தென் அமெரிக்காவின் பராகுவேயில் உள்ள ஒரு சிறிய சேரியில் மிகவும் ஏழ்மையான அதன் கிராமவாசிகள் அதன் குப்பைத் தொட்டிகளில் இருந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிழைக்கிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கையற்ற நிலைமைகளிலிருந்து அழகான ஒன்று வெளிப்பட்டுள்ளது – ஒரு இசைக்குழு.

இந்த சேரியில் ஒரு வீட்டை விட ஒரு
பிடில் (வயலின்) விலை அதிகமாக இருப்பதால் இசைக்குழு படைப்பாற்றலைப் பயன்படுத்தவேண்டியதாயிருந்தது மற்றும் அவர்களின் சொந்தக் கருவிகளை, அவர்களின் குப்பைகளிலிருந்தே வடிவமைக்க வேண்டியதாயிருந்தது. எண்ணெய்க் கலன்களில் வளைந்த முட்கரண்டியை வால்பகுதியாக கொண்டு பிடில் (வயலின்) தயாரிக்கப்படுகிறது. குப்பியின் மூடியை விசையாகக் கொண்டு வடிநீர் குழாய்களிலிருந்து கூடிசைக்குழுமக் கருவி (சாக்ஸபோன்கள்) உருவாக்கப்பட்டது. கழுதிப்பகுதியிலுள்ள நரம்பை ஒத்திசைவு செய்ய உருளை வடிவ தகர பாத்திரத்தில் மர சுருள்கிரிகரண்டியை கொண்டு நான்கு நரம்பு வாத்தியக்கருவி உருவாக்கப்பட்டது. இந்த முரண்பாடுகளில் மொஸார்ட் டின் இசையை ஒலிக்கச் செய்துகேட்பது ஒரு அழகான விஷயம். அந்த இசைக்குழு பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் இளம் உறுப்பினர்களின் மீதான பார்வையை உயர்த்தியது.

கீழே கிடந்தவைகளிலிருந்து பிடில் (வயலின்). சேரிகளில் இருந்து இசை. இது தேவன் என்ன செய்கிறார் என்பதின் முன்மாதிரி தான் அது. ஏசாயா தீர்க்கதரிசி தேவனின் புதிய சிருஷ்டிப்பை உருவகப்படுத்திக் காணும்போது, ​​வறுமையிலிருந்து-சிங்காரம்-வெளிப்படும் படத்திற்கு இணையானது, வறண்ட நிலம் வெடித்து பூக்கள் பூப்பது (ஏசாயா 35: 1-2); நீரோடைகள் பாயும் வனாந்தரம் (வச. 6-7); தூக்கி எறியப்பட்ட போர்க்கருவிகள் தோட்டக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டது (2:4); வறுமையிலுள்ள மக்கள் சந்தோஷ கீதங்களால் முழுமையாவது (35: 5–6, 10) போன்ற படங்கள் வெளிப்படுகிறது.

“உலகம் எங்களுக்கு குப்பைகளை அனுப்புகிறது; நாங்கள் இசையை திருப்பி அனுப்புகிறோம்.” என்று இசைக்குழு இயக்குனர் கூறுகிறார். அப்படி அவர்கள் செய்யும்போது, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உலகுக்குத் தருகிறார்கள், அப்போது தேவன் ஒவ்வொரு கண்ணின் கண்ணீரையும் துடைப்பார், வறுமை இனி இருக்காது.