Shelly Beach | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெல்லி பீச்கட்டுரைகள்

திறந்த கரங்கள்

நானும் என்னுடைய கணவர் டானும் (Dan) எங்களுடைய வயதான பெற்றோர்களுக்கு பராமரிப்பு அளிக்க துவங்கிய அந்நாளிலே நாங்கள் இருவரும் கைகோர்த்து, ஒரு மலை உச்சியிலிருந்து கீழே விழுவதைப் போல உணர்ந்தோம். இந்த பராமரிப்பு செயல்முறையின் போது எங்களுடைய இருதயங்கள் சோதிக்கப்படுவதற்கும், வனையப்படுவதற்கும் நாங்கள் தேவனுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய ஒரு கடினமான செயலை எதிர்கொள்ளக்கூடும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி, இந்த விசேஷமான காலத்தில் புதிய வழிகளில் எங்களை அவரைப் போல மாற்றவும் தேவனுக்கு அனுமதி கொடுக்க வேண்டியதாயிற்று.

கட்டுப்பாடின்றி நான் பூமிக்கு நேராய் பாய்ந்து விழுந்து கொண்டிருப்பது போல உணர்ந்த நாட்களில், தேவன் என்னுடைய திட்டங்களையும், ஐயங்களையும், பயங்களையும், பெருமையையும், சுயநலத்தையும் காண்பித்தார். ஆனால் அவருடைய அன்பையும், மன்னிப்பையும் வழங்கவே என்னுடைய உடைந்து போன பகுதிகளை எனக்கு காண்பித்தார்.

“கிறிஸ்து இல்லை என்றல் நீ நம்பிக்கையற்று கலங்கி நிற்கும் ஒரு வெறுமையான பாத்திரமே. ஆனால் அவருக்குள் நீ முழுமை பெறுகிறாய் என்பதை நீ கண்டு உணரும் அந்நாளே, உன் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள்,” என்று என்னுடைய சபை போதகர் கூறியுள்ளார். நான் பராமரிப்பு அளித்ததின் மூலம் வாழ்வில் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் இதுவே. நான் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் சிருஷ்டித்தாரோ, அதைக் கண்டவுடன் தேவனை நோக்கித் திரும்பி அவர் கரங்களுக்கு ஒடிச்சென்றேன். சங்கீதக்காரனோடு சேர்ந்து நானும், “தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்,” எனக் கதறினேன் (சங். 139:23).

உங்களுக்காக நான் ஏறெடுக்கும் ஜெபம் இதுவே: நீங்கள் உங்கள் சூழ்நிலைகளின் மத்தியில் உங்களைக் காணும்பொழுது தேவனை நோக்கித் திரும்பி உங்களை மன்னிக்கிற, நேசிக்கிற, விரிந்த கரங்களுக்குள் ஓடிச் செல்வீர்களாக.

கோபத்துடன் கூடிய ஜெபங்கள்

குளிர் காலத்தில் ஒரு நாள், எனது தோட்டத்தில் பனிவாரிக்கருவியை எனது கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு, மிகவும் கோபத்துடனும், வேகத்துடனும் மூலையிலிருந்த மழை நீர் வெளியேற்றுக் குழாயை அடைத்துக் கொண்டிருந்த உறை பனியை நீக்கி கொண்டிருந்தேன். என்னை அவர்களது ஜன்னல்களின் வழியாகப் பார்த்த என் அயலகத்தார் என்னைக் குறித்து என்ன எண்ணுவது என்று ஒருவேளை அவர்களுக்கே தெரியாதிருக்கும். நுண் பனியை நீக்கும் பொழுது ஒவ்வொரு காலடி வைக்கும் பொழுது “என்னால் இதைச் செய்ய இயலாது, இதைச் செய்ய எனக்கு பெலன் இல்லை” என்பது பற்றிய…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சிறு துண்டைக் காட்டிலும் அதிகமானது

