எனது பெற்றோரின் புகைப்பட ஆல்பத்தில் ஒரு சிறுவனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பருக்கள் நிறைந்த வட்ட முகமும் நீட்டிக்கொண்டிருந்த தலைமுடியும் அவனுக்கு இருந்தது. அவனுக்கு கேலிச் சித்திரங்கள் பிடிக்கும்; சில பழவகைகள் பிடிக்காது; ஒரு வகையான இசையை விரும்புவான். அதே புகைப்பட ஆல்பத்தில் ஒரு இளைஞனுடைய புகைப்படம் ஒன்றும் இருந்தது. அவனுடைய முகம் வட்டமாய் இல்லாமல் சற்று நீண்டிருந்தது; தலைமுடி நீட்டிக்கொண்டில்லாமல் படிந்திருந்தது; முகத்தில் பருக்கள் இல்லை; அவனுக்கும் சில பழவகைகள் பிடிக்கும்; கேலிச் சித்திரங்களை விட திரைப்படங்களை அதிகம் விரும்புகிறான்; குறிப்பிட்ட சில இசைகளில் ஆர்வமுள்ளவன். அந்த சிறுவனின் முகமும் இந்த இளைஞனின் முகமும் ஒன்றுபோலவே இருந்தது. அறிவியல்பூர்வமாய் தோல், பற்கள், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் உருவ அமைப்பில் இருவரும் மற்றவரிலிருந்து வேறுபடுகின்றனர். எனினும், அந்த இரண்டு படங்களும் என்னுடையதுதான். மனிதனின் இந்த தோற்ற முரண்பாடு தத்துவமேதைகளையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு பருவத்திலும் நம்முடைய உருவ அமைப்பு மாற்றமடைந்துகொண்டே இருப்பதால் எது நம்முடைய நிஜமான உருவம்?  

வேதம் இக்கேள்விக்கு பதிலளிக்கிறது. தாயின் கருவிலே தேவன் நம்மை உருவாக்கத் துவங்கினதுமுதல் (சங். 139:13-14), படிப்படியாய் வளர்ந்து ஒரு நேர்த்தியான உருவத்தை நாம் அடைகிறோம். நம்முடைய வாழ்க்கையின் இறுதியில் நாம் எந்த உருவத்தில் இருக்கப்போகிறோம் என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தால் இயேசுவைப் போல மாறுவோம் என்பதை மட்டும் நன்கு அறிந்திருக்கிறோம் (1 யோ. 3:2): நம்முடைய சரீரம் அவருடைய தன்மையையும், நம்முடைய ஆள் தத்துவம் அவருடைய சுபாவத்தையும், பாவங்கள் தொலைந்து, வரங்கள் பிரதிபலிக்கிற வாழ்க்கையையும் பெற்றுக்கொள்வோம்.

இயேசுவின் வருகை வரும்வரை இந்த எதிர்கால உருவ மாற்றத்திற்கு நேராய் நாம் இழுக்கப்படுகிறோம். தேவன் நம்மில் கிரியை செய்யும்போது படிப்படியாய் அவருடைய சாயலை நாம் தெளிவாய் பிரதிபலிக்கமுடியும்  (2 கொரி. 3:18). நாம் தெரிந்துகொள்ளப்பட்ட நோக்கத்தை இன்னும் அடையவில்லை. ஆனால் கிறிஸ்துவைப் போல் மாறும்போது நம்முடைய நிஜமான அங்கீகாரத்தைப் பெறுகிறோம்.