித்திரங்கள் பிடிக்கும்; சில பழவகைகள் பிடிக்காது; ஒரு வகையான இசையை விரும்புவான். அதே புகைப்பட ஆல்பத்தில் ஒரு இளைஞனுடைய புகைப்படம் ஒன்றும் இருந்தது. அவனுடைய முகம் வட்டமாய் இல்லாமல் சற்று நீண்டிருந்தது; தலைமுடி நீட்டிக்கொண்டில்லாமல் படிந்திருந்தது; முகத்தில் பருக்கள் இல்லை; அவனுக்கும் சில பழவகைகள் பிடிக்கும்; கேலிச் சித்திரங்களை விட திரைப்படங்களை அதிகம் விரும்புகிறான்; குறிப்பிட்ட சில இசைகளில் ஆர்வமுள்ளவன். அந்த சிறுவனின் முகமும் இந்த இளைஞனின் முகமும் ஒன்றுபோலவே இருந்தது. அறிவியல்பூர்வமாய் தோல், பற்கள், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் உருவ அமைப்பில் இருவரும் மற்றவரிலிருந்து வேறுபடுகின்றனர். எனினும், அந்த இரண்டு படங்களும் என்னுடையதுதான். மனிதனின் இந்த தோற்ற முரண்பாடு தத்துவமேதைகளையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு பருவத்திலும் நம்முடைய உருவ அமைப்பு மாற்றமடைந்துகொண்டே இருப்பதால் எது நம்முடைய நிஜமான உருவம்?
வேதம் இக்கேள்விக்கு பதிலளிக்கிறது. தாயின் கருவிலே தேவன் நம்மை உருவாக்கத் துவங்கினதுமுதல் (சங். 139:13-14), படிப்படியாய் வளர்ந்து ஒரு நேர்த்தியான உருவத்தை நாம் அடைகிறோம். நம்முடைய வாழ்க்கையின் இறுதியில் நாம் எந்த உருவத்தில் இருக்கப்போகிறோம் என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தால் இயேசுவைப் போல மாறுவோம் என்பதை மட்டும் நன்கு அறிந்திருக்கிறோம் (1 யோ. 3:2): நம்முடைய சரீரம் அவருடைய தன்மையையும், நம்முடைய ஆள் தத்துவம் அவருடைய சுபாவத்தையும், பாவங்கள் தொலைந்து, வரங்கள் பிரதிபலிக்கிற வாழ்க்கையையும் பெற்றுக்கொள்வோம்.
இயேசுவின் வருகை வரும்வரை இந்த எதிர்கால உருவ மாற்றத்திற்கு நேராய் நாம் இழுக்கப்படுகிறோம். தேவன் நம்மில் கிரியை செய்யும்போது படிப்படியாய் அவருடைய சாயலை நாம் தெளிவாய் பிரதிபலிக்கமுடியும் (2 கொரி. 3:18). நாம் தெரிந்துகொள்ளப்பட்ட நோக்கத்தை இன்னும் அடையவில்லை. ஆனால் கிறிஸ்துவைப் போல் மாறும்போது நம்முடைய நிஜமான அங்கீகாரத்தைப் பெறுகிறோம்.