நாமெல்லாரும் ஒரு புதிய இடத்திற்கு போகும்போது, பழைய இடத்தின் ஞாபகங்களில் நம்மில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது இயல்பு. ஆனால் அதற்கு நேர்மாறாக, அண்டார்டிகாவில் உள்ள வில்லாஸ் லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் என்ற குளிர் வெறிச்சோடிய இடத்தில் நீண்டகாலமாக வசிப்பவராக மாற, உங்களிடமிருந்து ஒரு பகுதியை விட்டுச் செல்வது மிகவும் அவசியம். அருகில் உள்ள மருத்துவமனை 625 மைல்கள் தொலைவில் இருப்பதால், ஒரு நபர் தனது அப்பென்டிக்ஸ் குடல் வெடித்தால் அதிகமான பாதிப்பிற்குள்ளாகவேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு குடிமகனும் அங்கு செல்வதற்கு முன் முதலில் குடல் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். 
ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? ஆனால் தேவனுடைய இராஜ்யத்தின் குடிமக்களாய் மாறுவதற்கு இது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால், ஜனங்கள் தங்கள் சொந்த வழியில் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால் தேவனுடைய சீஷராவது என்றால் என்ன என்பதை இயேசு விவரிக்கிறார் (மத்தேயு 16:25-27). அவர் சொல்லும்போது, “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (வச. 24) என்று சொல்லுகிறார். இது தேவனுடைய இராஜ்யத்திற்கு தடையாயிருக்கும் அனைத்தையும் விட்டுவிடுவதைக் குறிக்கிறது. மேலும் நாம் சிலுவை சுமக்க தயாராகும்போது, சமுதாய மற்றும் அரசியல் பாதிப்புகளை மரணபரியந்தம் சகிப்பதற்கு நாம் ஆயத்தமாயுள்ளோம் என்பதை அறிக்கையிடுகிறோம். விட்டுவிடுவது, மற்றும் எடுத்துச் செல்வதோடு தேவனை பின்பற்றும் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அவருடைய ஊழியத்தையும் தியாகத்தையும் பிரகடனப்படுத்துவதற்கு இது தேவனுடைய படிப்படியான உருவாக்கும் திட்டமாகும்.  
இயேசுவைப் பின்பற்றுவது என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை விட்டுச் செல்வதைக் காட்டிலும் அதிகமானது. அவரைப் பின்பற்றுவது என்பது, அவருடைய உதவியோடு, அவருக்கு ஒப்புக்கொடுத்து நம்முடைய சரீரத்தையும் அவருக்கும் முற்றிலும் கீழ்ப்படுத்துவதாகும்.

இயேசுவுடன் வீட்டில் தங்கியிருத்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, விலங்குகள் பராமரிக்கும் இடத்திலிருந்து ஜூனோ என்ற வயது வந்த கருப்பு பூனையை வீட்டிற்கு கொண்டு வந்தோம். எங்கள் வீட்டிலிருக்கும் எலிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே நான் அதை கொண்டுவந்தேன். ஆனால் எங்கள் வீட்டிலிருப்பவர்கள், செல்லப்பிராணியை விரும்பினர். எங்கள் வீடு தான் ஜூனோவின் வீடு என்றும், தன் உணவிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இங்கே தான் திரும்பிவரவேண்டும் என்றும் அது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அதற்கு கற்றுக்கொடுப்பதற்கு முதல் வாரத்தில் நாங்கள் அதிக பிராயாசம் ஏறெடுத்தோம். அதன் பிறகு ஜூனோ எங்கு சுற்றித் திரிந்தாலும், அது வீட்டிற்கு சரியாய் வந்து சேரும்.  
நம்முடைய மெய்யான வீட்டை அறியாதபட்சத்தில், நாம் நன்மை, அன்பு, மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி அலைந்துகொண்டேயிருப்போம். மெய்யான வாழ்க்கையை நாம் அடையவேண்டுமாகில், “என்னில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:4) என்று இயேசு சொல்லுகிறார். வேதாகம நிபுணரான ஃபிரடெரிக் டேல் ப்ரூனர், நிலைத்திருத்தல் என்னும் வார்த்தையானது குடும்பம் மற்றும் வீடு பற்றிய எண்ணத்தைத் தூண்டுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். எனவே புரூனர் இயேசுவின் வார்த்தைகளை “என்னோடு வீட்டில் தங்கியிருங்கள்” என்று மொழிபெயர்க்கிறார்.  
வீட்டைக் குறித்த அந்த சிந்தையை தூண்டுவதற்கு இயேசு, திராட்டைச் செடியில் நிலைத்திருக்கும் கிளைகளை உதாரணமாய் பயன்படுத்துகிறார். கிளைகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதின் வீடாகிய செடியில் நிலைத்திருக்கவேண்டும்.  
நம்முடைய பிரச்சனைகளை சரிசெய்வதற்கு அல்லது சில புதிய “ஞானத்தை” அல்லது மகிழ்ச்சியான எதிர்காலத்தை வழங்குவதற்கு வெற்று வாக்குறுதிகளுடன் பல குரல்கள் நம்மை அழைக்கின்றன. ஆனால் நாம் உண்மையாக வாழ வேண்டுமானால், நாம் இயேசுவில் நிலைத்திருக்க வேண்டும். நாம் வீட்டில் இருக்க வேண்டும்

