மன்னிப்புடன் ஒரு எதிர்காலம்
1994-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தேசத்தின் அரசு நிறவெறி அமைப்பிலிருந்து ஒரு புதிய ஜனநாயக திட்டத்தை அமல்படுத்தியது. இனப் பிரிவினையில் இருந்து (கருப்பினத்தவர் மற்றும் வெள்ளை இனத்தவர் பிரிந்து வாழ்ந்தது) ஒன்றிணைந்த மக்களாட்சிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த வருடங்களில் இனப்பிரிவினால் நடந்த குற்றங்களை எப்படி கையாள்வது என்பதை புதிய அரசாங்கத்தால் முடிவு எடுக்க முடியவில்லை.. இருப்பினும் தேச தலைவர்களால் கடந்த கால குற்றங்களை விட்டு விடவும் முடியவில்லை ஆனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்பது அந்த தேசத்தின் காயங்களை ஆழமாகிவிடும். தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயரான டெஸ்மன்ட் டுட்டு தனது “No Future Without Forgiveness” (மன்னிப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை ) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார் “நமக்கு சுலபமாக கிடைத்திருக்கலாம், பழிவாங்கும் நீதி கூட கிடைத்திருக்கும் ஆனா தென் ஆபிரிக்க முழுவதுமாக அழிந்திருக்கும்” என்று.
அந்த புதிய ஜனநாயக அரசு அமைத்த “உண்மை மற்றும் வேற்றுமையை அகற்றும்” குழு ஒன்றை அமைத்து உண்மை, நீதி, இரக்கத்தின் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தது. தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினவர்களுக்கு மறுசீரமைப்பிற்கான வழி வழங்கப்பட்டது. தைரியமாக உண்மையின் எதிர்கொண்டதால் அந்த தேசத்தால் குணமடைய முடிந்தது.
ஒருவிதத்தில், தென் ஆப்பிரிக்காவின் சங்கடங்கள் நமது போராட்டங்களையும் பிரதிபலிக்கலாம். நீதியையும் இரக்கத்தையும் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் (மீகா6:8), ஆனால் அநேக நேரங்களில் இரக்கம் என்பது பொறுப்பில்லாத தன்மையாகவும், நீதிக்காக பின்தொடர்வது பழி வாங்குவதாகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
தீமையை வெறுக்கும் அன்பை உடையவர்களாய் மாத்திரம் இல்லாமல் (ரோ 12:9) நம்மோடு இருப்பவர்களின் மறுரூபமாகுதலையும் விரும்புபவராக இருக்க வேண்டும் (ரோ 13:10). இயேசுவின் ஆவியானவரின் வல்லமையால் தீமையை நன்மையால் மேற்கொள்வது என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம் (12:21).
பயன் தரும் சோதனைகள்
15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான. தாமஸ் ஏ கெம்பிஸ் எழுதிய, யாவரும் விரும்பத்தக்க தரம் வாய்ந்த “த இம்மிட்டேஷன் ஆஃப் கிறிஸ்து” (The Imitation of Christ) என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள, சோதனைகளைக் குறித்த ஒரு கண்ணோட்டம் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக உள்ளது. சோதனைகள் வேதனைகளையும், கஷ்டங்களையும் கொண்டுவரும் என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, “சோதனைகள் பயனுள்ளவை ஏனெனில், அவை நம்மை தாழ்மைப் படுத்துகின்றது, நம்மைச் சுத்திகரிக்கின்றது, நமக்குக் கற்றுத் தருகின்றது” என்று எழுதியுள்ளார். மேலும் அவர், “வெற்றியின் திறவு கோல் தாழ்மையும், பொறுமையுமாம், இவற்றின் மூலம் நம் பகைவர்களையும் மேற்கொள்ளலாம்” என்கின்றார்.
தாழ்மையும் பொறுமையும் : என்னுடைய சோதனைகளை நான் இவற்றின் மூலம் சந்திக்கும் போது, நான் கிறிஸ்துவோடு நடக்கும் வாழ்வு எவ்வளவு வித்தியாசமானதாக இருக்க முடியும்! ஆனால், நான் அடிக்கடி வெட்கத்தோடும், ஏமாற்றத்தோடும், பொறுமையில்லாமலும் என்னுடைய போராட்டங்களில் இருந்து வெளியேற முயற்சிக்கின்றேன்.
