எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெல்லி பீச்கட்டுரைகள்

திறந்த கரங்கள்

நானும் என்னுடைய கணவர் டானும் (Dan) எங்களுடைய வயதான பெற்றோர்களுக்கு பராமரிப்பு அளிக்க துவங்கிய அந்நாளிலே நாங்கள் இருவரும் கைகோர்த்து, ஒரு மலை உச்சியிலிருந்து கீழே விழுவதைப் போல உணர்ந்தோம். இந்த பராமரிப்பு செயல்முறையின் போது எங்களுடைய இருதயங்கள் சோதிக்கப்படுவதற்கும், வனையப்படுவதற்கும் நாங்கள் தேவனுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய ஒரு கடினமான செயலை எதிர்கொள்ளக்கூடும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி, இந்த விசேஷமான காலத்தில் புதிய வழிகளில் எங்களை அவரைப் போல மாற்றவும் தேவனுக்கு அனுமதி கொடுக்க வேண்டியதாயிற்று.

கட்டுப்பாடின்றி நான் பூமிக்கு நேராய் பாய்ந்து விழுந்து கொண்டிருப்பது போல உணர்ந்த நாட்களில், தேவன் என்னுடைய திட்டங்களையும், ஐயங்களையும், பயங்களையும், பெருமையையும், சுயநலத்தையும் காண்பித்தார். ஆனால் அவருடைய அன்பையும், மன்னிப்பையும் வழங்கவே என்னுடைய உடைந்து போன பகுதிகளை எனக்கு காண்பித்தார்.

“கிறிஸ்து இல்லை என்றல் நீ நம்பிக்கையற்று கலங்கி நிற்கும் ஒரு வெறுமையான பாத்திரமே. ஆனால் அவருக்குள் நீ முழுமை பெறுகிறாய் என்பதை நீ கண்டு உணரும் அந்நாளே, உன் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள்,” என்று என்னுடைய சபை போதகர் கூறியுள்ளார். நான் பராமரிப்பு அளித்ததின் மூலம் வாழ்வில் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் இதுவே. நான் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் சிருஷ்டித்தாரோ, அதைக் கண்டவுடன் தேவனை நோக்கித் திரும்பி அவர் கரங்களுக்கு ஒடிச்சென்றேன். சங்கீதக்காரனோடு சேர்ந்து நானும், “தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்,” எனக் கதறினேன் (சங். 139:23).

உங்களுக்காக நான் ஏறெடுக்கும் ஜெபம் இதுவே: நீங்கள் உங்கள் சூழ்நிலைகளின் மத்தியில் உங்களைக் காணும்பொழுது தேவனை நோக்கித் திரும்பி உங்களை மன்னிக்கிற, நேசிக்கிற, விரிந்த கரங்களுக்குள் ஓடிச் செல்வீர்களாக.

கோபத்துடன் கூடிய ஜெபங்கள்

குளிர் காலத்தில் ஒரு நாள், எனது தோட்டத்தில் பனிவாரிக்கருவியை எனது கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு, மிகவும் கோபத்துடனும், வேகத்துடனும் மூலையிலிருந்த மழை நீர் வெளியேற்றுக் குழாயை அடைத்துக் கொண்டிருந்த உறை பனியை நீக்கி கொண்டிருந்தேன். என்னை அவர்களது ஜன்னல்களின் வழியாகப் பார்த்த என் அயலகத்தார் என்னைக் குறித்து என்ன எண்ணுவது என்று ஒருவேளை அவர்களுக்கே தெரியாதிருக்கும். நுண் பனியை நீக்கும் பொழுது ஒவ்வொரு காலடி வைக்கும் பொழுது “என்னால் இதைச் செய்ய இயலாது, இதைச் செய்ய எனக்கு பெலன் இல்லை” என்பது பற்றிய…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் கட்டுப்படுத்துகிறார்

அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.

விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் “ஏன் நான்?” என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன் அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.

யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.

யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக. 

 

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது.