குளிர் காலத்தில் ஒரு நாள், எனது தோட்டத்தில் பனிவாரிக்கருவியை எனது கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு, மிகவும் கோபத்துடனும், வேகத்துடனும் மூலையிலிருந்த மழை நீர் வெளியேற்றுக் குழாயை அடைத்துக் கொண்டிருந்த உறை பனியை நீக்கி கொண்டிருந்தேன். என்னை அவர்களது ஜன்னல்களின் வழியாகப் பார்த்த என் அயலகத்தார் என்னைக் குறித்து என்ன எண்ணுவது என்று ஒருவேளை அவர்களுக்கே தெரியாதிருக்கும். நுண் பனியை நீக்கும் பொழுது ஒவ்வொரு காலடி வைக்கும் பொழுது “என்னால் இதைச் செய்ய இயலாது, இதைச் செய்ய எனக்கு பெலன் இல்லை” என்பது பற்றிய கருத்துக்களை மாற்றி, மாற்றி ஜெபமாக கூறிக் கொண்டிருந்தேன். ஒரு காப்பாளராக, செயல்பட வேண்டிய அநேகக் காரியங்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் எனக்கு இருந்தது. அதன் மத்தியில் உறைபனியை நீக்கும் வேலையையும் செய்ய வேண்டியதிருந்ததால் அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

“இந்த வேலையை விடச் சிறந்த வேலைக்கு நான் தகுதியானவன்”. “ தேவன் எனக்குப் போதுமானவரல்ல”. “யாரும் என்னைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை”. என்ற பல பொய்யான எண்ணங்களால் எனது கோபம் தூண்டப்பட்டிருந்தது. நமது கோபத்துடனேயே, நாம் தொடர்ந்து இருக்க எண்ணினால், நாம் கசப்பான உணர்வுகளில் சிக்கி அசுசிப்படுத்தப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவது தடைப்பட்டுவிடுகிறது. கோபத்திற்குரிய ஒரே மருந்து உண்மைதான்.

நாம் பெற்றுக்கொள்ளத் தகுதியானவற்றைத் தேவன் நமக்குத் தராமல் அதற்குப் பதிலாக இரக்கத்தைத் தருகிறார். இது தான் உண்மை. “ ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.” (சங்கீதம் 86:5) உண்மை என்ன வென்றால் நாம் பார்ப்பதுபோல் தேவன் இல்லை. அவர் நமது எண்ணங்களுக்கு மேலானவர். அவருடைய பெலன் நமக்குப் போதும். (2 கொரி 12:9) ஆயினும் அந்த நிச்சயத்தைப் பெறுமுன்பு நாம் நின்று நிதானிக்க வேண்டும். நமது சொந்த முயற்சிகளால் நமது இடர்பாடுகளை நீக்க முயற்சி எடுக்காமல் இரக்கத்தாலும், கிருபையாலும் நம்மிடம் நீட்டப்பட்ட இயேசுவின் கரத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

நமது கோபத்தை புரிந்து கொள்ளத்தக்க அளவிற்கு அவர் மேலானவர். அவருடைய குறிப்பிட்ட நேரத்தில் அவருடைய பாதையை நமக்குக் காட்டும் அளவிற்கு அவர் அன்புள்ளவர்.