சோதனைகளும் இன்னல்களும் வெறுமனே நம்மைப் பயப்படுத்துவதற்காக வருவன அல்ல, அவை ஒரு நோக்கத்திற்காகவே வருகின்றன, என யாக்கோபு முதலாம் அதிகாரம் கற்றுத் தருகின்றது. சோதனைகளின் வழியாக மன வேதனையும் பேரழிவும் ஏற்படும் போது, நாம் தாழ்ந்த இருதயத்தோடு, தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும் தேடும் போது, “அவர் ஒருவரையும் கடிந்து கொள்ளாமல், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கின்றார்” (வ.5). தேவனுடைய வல்லமையினாலே, நம்முடைய சோதனைகள், போராட்டங்களின் மத்தியில், நாம் பாவத்துக்கு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகின்றோம், அப்பொழுது நாம் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்போம்” (வ.4).
நாம் இயேசுவின் பேரில் நம்பிக்கையோடு இருக்கும் போது, நாம் பயத்தோடு வாழ அவசியமே இல்லை. நாம் அவருடைய நேசப் பிள்ளைகள், நாம் சோதனைகளைச் சந்திக்கும் போதும் அவருடைய அன்பின் கரத்தினுள் அமர்ந்து சமாதானத்தோடு இருக்கக் கடவோம்.
கிளைகளில் வாழுதல்
ஓர் அழுத்தம் நிறைந்த வாரக் கடைசியில், என்னுடைய மனதை உருட்டிக் கொண்டிருந்த அத்தனை உணர்வுகளையும் என்னுடைய ஆலோசகரோடு பகிர்ந்து கொண்டேன், அவளும் சிரத்தையோடு கவனித்தாள். பின்னர் அவள், ஜன்னல் வழியே, பழங்களால் நிறைந்திருந்த ஓர் ஆரஞ்சு மரத்தை எனக்குச் சுட்டிக் காட்டினாள், அதன் கிளைகள் காற்றில் அசைந்து ஆடுவதைக் கவனித்தேன்.
அம்மரங்களின் அடித்தண்டு காற்றினால் அசையவேயில்லை என்பதை என்னுடைய ஆலோசகர், என்னிடம் சுட்டிக் காண்பித்து, “நாமும் இதனைப் போலவே இருக்கின்றோம், நம் வாழ்வைப் புயல் எல்லாத் திசையிலிருந்தும் தாக்கும் போது, நம்முடைய உணர்வுகள் மேலும் கீழும், எல்லாத்திசைகளுக்கும் சுழற்றப்படுகின்றன. சில வேளைகளில் நாம் கிளைகள் மட்டும் உள்ளவர்கள் போல செயல் படுகின்றோம். நீங்கள் உங்களுடைய அடித்தண்டை கண்டுபிடிக்க உதவுவதே எங்களின் இலக்கு. இதேப் போலவே, உங்களுடைய வாழ்வும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் இழுக்கப் படும் போது, நீங்கள் உங்களுடைய கிளைகளில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நீங்கள் இன்னமும் பாதுகாப்பாகவும், நிலையாகவும் இருக்கிறீர்கள்” என்றாள்.
இந்தக் காட்சி என்னோடு ஒட்டிக் கொண்டது, இதைப் போலவே ஒரு காட்சியை, அப்போஸ்தலனாகிய பவுல், எபேசு சபையின் புதிய விசுவாசிகளுக்குக் கொடுக்கின்றார். தேவன் அவர்களுக்குக் கொடுத்த விலையேறப் பெற்ற ஈவாகிய, பெரிய நோக்கமும், மதிப்பீடுகளும் நிறைந்த புதிய வாழ்வை குறித்து அவர்களுக்கு நினைப் பூட்டுகின்றார் (எபே.2:6-10). அவர்கள் கிறிஸ்துவின் அன்பிலே வேரூன்றி, நிலைப் பெற்றவர்களாகி (3:17), மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு, அலைகிறவர்களாயிராமல் (4:14) வளரும்படி, பவுல் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்.
நம்முடைய சுய முயற்சியினால், நாம் பாதுகாப்பற்றவர்களாகவும், உடைந்து போகக் கூடியவர்களாகவும், நம்முடைய பயத்தினாலும், பாதுகாப்பின்மையினாலும் குத்தப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றோம். கிறிஸ்துவுக்குள் நமக்குக் கொடுக்கப் பட்ட அடையாளத்தோடு நாம் வாழ்வோமாகில் (வ. 22-24), தேவனோடு தரும் சமாதானத்தை, ஒருவரோடொருவர் அநுபவிப்பதோடு (வ.3), அவர் தரும் அழகினாலும் வல்லமையினாலும் ஊட்டப்பட்டு, பாதுகாக்கப் படுகின்றோம் (வ.15-16).