குற்ற உணர்ச்சியும் மன்னிப்பும்
“ஹியூமன் யுனிவர்சல்ஸ்” என்ற தனது புத்தகத்தில், மானுடவியலாளர் டொனால்ட் பிரவுன் மனிதகுலத்திற்கு பொதுவான மக்களின் நானுறுக்கும் அதிகமான பழக்கவழக்கங்களை பட்டியலிடுகிறார். பொம்மைகள், நகைச்சுவைகள், நடனங்கள் மற்றும் பழமொழிகள், பாம்புகளின் போர்க்குணம், மற்றும் சரங்களை கட்டுவது போன்றவற்றை அதில் உள்ளடக்கியுள்ளார்! அதேபோல், எல்லா கலாச்சாரங்களிலும் சரி மற்றும் தவறு என்ற கருத்துக்கள் உள்ளன. அங்கு தாராள குணம் பாராட்டப்படுகிறது; வாக்குறுதிகள் மதிக்கப்படுகிறது; மற்றும் கஞ்சத்தனம் மற்றும் கொலை செய்தல் ஆகியவை தவறானவை என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றன. நாம் எங்கிருந்தாலும் நம் அனைவருக்கும் மனசாட்சி உணர்வு இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் இதேபோன்ற கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறினார். தேவன் யூத ஜனங்களுக்கு சரி தவறுகளை தெளிவுபடுத்த பத்து கட்டளைகளைக் கொடுத்தாலும், புறஜாதியார் தங்கள் மனசாட்சியின்படி நடக்கிறதின் மூலம் சரியானதைச் செய்யமுடியும் என்பதால், தேவனின் நியாயப்பிரமாணங்கள் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார் (ரோமர் 2:14-15). அதினால் மக்கள் எப்போதும் சரியானதையே செய்தனர் என்று அர்த்தமல்ல. புறஜாதியார் தங்கள் மனசாட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள் (1:32), யூதர்கள் நியாயப்பிரமாணத்தை மீறினார்கள் (2:17-24), இருவரும் குற்றவாளிகளாக இருந்தனர். ஆனால் இயேசுவை விசுவாசிப்பதின் மூலம், தேவன் நம்முடைய எல்லா நியாயப்பிரமாண மீறுதலினால் ஏற்பட்ட மரண தண்டனையை நீக்குகிறார் (3:23-26; 6:23).
தேவன் எல்லா மனிதர்களையும் சரி மற்றும் தவறு என்ற உணர்வோடு படைத்ததால், நாம் செய்த ஒரு கெட்ட காரியம் அல்லது நாம் செய்யத் தவறிய ஒரு நல்ல காரியம் குறித்து நாம் ஒவ்வொருவரும் சில குற்ற உணர்வை பெறுகிறோம். அந்த பாவங்களை நாம் அறிக்கையிடும்போது, தேவன் ஒரு வெள்ளை பலகையை சுத்தமாக துடைப்பது போல அனைத்து பாவங்களையும் துடைக்கிறார். நாம் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அவரிடம் கேட்பது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்று.
இயற்கையை கவனித்தல்
நானும் என் நண்பரும் எனக்கு பிடித்த நடைபயிற்சி இடத்தை சமீபத்தில் பார்வையிட்டோம். காற்று வீசும் மலையில் ஏறி, காட்டுப்பூக்களின் தோட்டத்தை கடந்து, உயரமான பைன் மரக் காடுகளுக்குள் சென்று, பின்னர் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி, அங்கே ஒரு கணம் நின்றோம். மேகங்கள் எங்களுக்கு மேலே மென்மையாக மிதந்தன. அருகில் ஒரு சிறு ஊற்று ஓடியது. பறவைகள் பாடும் ஒலி மட்டுமே அங்கு ஒலித்தது. அதையெல்லாம் உள்ளார அனுபவித்துக்கொண்டு, நானும் என் நண்பனும் பதினைந்து நிமிடங்கள் அமைதியாக அங்கே நின்றோம்.
அன்றைய நாளின் இந்த அனுபவம் எங்களுக்கு ஆழ்ந்த சிகிச்சையை போல் இருந்தது. ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, இயற்கையைப் பற்றி நிதானித்து சிந்திப்பவர்கள் அதிக அளவு மகிழ்ச்சியையும், குறைந்த அளவிலான பதட்டத்தையும், பூமியைப் பாதுகாப்பதற்கான அதிக விருப்பத்தையும் தெரிவிக்கிறார்கள். காட்டின் வழியாக நடந்து செல்வது மட்டும் போதாது; நீங்கள் மேகங்களைப் பார்க்க வேண்டும்; பறவைகளின் ஓசையைக் கேட்கவேண்டும். இயற்கையில் வசிப்பது மட்டுமல்ல; அதை உற்று கவனிப்பதும் மிகவும் அவசியம்.