நாம் செய்யும் அனைத்தும்

 கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் புலிசிக், தன்னுடைய காலபந்தாட்ட வரலாற்றில் பல காயங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதின் விளைவாய் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டத்தின் வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாது என்பதை அறிந்து அவர் ஏமாற்றமடைந்தார். ஆனால் தேவன் அவருக்கு தன்னை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை விவரிக்கிறார். “எப்போதும் போல, நான் தேவனை சார்ந்திருக்கிறேன்; அவர் என்னை பெலப்படுத்துகிறார்; எப்போதும் என்னோடு ஒருவர் இருப்பதைப் போல நான் உணர்கிறேன். அந்த உணர்வில்லாமல் எந்த காரியத்தையும் என்னால் செய்ய முடியாது” என்று அவர் கூறுகிறார். ஆனால் அதே ஆட்டத்தில் மாற்றாட்டக்காரராய் களமிறங்கிய புலிசிக், அந்த ஆட்டத்தின் நாயகனாய் மாறினார். அவர் விளையாடிய அந்த ஆட்டத்தில் அவர் புத்திசாலித்தனமாய் நகர்த்திய பந்து அந்த விளையாட்டில் அவருடைய அணி வெற்றிபெறுவதற்கான முக்கிய திருப்பமாய் அமைந்து, அவரை அந்த விளையாட்டின் நாயகனாய் மாற்றியது. இந்த அனுபவமானது, நம்முடைய பலவீனங்கள் தேவன் தன்னுடைய அளவிட முடியாத வல்லமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாய் கருதலாம் என்னும் விலையேறப்பெற்ற பாடத்தை அவருக்கு கற்பித்தது.   
பிரச்சனைகளை நாம் சந்திக்கும்போது, நம்முடைய சுயபெலத்தை சார்ந்துகொள்ளும்படிக்கு உலகம் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனுடைய கிருபையும் வல்லமையும் நம்மை பெலப்படுத்துகிறது என்று வேதாகம ஞானம் நமக்கு போதிக்கிறது  (2 கொரி. 12:9). ஆகையால் போராட்டங்களை நாம் தனித்து மேற்கொள்வதில்லை என்பதை அறிந்து விசுவாசத்தோடு முன்னேறுவோம். நம்முடைய பெலவீனங்கள் தேவனுடைய பெலனை விளங்கச்செய்யும் வாய்ப்புகளாய் தேவன் பயன்படுத்தி நம்மை பலப்படுத்துகிறார் (வச. 9-10). ஆகையால் நம்முடைய போராட்டங்களை தேவனை துதிக்கும் மற்றும் நன்றி செலுத்தும் வாய்ப்புகளாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு இந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் இந்த தெய்வீக அன்பின் மேன்மையை அனுபவிக்கக்கூடும்.