ரகசியம்
சில வேளைகளில் என்னுடைய பூனை ஹீத்கிளிஃப், FOMO (Fear Of Missing Out) என்பதால் பாதிக்கப்படும். நாம் எதையாவது பார்க்காமல் விட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே வாழும் இந்த வியாதியினால், அது கஷ்டப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வரும் போது, ஹீத்கிளிஃப் வேகமாக வந்து, நான் வாங்கி வந்துள்ளவற்றை ஆய்வு செய்யும், நான் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும் போது, அது தன்னுடைய பின்னங்கால் பாதங்களில் நின்றுகொண்டு, நான் வைத்திருப்பவற்றை உற்றுப்பார்க்கும், நான் அவற்றை அதனோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கும். நான் அவற்றில், அதற்குப் பிடித்தமானதைக் கொடுக்கும் போது, அது, அதன் மீதுள்ள ஆர்வத்தை இழந்து, கோபத்தோடும், சலிப்போடும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.
எனக்கு அன்பான அந்த பூனையிடம், நான் கடுமையாக நடந்து கொள்வது ஒரு பாசாங்குத் தனம் தான். எனக்குள் இருக்கிற மேலும், மேலும் வேண்டும் என்கிற ஒரு திருப்தியற்ற பசி, என்னுடைய பூனையையும் தொற்றிக்கொண்டது. என்னுடைய திருப்தியற்ற பசியைக் குறித்து, நான் சிந்தித்துப் பார்க்கும் போது, “இப்பொழுது” என்பது எனக்குப் போதுமானதாக இல்லை.
திருப்தி என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவதில்லை, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் (பிலி. 4:11). என்னென்ன காரியங்கள் நம்மை திருப்திபடுத்த முடியும் என்று நாம் நினைக்கிறோமோ, அவற்றை விடாப்பிடியாக அடைந்து விடுகிறோம், ஆனால் வேறொன்றைப் பார்த்ததும், நம்முடைய மனநிறைவு கலைந்துவிடுகிறது. இந்த திருப்தியற்ற நிலை, சில வேளைகளில் நம்மை பதட்டதிற்கு இழுத்துச் செல்கிறது. இதனால், அநேகரைக் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து நம்மை ஒதுக்கிக் கொள்கின்றோம்.
இன்னும் கூறுவோமேயானால், உண்மையான சந்தோஷத்தை அநுபவிப்பதற்குப் பதிலாக, எதைக்குறித்து பயப்பட்டோமோ, அதையே அநுபவிக்கின்றோம். வாழ்வில் மிக மோசமான விளைவுகளை அநுபவித்த பின்பு, பவுல் உண்மையான திருப்தியின் “இரகசியத்தை” வெளிப்படுத்துகின்றார் (வச. 11-12). முழுமையான திருப்தியைப் பெற நாம் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் தேவனிடம் ஒப்படைக்கும் போது, நம்மால் விளங்கிக் கொள்ளமுடியாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்கின்றோம் (வச. 6-7). கிறிஸ்துவின் ஆழமான வல்லமைக்குள்ளும், அழகிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இழுத்துக் கொள்ளப்படுவோம்.
இங்கே கொள்ளிவாய் விலங்குகள் உள்ளனவா?
பழங்காலத்தில் வந்த உலகப் படங்களின் எல்லைகளில், “இங்கே இராட்சத விலங்கினங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டிருப்பார்கள். உலகப் படங்களை உருவாக்கியவர்கள் அவ்வாறு நினைத்திருந்தனர். அநேகமான உலகப் படங்களின் எல்லைகளில், பயங்கரமான இராட்சத விலங்குகள் மறைந்திருப்பது போன்ற படங்கள் காணப்படும். இது பழங்கால கதைகள் தரும் செய்தி.
இடைக்காலத்தில், உலகப் படங்களை வரைந்தவர்கள், இந்த வார்த்தைகளை எழுதினார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லையெனினும், அவர்கள் எழுதியிருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன். ஒருவேளை அது நல்லதல்ல என்று கருதினாலும், நாம் அறியாத ஓர் இடத்திற்கு தைரியமாகச் செல்ல துணியும் போது, அங்கு என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதபடியால், “இங்கே இராட்சத விலங்குகள் உள்ளன” என்ற எச்சரிக்கை கொடுப்பது சரியானதாகவே படுகின்றது.
நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆபத்துக்களைத் தவிர்க்கவும் ஏற்றதாக நான் கருதும் இந்தக் கொள்கையிலும் ஒரு பிரச்சனை உள்ளது. அது, இயேசுவின் விசுவாசியான நான் தைரியமாகச் செயல்பட வேண்டும் என்பதை மறுப்பதாக உள்ளது. (2 தீமோ 1:7)
உண்மையிலேயே ஆபத்தானது, என்ன என்பதை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நீங்கள் கருதலாம். பவுல் கூறுவதைப் போன்று, இந்த உடைந்த உலகத்தில், தைரியமாக கிறிஸ்துவைப் பின் பற்றுவது என்பது சில வேளைகளில் வேதனை தருவதாக இருக்கலாம் (வ.8). சாவிலிருந்து ஜீவனுக்குள் கொண்டுவரப்பட்ட நாம், நம்மை ஆவியானவரின் வழி நடத்தலுக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கும் போது, ஏன் நம்மால் தைரியமாக வாழ முடியாது? (வ.9-10,14)
தேவன் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய ஈவு என்னவெனின், அவர் நமக்கு முன் சென்று நம்மை வழி நடத்துகின்றார். நாம் இதுவரை செல்லாத பாதைகளின் வழியே செல்ல நேர்ந்தாலும், நாம் அவரைப் பின் தொடர்வோம். மாறாக, பயத்தினால், தடுமாறி, நாம் பின்வாங்கிப் போவோமேயானால் அதையும் விட சோகமான வாழ்வு வேறொன்றுமில்லை (வ.6-8,12). நம் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்போம், நம் எதிர் காலத்தை அவர் பார்த்துக்கொள்வார் (வ.12).
“உன்னை நேசிக்கின்றேன்—முழு உலகளவிற்கு”
என்னுடைய உறவினளான, மூன்று வயது ஜென்னா வெளிப்படுத்தும் ஒரு காரியம் என் மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒரு வாழைப்பழ கிரீம் பை, டிராம்பொலின் விளையாட்டு அல்லது ஃப்ரிஸ்பீ விளையாட்டு, ஏதோ ஒன்றை அவள் மிகவும் நேசித்தால், அதை வெளிப்படுத்த “உலகளவுக்கு உன்னை நேசிக்கின்றேன்” என்று தன் கரங்களை விரித்து அசைத்து தெரிவிப்பாள்.
இந்த அளவுக்கு நான் எதையாகிலும் நேசித்திருக்கின்றேனா என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. அப்படி ஒன்றும் நினைவிலில்லை.
“தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:8,16) என யோவான் திரும்பத் திரும்ப எழுதுகின்றான். நம்முடைய கோபம்,பயம் அல்லது வெட்கம் போல அல்லாமல் உண்மையின் ஆழ்ந்த அடித்தளமாகிய, தேவனுடைய அன்பை, வளர்ந்தவர்களாகிய நமக்கு புரிந்து கொள்வது கடினமாயிருக்கின்றது. எதைக் குறித்து நாம் மிகவும் அஞ்சுகின்றோமோ அதன் அடிப்படையில், இவ்வுலகு நம்மை சில குழுக்களாக பிரித்து வைத்துள்ளது. நாம் எதை உண்மை எனக்கருதுகின்றோமோ அதைக் குறித்து எச்சரிக்கின்ற குரலை நாம் அலட்சியப்படுத்தி, அல்லது குற்றப்படுத்தி விட்டு, நாம் ஏதோ ஒன்றில் இணைந்து விடுகிறோம்.
வஞ்சகங்கள், அதிகார போராட்டங்களின் மத்தியில், தேவனுடைய அன்பு, இருளில் பிரகாசிக்கின்ற ஒளியாக, நம்மை தாழ்மை, நம்பிக்கை, மற்றும் அன்பின் பாதையைக் கற்றுக் கொள்ளும் படி, அழைக்கின்றது. (1:7-9; 3:18) .இந்த ஒளி காட்டும் உண்மைகள் வருத்தத்தை தருவதாக இருந்தாலும், நாம் இன்னும் நேசிக்கப்படுகிறோம் என்பதை தெரிந்து கொள்வோம் (4:10,18; ரோம. 8:1). ஜென்னா என் மீது சாய்ந்து கொண்டு, மென்மையாக என்னுடைய காதுக்குள் “உலகளவுக்கு உன்னை நேசிக்கிறேன்” என்றாள், நானும் “நான் உன்னை உலகளவு நேசிக்கிறேன்” என்றேன். ஒவ்வொரு கணமும் நான் அளவற்ற அன்பிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இருப்பதை நினைப்பதற்கு கிடைத்த தருணத்திற்காக நன்றி கூறுகிறேன்.
திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே
தூண்டி விட்டு திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே. ஏனெனில் “ட்ரோல்” (TROLL) என்றழைக்கப்படும் யுக்தி வலைதளங்களில் பரவி வருகின்றது. வேண்டுமென்றே பிறரை கோபமடையச் செய்யும், காயப்படுத்தும் கருத்துக்களை செய்திகளில் அல்லது சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிக்கின்றார்கள். ஆனால் இத்தகைய செய்திகளுக்கு செவி சாய்க்கவில்லையெனில் அவர்களால் உரையாடல்களைத் திசை திருப்புவது கடினமாகி விடுகின்றது.
ஆக்கபூர்வமான உரையாடல்களுக்குச் சற்றும் ஆர்வம் காட்டாத மக்களைச் சந்திப்பது என்பது ஒரு புதிய காரியமல்ல. “தூண்டி விட்டு திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே” என்பதற்குச் சமமான வேதவாக்கியம் நீதிமொழிகள் 26:4ல் கொடுக்கப் பட்டுள்ளது. “மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறு உத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்” என்பது.
ஆனால் மிகவும் பிடிவாதமான குணமுடைய மனிதனும் விலையேறப்பெற்ற தேவனுடைய சாயலைப் பெற்றவன். நாம் ஒரு வேளை பிறரோடு அதிகம் பேசுபவராக இல்லையெனில் நாம் நம்மைக் குறித்து உயர்வாக மதிப்பிடுபவராகவும், பிறரை மதியாதவராகவும், தேவனுடைய கிருபைக்குத் தூரமானவர்களாகவும் கருதப்படக் கூடும் (மத். 5:22)
எனவே தான் நீதிமொழிகள் 26:5 இதற்கு மாறான ஓர் ஆலோசனையைத் தருகின்றது. நாம் தாழ்மையோடு ஜெபத்தில்தேவனைச் சார்ந்து கொண்டால்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அன்பை வெளிப் படுத்த முடியும். (கொலோசேயர் 4:5-6) சில வேளைகளில் நாம் பேச வேண்டும், வேறு சில வேளைகளில் அமைதியாயிருப்பதே மேலானது.
நாம் தேவனுக்குச் சத்துருவாக இருந்த போதும் நம்மை அவரண்டை இழுத்துக் கொண்ட அதே தேவன் இன்றும் ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் வல்லமையாகக் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எல்லா சூழ்நிலைகளிலும் தெரிந்து கொண்டால் நாம் சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். (ரோம. 5:10). கிறிஸ்துவின் அன்பை நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர் தரும் ஞானத்தைச் சார்ந்து கொள்வோம்.
நீங்கள் ஓய்வெடுக்கவேண்டும்!
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியிடம் மருத்துவர், 'நீங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்கவேண்டும்", என அறிவுறுத்துகிறார். 'ஓய்வு?" நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன் என்று குழப்பத்தோடு பதிலளித்தார் வில்மர். அதே குழப்பத்தோடு, அவர் மிகவும் ஏளனமாக, 'நான் இதைவிட ஓய்வாக இருக்க வேண்டுமெனில், அது என்னுடைய மரணத்தின்போது தான்", என்று கூறினார்.
இதை இணைத்துப் பார்க்க முடியுமா? டாக்டரின் பலவிதமான ஆலோசனைகள் வில்பருக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், வில்பரின் பதில்கள் நியாயமானதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்தக் காட்சியானது நகைப்பிற்குரியதாகிறது. ஏனெனில், நாம் குழப்பமடையும்போது எவ்வாறு உணர்கிறோம்- நாம் சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே பயமுறுத்தக்கூடியதாக அமைகிறது.
நாம் பயங்கரமான சூழ்நிலையில் இருக்கும்போது, நமக்கு ஓய்வு தேவை என்ற ஆலோசனை நமக்கு ஏளனமாகப்படுகிறது. என் வாழ்வின் பயமுறுத்தும் பல சூழ்நிலைகள் என்னை இறுக்கும்போது, மரணக்கட்டுகள் (சங். 116:3) என்னைச் சுற்றிக் கடினமாக பிடித்து இழுக்கும்போது, என்னுடைய ஒவ்வொரு சித்தமும் அதற்கு எதிராகப் போராடவேண்டும் என்று நினைக்குமேயொழிய ஓய்வாக இருக்கவேண்டும் என்று நினைக்காது.
'அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்." (சங். 116:4). அப்பொழுது ஆச்சரியமாக ஏதோ ஒன்று எனக்கு நேரிடுகிறது. எனக்குள்ளாக இறுக்கப்பட்டிருக்கிற அந்த முடிச்சு இளகுகிறது (வச. 7). என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு சமாதானம் எனக்குள்ளாக விரைவாக ஊடுருவி வருகிறது. என்னைச் சுற்றியுள்ள ஆவியானவரின் பிரசன்னமானது என்னை ஆறுதல் படுத்தும்போது, நான் சுவிசேஷத்தின் இதயமான சத்தியத்தை நான் ஓரளவு புரிந்து கொள்கிறேன். அதாவது, நம்முடைய ஆண்டவரின் பலத்த புயத்திற்குள் நம்மை அர்ப்பணிக்கும் போது, நாம் சிறந்த முறையில் போராடமுடியும் என்ற சத்தியத்தைப் புரிந்து கொள்ளுகிறோம் (1 பேது. 5:6,7).
விலையேறப்பெற்றவர்
“என் பொக்கிஷம். . .” டால்கினின் லார்ட் ஆப் த ரிங்ஸ் என்கிற தொடர்கதைகளில் வருகிற “கொலும்” கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது. மூன்றுபாக திரைப்படமாகவும் இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. மெலிந்து உடலுடன், “சக்தி தரும் அரிய மோதிரத்தின்மேல்” கொள்ளை ஆசைகொண்டு அலைகிற கொலும் என்கிற குள்ளனை, இன்று பேராசைக்கும், தீராதவெறிக்கும், பித்துப்பிடித்த நிலைக்கும் மிகச்சரியான ஓர் அடையாளமாகக் காட்டலாம்.
“கொலும்” கதாபாத்திரம் சிக்கலானதும்கூட. மோதிரத்தின் மேலான விருப்பும்-வெறுப்பும், தன் மேலான விருப்பும்-வெறுப்பும் அதை பாடாய்ப்படுத்தும். “கொலுமின்” இந்த மனக்குமுறல்கள் போலத்தான் இன்று நம் ஒவ்வொருவருடைய மனவேட்கைகளும் உள்ளன. ஏதாவது ஒரு காரியத்தின்மேல் குறியாக இருப்போம் அல்லது “அதிகமாக” வேண்டுமென்கிற வேண்டாத ஏக்கம் இருக்கும். நாம் “பொக்கிஷமாகக்” கருதுகிற அந்தக் காரியங்கள் கிடைத்தால்தான் நமக்கு நிம்மதியே வரும். உண்மை என்னவென்றால், நமக்கு மனதிருப்தியைத் தருமென நாம் நினைக்கிற அந்தக் காரியங்கள்தாமே முன்பைவிட வெறுமையான உணர்வை உண்டாக்கிடும்.
ஆனால் இதைவிட மேலான ஒரு வாழ்க்கையும் இருக்கிறது. சங்கீதம் 16இல் தாவீது சொல்வதுபோல, நம் இருதயங்களின் ஏக்கங்கள் நம்மை இளைக்கச்செய்துவிடும்போல மிரட்டும்போது, மனநிம்மதி கிடைக்காமல் திண்டாடும்போது (வசனம் 4), தேவனிடம் அடைக்கலம் உண்டு என்கிற ஞாபகம் வரவேண்டும் (வச. 1), ஒவ்வொரு நற்காரியமும் அவரிடமிருந்து வருகிறது என்கிற ஞாபகம் வரவேண்டும் (வச. 2.)
அவற்றைப் பார்க்கும்போது மனநிம்மதி உண்டாகிறது என்பது தவறானது, பார்க்கும் நற்காரியங்களில் தேவ அழகு தெரிகிறது என்பதற்காகப் பார்க்கவேண்டும். (வசனம் 8). அப்போது மெய்யான மனரம்மியத்தை அனுபவிக்கலாம். தேவனுடைய சமுகத்தில் “பரிபூரண ஆனந்தம்” கிடைக்கும், “ஜீவ மார்க்கத்தில்” இன்றும் என்றென்றும் அவரோடு நடக்கலாம் (வச.11).