இயற்கையின் நன்மைகளுக்கு ஆன்மீக காரணம் இருக்க முடியுமா? படைப்பு தேவனின் வல்லமையும் அவரது தன்மையையும் வெளிப்படுத்துகிறது என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 1:20). தேவன் யோபுவிடம் அவரது பிரசன்னத்தை உணர சமுத்திரத்தையும், வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொன்னார் (யோபு 38-39). “ஆகாயத்து பட்சிகளை” மற்றும் “காட்டுப் புஷ்பங்களை” பற்றி சிந்தித்துப் பார்ப்பது தேவனின் பாதுகாப்பை வெளிப்படுத்துவதோடு பதட்டத்தையும் குறைக்கும் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:25-30). வேதத்தில், இயற்கையை உற்று நோக்குவது ஒரு ஆவிக்குரிய நடைமுறையாய் காண்பிக்கப்பட்டுள்ளது.
இயற்கையானது நம்மை ஏன் மிகவும் நேர்மறையாக பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு காரணம் என்னவென்றால், இயற்கையை கவனிப்பதன் மூலம், அதைப் படைத்த தேவனை பற்றியும் அவர் நம்மை கண்ணோக்குகிறார் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.
பால் முதலில் வருகிறது
ஏழாம் நூற்றாண்டில், இப்போது ஐக்கிய இராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் நாடு பல ராஜ்யங்களாக பிரிந்து அடிக்கடி போர் புரிந்து கொண்டிருந்தது. நார்த்தம்ப்ரியாவின் ஓஸ்வால்ட் ராஜா இயேசுவின் விசுவாசியாக மாறினபோது, அவர் தனது பகுதியில் சுவிசேஷம் அறுவிக்க ஒரு மிஷினெரியை அழைத்தார். கோர்மன் என்னும் பெயருடைய மனிதர் அனுப்பப்பட்டார், ஆனால் சரியான பலன் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் “பிடிவாதமாக,” “காட்டுமிராண்டித்தனமாக,” இருப்பதை மற்றும் அவரது பிரசங்கத்தில் அக்கறை இல்லாததையும் கண்டு, அவர் விரக்தியுடன் வீடு திரும்பினார்.
ஐடான் என்ற ஒரு துறவி கோர்மனிடம், “கற்றுக் கொள்ளாதவர்களிடம் நீங்கள் இருந்ததை விட நீங்கள் மிகவும் கடுமையாக இருந்தீர்கள்” என்று கூறினார். நார்த்ம்பிரியர்களுக்கு " பாலை போல் மிகவும் எளிதான கோட்பாட்டை" கொடுப்பதற்கு பதிலாக, புரிந்துகொள்ள முடியாதவற்றை கோர்மன் பிரசங்கித்திருந்தார். ஐடன் நார்தம்பிரியாவுக்குச் சென்று , தனது பிரசங்கத்தை மக்களின் புரிதலுக்கு ஏற்றவாறு மாற்றினார் , ஆயிரக்கணக்கானோர் இயேசுவை விசுவாசித்தார்கள்.
ஐடனுக்கு இந்த முக்கியமான அணுகுமுறை வேதத்திலிருந்து கிடைத்தது. பவுல் கொரிந்தியரிடம், “நீங்கள் பெலனில்லாதவர்களானதால் உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்” (1 கொரிந்தியர் 3:2). சரியான வாழ்க்கை மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதற்கு முன்பு, இயேசுவைப் பற்றிய அடிப்படை போதனை, மனந்திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம் ஆகியவற்றைப் மக்கள் புரிந்திருக்க வேண்டும் (எபிரெயர் 5: 13–6: 2). முதிர்ச்சி பின்பற்றப்பட வேண்டும் (5:14), வரிசையை தவறவிடக்கூடாது. இறைச்சிக்கு முன் பால் வருகிறது. மக்களால் புரிந்து கொள்ளாத போதனைகளுக்குக் கீழ்ப்படிய இயலாது.
