ஸ்டீபன் கிழக்கு லண்டனின் மோசமான பகுதியில் வளர்ந்து தன்னுடைய 10ஆவது வயதிலே குற்றவாளியானான். அவன், ‘எல்லாரும் போதைப்பொருள் விற்று, ஏமாற்றுகிறவர்களாயிருந்து, கொள்ளையடித்து வாழ்பவர்களோடு சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை” எனக் கூறினான். ஆனால், அவன் இருபது வயதாகும் போது, அவன் கண்ட ஒரு கனவு அவன் வாழ்வையே மாற்றியது. ‘ஸ்டீபன், நீ கொலை செய்தமைக்காக சிறைக்கு செல்லவிருக்கிறாய்”, என்று தேவன் என்னிடம் கூறக்கேட்டேன். இந்த விளக்கமான கனவானது அவனுக்கு ஒரு எச்சரிப்பாக மாறி, அவனை தேவனுக்கு நேராகத் திருப்பி ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வைத்தது. பரிசுத்த ஆவியானவர் அவன் வாழ்வை மாற்றினார்.

ஸ்டீபன் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன்மூலம் விளையாட்டுப்போட்டிகளின் வாயிலாக, உள் பட்டணத்து பிள்ளைகளுக்கு ஒழுக்கம், மரியாதை மற்றும் சுத்தமான வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தான். அந்தப் பிள்ளைகளோடு ஜெபித்து அவர்களைப் பயிற்றுவிப்பதின் மூலம் தேவனுடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவந்தான். ‘வழிதப்பிப்போன கனவுகளைத் திரும்பிக்கட்டுதல்” என அதற்குப் பெயரிட்டான்.

தேவனை நாடி நம்முடைய பழையவைகளை மறந்து வாழ்வோமானால்-நாமும் ஸ்டீபனைப்போல் ஆவோம். புதிய வழியான வாழ்க்கையைத் தழுவிக்கொள்ள பவுல் எபேசியருக்குக் கொடுத்த அறிவுரையின்படி நாமும் வாழலாம். நம்முடைய பழைய சுயமானது, ‘ஏமாற்றுகின்ற இச்சைகளினால் பாதிக்கப்படும் பொழுது,” நாம் தினந்தோறும் ‘புதிய மனுஷனை தரித்துக் கொள்ளலாம்”. அது தேவனுக்கு ஏற்ற அவரைப் போலாகும் சுபாவமாக மாறும் (எபே. 4:22,24). அவருடைய பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையோடு, அவரைப் போல நம்மையும் மாற்றுவதற்கு, இந்த தொடர்ச்சியான சுத்திகரிப்பினைத் தழுவிக்கொள்ளலாம்.

ஸ்டீபன், ‘என் வாழ்க்கையை மாற்றின விசுவாசமானது, ஒரு முக்கியமான அஸ்திபாரமாக எனக்கு அமைந்தது”, என்று கூறுகிறார். இது உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு உண்மையாகும்?