ஓர் அழுத்தம் நிறைந்த வாரக் கடைசியில், என்னுடைய மனதை உருட்டிக் கொண்டிருந்த அத்தனை உணர்வுகளையும் என்னுடைய  ஆலோசகரோடு பகிர்ந்து கொண்டேன், அவளும் சிரத்தையோடு கவனித்தாள். பின்னர் அவள், ஜன்னல் வழியே, பழங்களால் நிறைந்திருந்த ஓர் ஆரஞ்சு மரத்தை எனக்குச் சுட்டிக் காட்டினாள், அதன் கிளைகள் காற்றில் அசைந்து ஆடுவதைக் கவனித்தேன்.

அம்மரங்களின் அடித்தண்டு காற்றினால் அசையவேயில்லை என்பதை என்னுடைய ஆலோசகர், என்னிடம் சுட்டிக் காண்பித்து, “நாமும் இதனைப் போலவே இருக்கின்றோம், நம் வாழ்வைப் புயல் எல்லாத் திசையிலிருந்தும் தாக்கும் போது, நம்முடைய உணர்வுகள் மேலும் கீழும், எல்லாத்திசைகளுக்கும் சுழற்றப்படுகின்றன. சில வேளைகளில் நாம் கிளைகள் மட்டும் உள்ளவர்கள் போல செயல் படுகின்றோம். நீங்கள் உங்களுடைய அடித்தண்டை கண்டுபிடிக்க உதவுவதே எங்களின் இலக்கு. இதேப் போலவே, உங்களுடைய வாழ்வும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் இழுக்கப் படும் போது, நீங்கள் உங்களுடைய கிளைகளில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நீங்கள் இன்னமும் பாதுகாப்பாகவும், நிலையாகவும் இருக்கிறீர்கள்” என்றாள்.

இந்தக் காட்சி என்னோடு ஒட்டிக் கொண்டது, இதைப் போலவே ஒரு காட்சியை, அப்போஸ்தலனாகிய பவுல், எபேசு சபையின் புதிய விசுவாசிகளுக்குக் கொடுக்கின்றார். தேவன் அவர்களுக்குக் கொடுத்த விலையேறப் பெற்ற ஈவாகிய, பெரிய நோக்கமும், மதிப்பீடுகளும் நிறைந்த புதிய வாழ்வை குறித்து அவர்களுக்கு நினைப் பூட்டுகின்றார் (எபே.2:6-10). அவர்கள் கிறிஸ்துவின் அன்பிலே வேரூன்றி, நிலைப் பெற்றவர்களாகி (3:17), மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு, அலைகிறவர்களாயிராமல் (4:14) வளரும்படி, பவுல் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்.

நம்முடைய சுய முயற்சியினால், நாம் பாதுகாப்பற்றவர்களாகவும், உடைந்து போகக் கூடியவர்களாகவும், நம்முடைய பயத்தினாலும், பாதுகாப்பின்மையினாலும் குத்தப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றோம். கிறிஸ்துவுக்குள் நமக்குக் கொடுக்கப் பட்ட அடையாளத்தோடு நாம் வாழ்வோமாகில் (வ. 22-24), தேவனோடு தரும் சமாதானத்தை, ஒருவரோடொருவர் அநுபவிப்பதோடு (வ.3), அவர் தரும் அழகினாலும் வல்லமையினாலும் ஊட்டப்பட்டு, பாதுகாக்கப் படுகின்றோம் (வ.15-16).