நார்த்ம்பிரியர்களின் நம்பிக்கை இறுதியில் தங்கள் நாட்டிற்கு அப்பால் பல நாடுகளுக்கு பரவியது. ஐடனைப் போலவே, மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் இருக்கும் நிலையிலேயே நாம் அவர்களை சந்திக்கிறோம்.
கடினமான மக்கள்
லூசி வோர்ஸ்லி ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். பெரும்பாலான மக்களிடையே பிரசித்திபெற்ற மனிதர்களைப் போல, அவருக்கு சில நேரங்களில் மோசமான மின்னஞ்சல்கள் வரும் – அவருடைய விஷயத்தில், அவருடைய பேச்சின் தடையால் அவளுடைய r-உச்சரிப்பு w-உச்சரிப்பாக ஒலித்தது. ஒருவர் இவ்வாறு எழுதினார்: "லூசி, நான் மழுங்கி இருப்பேன்: உங்கள் சோம்பேறித்தனமான பேச்சை சரி செய்ய கடினமாக முயற்சியுங்கள் அல்லது உங்கள் பேச்சுக் குறிப்புகளிலிருந்து r-ஐ நீக்குங்கள். ஏனெனில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமர்ந்து என்னால் பார்க்க முடியவில்லை அது என்னை கோபமூட்டுகிறது. அன்புடன், டேரன். ”
சிலருக்கு, இது போன்ற ஒரு உணர்ச்சியற்ற கருத்து அதற்கு சமமான முரட்டுத்தனமான பதிலைத் தருவதற்கு தூண்டக்கூடும். ஆனால் லூசி இவ்விதமாக பதிலளித்தார்: “ஓ டேரன், நீங்கள் என் முகத்திற்கு நேராக சொல்ல துணியாத ஒன்றைச் சொல்ல இணையத்தின் அநாமதேயத்தைப் பயன்படுத்தினீர்கள் என்று நினைக்கிறேன். தயவுசெய்து உங்கள் தயவற்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்! லூசி. ”
லூசியின் அந்த மெதுவான பிரதியுத்திரம் வேலை செய்தது. டேரன் மன்னிப்பு கேட்டு, அத்தகைய மின்னஞ்சலை மீண்டும் யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று உறுதியளித்தார்..
“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும், ஆனால் கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (15:1). கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (வச.. 18). சக ஊழியரிடமிருந்து ஒரு விமர்சனக் கருத்து, குடும்ப உறுப்பினரிடமிருந்து ஒரு மோசமான கருத்து அல்லது தெரியாத நபரிடமிருந்து ஒரு மோசமான பதில் ஆகியவற்றைப் பெறும்போது, நம்முடைய தேர்வு இவ்வாறு இருக்கிறது: தீப்பிழம்புகளைத் தூண்டும் கோபமான வார்த்தைகளைப் பேச அல்லது அதை அணைக்கும் மென்மையான சொற்களைப் பேச.
கோபத்தை மாற்றும் வார்த்தைகளைப் பேச தேவன் நமக்கு உதவுவாராக - மற்றும் கடினமான நபர்களை மாற்றவும் உதவுவாராக.
சேரி பாடல்கள்
தென் அமெரிக்காவின் பராகுவேயில் உள்ள ஒரு சிறிய சேரியில் மிகவும் ஏழ்மையான அதன் கிராமவாசிகள் அதன் குப்பைத் தொட்டிகளில் இருந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிழைக்கிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கையற்ற நிலைமைகளிலிருந்து அழகான ஒன்று வெளிப்பட்டுள்ளது - ஒரு இசைக்குழு.
