என்னுடைய பேரப்பிள்ளைகளில் ஒருத்தி தன்னுடைய முயல் பொம்மையை எங்களுடைய நெருப்புமூட்டும் இடத்திற்கு அருகிலுள்ள கண்ணாடிக்குப் பக்கத்திலே கொண்டு போனாள். அதனால் அந்த பொம்மையின் மேலுள்ள லினென் துணியானது மிகவும் சுருங்கிப் போய் அந்த முயல் பொம்மை களையிழந்தது. கண்ணாடியும் பாதிக்கப்பட்டது. இறுதியாக, நெருப்புப் பகுதியை சீர்செய்ய வல்லுநர் ஒருவரின் ஆலோசனையின்படி, அந்தக் கண்ணாடியை புதிதானது போல் துடைத்துவிட்டோம். அதற்குப் பிறகு பஞ்சு நிரப்பப்பட்ட பொம்மைகளை அதற்கு அருகில் கொண்டு செல்வதைத் தவிர்த்துவிட்டோம்.

வேதாகமும் பல சமயங்களில் தீர்வுகளைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. வாழ்க்கையை எவ்வாறு எளிதாக வாழலாம் என்று கற்றுக்கொடுக்கிறது. இது உண்மையாக இருந்த போதிலும் கிறிஸ்துவை கனம் பண்ணும் வாழ்க்கையை எவ்விதம் வாழலாம் என்பதைக்குறித்து அதிகமாக போதிக்கிறது. அது மாத்திரம் இப்புத்தகத்தின் நோக்கமல்ல. மனிதனின் மிகப்பெரிய தேவையான பாவத்திலிருந்தும், தேவனிடமிருந்து நம்மைப் பரிக்கும் நித்திய ஆக்கினையிலிருந்தும் காப்பாற்றப்படுகிற மிகப்பெரிய ஒரு தீர்வினை போதிக்கிறது.

இரட்சிப்பின் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட ஆதியாகமம் 3:15 முதல் புதிய நம்பிக்கையான புதிய வானம், புதிய பூமி (வெளி. 21:1-2) வரையிலும், தேவன், நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கவும், அவரோடு கூட உள்ள ஐக்கியத்தை சந்தோஷத்தோடே அனுபவிக்கவும் ஒரு நித்தியமான தேவதிட்டத்தை வைத்திருக்கிறார் என வேதாகமம் போதிக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு ஆலோசனையிலும் நாம் எவ்விதம் வாழவேண்டும் என்பதை வேதாகமம் இயேசுவிற்கு நேராக நம்மை வழிநடத்துகிறது. அவரே நம்முடைய மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்கமுடியும்.

தேவனுடைய புத்தகத்தைத் திறக்கும்போதே, நாம் இயேசுவைக் குறித்தும், அவர் கொடுக்கின்ற பாதுகாப்பைக் குறித்தும், நாம் அவருடைய பிள்ளைகளாக எவ்வாறு வாழலாம் என்பதைக்குறித்தும் அறிந்து கொள்ளுகிறோம். எல்லாவற்றிற்கும் அவர் மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கிறார்.