மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியிடம் மருத்துவர், ‘நீங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்கவேண்டும்”, என அறிவுறுத்துகிறார். ‘ஓய்வு?” நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன் என்று குழப்பத்தோடு பதிலளித்தார் வில்மர். அதே குழப்பத்தோடு, அவர் மிகவும் ஏளனமாக, ‘நான் இதைவிட ஓய்வாக இருக்க வேண்டுமெனில், அது என்னுடைய மரணத்தின்போது தான்”, என்று கூறினார்.

இதை இணைத்துப் பார்க்க முடியுமா? டாக்டரின் பலவிதமான ஆலோசனைகள் வில்பருக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், வில்பரின் பதில்கள் நியாயமானதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்தக் காட்சியானது நகைப்பிற்குரியதாகிறது. ஏனெனில், நாம் குழப்பமடையும்போது எவ்வாறு உணர்கிறோம்- நாம் சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே பயமுறுத்தக்கூடியதாக அமைகிறது.

நாம் பயங்கரமான சூழ்நிலையில் இருக்கும்போது, நமக்கு ஓய்வு தேவை என்ற ஆலோசனை நமக்கு ஏளனமாகப்படுகிறது. என் வாழ்வின் பயமுறுத்தும் பல சூழ்நிலைகள் என்னை இறுக்கும்போது, மரணக்கட்டுகள் (சங். 116:3) என்னைச் சுற்றிக் கடினமாக பிடித்து இழுக்கும்போது, என்னுடைய ஒவ்வொரு சித்தமும் அதற்கு எதிராகப் போராடவேண்டும் என்று நினைக்குமேயொழிய ஓய்வாக இருக்கவேண்டும் என்று நினைக்காது.

‘அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.” (சங். 116:4). அப்பொழுது ஆச்சரியமாக ஏதோ ஒன்று எனக்கு நேரிடுகிறது. எனக்குள்ளாக இறுக்கப்பட்டிருக்கிற அந்த முடிச்சு இளகுகிறது (வச. 7). என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு சமாதானம் எனக்குள்ளாக விரைவாக ஊடுருவி வருகிறது. என்னைச் சுற்றியுள்ள ஆவியானவரின் பிரசன்னமானது என்னை ஆறுதல் படுத்தும்போது, நான் சுவிசேஷத்தின் இதயமான சத்தியத்தை நான் ஓரளவு புரிந்து கொள்கிறேன். அதாவது, நம்முடைய ஆண்டவரின் பலத்த புயத்திற்குள் நம்மை அர்ப்பணிக்கும் போது, நாம் சிறந்த முறையில் போராடமுடியும் என்ற சத்தியத்தைப் புரிந்து கொள்ளுகிறோம் (1 பேது. 5:6,7).