இந்த சேரியில் ஒரு வீட்டை விட ஒரு
பிடில் (வயலின்) விலை அதிகமாக இருப்பதால் இசைக்குழு படைப்பாற்றலைப் பயன்படுத்தவேண்டியதாயிருந்தது மற்றும் அவர்களின் சொந்தக் கருவிகளை, அவர்களின் குப்பைகளிலிருந்தே வடிவமைக்க வேண்டியதாயிருந்தது. எண்ணெய்க் கலன்களில் வளைந்த முட்கரண்டியை வால்பகுதியாக கொண்டு பிடில் (வயலின்) தயாரிக்கப்படுகிறது. குப்பியின் மூடியை விசையாகக் கொண்டு வடிநீர் குழாய்களிலிருந்து கூடிசைக்குழுமக் கருவி (சாக்ஸபோன்கள்) உருவாக்கப்பட்டது. கழுதிப்பகுதியிலுள்ள நரம்பை ஒத்திசைவு செய்ய உருளை வடிவ தகர பாத்திரத்தில் மர சுருள்கிரிகரண்டியை கொண்டு நான்கு நரம்பு வாத்தியக்கருவி உருவாக்கப்பட்டது. இந்த முரண்பாடுகளில் மொஸார்ட் டின் இசையை ஒலிக்கச் செய்துகேட்பது ஒரு அழகான விஷயம். அந்த இசைக்குழு பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் இளம் உறுப்பினர்களின் மீதான பார்வையை உயர்த்தியது.
கீழே கிடந்தவைகளிலிருந்து பிடில் (வயலின்). சேரிகளில் இருந்து இசை. இது தேவன் என்ன செய்கிறார் என்பதின் முன்மாதிரி தான் அது. ஏசாயா தீர்க்கதரிசி தேவனின் புதிய சிருஷ்டிப்பை உருவகப்படுத்திக் காணும்போது, வறுமையிலிருந்து-சிங்காரம்-வெளிப்படும் படத்திற்கு இணையானது, வறண்ட நிலம் வெடித்து பூக்கள் பூப்பது (ஏசாயா 35: 1-2); நீரோடைகள் பாயும் வனாந்தரம் (வச. 6-7); தூக்கி எறியப்பட்ட போர்க்கருவிகள் தோட்டக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டது (2:4); வறுமையிலுள்ள மக்கள் சந்தோஷ கீதங்களால் முழுமையாவது (35: 5–6, 10) போன்ற படங்கள் வெளிப்படுகிறது.
"உலகம் எங்களுக்கு குப்பைகளை அனுப்புகிறது; நாங்கள் இசையை திருப்பி அனுப்புகிறோம்." என்று இசைக்குழு இயக்குனர் கூறுகிறார். அப்படி அவர்கள் செய்யும்போது, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உலகுக்குத் தருகிறார்கள், அப்போது தேவன் ஒவ்வொரு கண்ணின் கண்ணீரையும் துடைப்பார், வறுமை இனி இருக்காது.
பயத்தை எதிர்கொள்வது
ஒரு தேவாலயத்தில் ஆயராக பணிபுரிய வாரன் ஒரு சிறிய நகரத்திற்கு சென்றார். அவரது ஊழியம் ஆரம்ப வெற்றியைப் பெற்ற பிறகு, உள்ளூர்வாசிகள் ஒருவர் அவரைத் எதிர்த்தார். வாரன் மீது கொடூரமான செயல்களைக் குற்றம் சாட்டிய ஒரு கதையை உருவாக்கி, அந்த நபர் அந்தக் கதையை உள்ளூர் செய்தித்தாளுக்கு எடுத்துச் சென்று, உள்ளூர்வாசிகளுக்கு அஞ்சல் மூலம் விநியோகிக்க துண்டுப்பிரசுரங்களில் தனது குற்றச்சாட்டுகளை அச்சிட்டார். வாரனும் அவரது மனைவியும் கடுமையாக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். பொய் நம்பப்பட்டால், அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடும்.
