சமையல் வேலை, நிகழ்வுகளைத் திட்டமிடுதல், உணவு ஆலோசகர் மற்றும் செவிலி போன்ற பொறுப்புகளை நிறைவேற்றுகிறவள் தான் நவீனத் தாயார். 2016ல் ஏற்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு சராசரித் தாயாரானவள் ஒரு வாரத்தில் 59-96 மணிநேரங்கள் குழந்தைக்கான வேலைகளில் ஈடுபடுகின்றாள் என்று கூறப்படுகின்றது. தாய்மார்கள் அதிகக்களைப்படைவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு தாய் என்கின்ற போது, அவள் குழந்தைக்காக அதிகநேரம் செலவழிக்கின்றாள் என்பதேயாகும். ஏனெனில், இவ்வுலகினை அறிந்து கொள்ள குழந்தைக்கு அதிக உதவி தேவைப்படுகின்றது.

என்னுடைய நாட்கள் நீண்டதாக நான் உணரும் போது மற்றவர்கள் மீதான அக்கறையே நான் நாட வேண்டிய முக்கியமான ஒன்று என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். பணியாளர்களை இயேசுவானவர் உயர்த்திக்காட்டும் பொழுது அதைக்குறித்த நம்பிக்கை எனக்குள் ஆழமாக உண்டாகிறது.

மாற்கு சுவிசேஷத்தில் சீடர்களுக்கு மத்தியில் பரலோக இராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று ஒரு வாக்குவாதம் உண்டாகிறது. இயேசுவானவர் அமைதியாக உட்கார்ந்து அவர்களுக்கு, ‘எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்” (மாற். 9:35) என்று கூறுகிறார். பிறகு ஒரு சிறு பிள்ளையைக் கையில் எடுத்து, மற்றவர்களுக்கு, குறிப்பாக நம்மில் மிகவும் உதவியற்றவர்களுக்கு சேவை செய்வதைக்குறித்த உதாரணத்தைக் கற்பித்தார். (வச. 36,37).

கிறிஸ்துவின் பதிலானது, பரலோக இராஜ்ஜியத்தில் எது பெரியது என்பதை நமக்குத் தெளிவாக விளக்கிக்காட்டுகிறது.மற்றவர்களுக்கு மனமார்ந்த உதவிகளைச் செய்வதே அவருடைய தரமாக இருக்கிறது. ஊழியம் செய்வதைத் தெரிந்து கொண்டவர்கள்மேல், அவருடைய வல்லமையளிக்கும் பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும் (வச. 37). உங்கள் குடும்பத்திலோ அல்லது சமுதாயத்திலோ நீங்கள் ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதிக உற்சாகத்தோடு அதைச் செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் ஊழியம் செய்யும் நேரத்தையும், முயற்சிகளையும் இயேசுவானவர் அதிகமாக கனப்படுத்த விரும்புகிறார்.