தாவீது ராஜா ஒருமுறை இதேபோன்ற ஒன்றை அனுபவித்தார். அவர் ஒரு எதிரியால் அவதூறு தாக்குதலை எதிர்கொண்டார். “நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.” (சங்கீதம் 56: 5). இந்த தொடர்ச்சியான தாக்குதல் அவருக்கு அச்சத்தையும் கண்ணீரையும் ஏற்படுத்தியது (வச. 8). ஆனால் போருக்கு நடுவே, அவர் இந்த சக்திவாய்ந்த ஜெபத்தை ஜெபித்தார்: “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” (வச. 3-4).
தாவீது பிரார்த்தனை இன்று நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கலாம். “நான் பயப்படுகிற நாளில்” - பயம் அல்லது குற்றச்சாட்டு காலங்களில், நாம் தேவனிடம் திரும்புவோம். “உம்மை நம்புவேன்” - நாங்கள் எங்கள் போரை தேவனின் சக்திவாய்ந்த கைகளில் வைக்கிறோம். “மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” - அவருடனான நிலைமையைக் கருத்தில் கொண்டு, நமக்கு எதிரான சக்திகள் உண்மையில் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை நினைவில் கொள்கிறோம்.
வாரன் பற்றிய கதையை செய்தித்தாள் புறக்கணித்தது. சில காரணங்களால், துண்டுப்பிரசுரங்கள் ஒருபோதும் விநியோகிக்கப்படவில்லை. இன்று நீங்கள் என்ன போருக்கு அஞ்சுகிறீர்கள்? தேவனிடம் பேசுங்கள். அவர் உங்களோடு கூட சேர்ந்து போராட தயாராக இருக்கிறார்.
மூச்சுத் திணறல்
எனது வீட்டின் அருகே உள்ள வீட்டு மேம்பாட்டு கடையில் ஒரு பெரிய பச்சை நிற பொத்தான் ஒன்று உண்டு. வாடிக்கையாளர்கள் ஏதேனும் உதவி வேண்டுமானால் அதை அழுத்தவும் அழுத்திய ஒரு நிமிடத்துக்குள் உதவுவதற்கு யாரும் வரவில்லையென்றால் வாங்கும் பொருட்களில் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.
இதை போன்ற சூழ்நிலையில் வேகமாக கவனிக்கப்படும் வாடிக்கையாளராக இருக்க நமக்கு பிடிக்கும். ஆனால் சேவை செய்ய வேண்டியது நாமாக இருந்தால் அது நமக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும். நம்மில் அநேகர் நம் வேலைகளை மிகவும் விரைந்து அதிக மணி நேரம் வேலை செய்து மிகவும் சுருக்கமான நேரத்திற்குள் அதிக வேலையை முடிக்கும் கட்டாயத்திற்குள்ளாக அழுதப்படுகிறோம். ஒரு அவசரமான வாழ்க்கை முறைக்குள்ளாக அது செல்கிறது.
தேவன் இஸ்ரவேலருக்கு ஓய்வு நாளை கடைபிடிக்க கட்டளையிட்ட போது ஒரு முக்கிய காரணத்தை அறிவித்தார். “எகிப்தில் அடிமையாய் இருந்ததை மறந்து விடாதீர்கள்” (யாத் 5:15). அடிமைகளாக பார்வோன் நியமித்த குறுகிய காலத்துக்குள் வேலைகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது விடுதலை பெற்றதால், தாங்களும் தாங்கள் சேவை செய்தவர்களும் ஓய்வு எடுக்க ஒரு முழுநாளை ஆண்டவர் கட்டளையிட்டார். தேவனுடைய ஆட்சியில் சோர்வடைந்து வேலையினால் மூச்சுத்திணறும் யாரும் இருக்க கூடாது.
எந்நேரங்களில் சோர்வடையும் வரை அல்லது உங்களை காத்திருக்க செய்யும் மக்களிடம் எப்பொழுதெல்லாம் வேலை செய்து இருக்கிறீர்கள் ? நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேலை இடைவெளி கொடுப்போம். விரைந்து வேலை செய்யும் கலாச்சாரம் பார்வோனுடையது, நம் தேவனுடையது அல்ல.