அமிஸ்டட் (Amistad) என்ற ஆங்கில படத்தில் வரும் கதையில், 1839 ஆம் ஆண்டு, மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அடிமைகளை, வேறு இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்த படகை, அந்த அடிமைகள் மேற்கொண்டனர், அந்த படகின் கேப்டனையும் வேறு சில நபர்களையும் கொன்றனர், ஆனால் உடனடியாக அவர்கள் பிடிபட்டனர், சிறையில் அடைக்கப் பட்டனர், பின்னர், விசாரணைக்கு கொண்டு செல்லப் பட்டனர், ஒரு மறக்க முடியாத நீதிமன்ற காட்சியில், அடிமைகளின் தலைவன், எப்படியாகிலும் தனக்கு விடுதலை தரும்படி, உணர்ச்சிவசத்தோடு கெஞ்சுகின்றான். மூன்று எளிய வார்த்தைகள், சங்கிலிகளால் கட்டப்பட்ட ஒரு மனிதனின் வாயிலிருந்து, உடைபட்ட ஆங்கில வார்த்தைகளாக திரும்பத் திரும்ப, மேலும் மேலும் வலிமையோடு வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அந்த நீதி மன்றமே அமைதியாக இருக்கின்றது, “எங்களுக்கு விடுதலை தாருங்கள்!” என்பதே அந்த வார்த்தைகள். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது, அந்த மனிதர்கள் விடுதலைப் பெற்றார்கள்.

இன்றைக்கு நம்மில் அநேகர் உடல் ரீதியாக கட்டப்பட்டவர்களாய் இல்லையெனினும், பாவத்தின் பிடியிலிருந்து ஆவியின் உண்மையான விடுதலையை இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை. யோவான் 8:36ல் கூறப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் உண்மையான விடுதலையைக் கொடுக்கின்றது. “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என்கின்றார். இயேசு தன்னை உண்மையான விடுதலையைக் கொடுப்பவராகச் சுட்டிக் காண்பிக்கின்றார், ஏனெனில் அவரை விசுவாசிக்கிற யாவருக்கும் அவர் உண்மையான மன்னிப்பை வழங்குகின்றார். கிறிஸ்துவின் போதனையைக் கேட்ட சிலர் விடுதலையைப் பெற விரும்பினாலும் (வச. 33), இயேசுவைக் குறித்த அவர்களின் வார்த்தையும், நடத்தையும், செயலும் அவர்களை விடுதலை பெற முடியாதவர்களாகச் செய்தது.

அந்த அடிமையின் வேண்டுதலை எதிரொலிக்கின்றவர்களின் வார்த்தையைக் கேட்க இயேசு ஆவலாய் இருக்கின்றார், நாமும் “எனக்கு விடுதலையைத் தாரும்!” என்று கேட்போமா? அவநம்பிக்கையினாலும், பயத்தினாலும் மற்றும் தோல்வியினாலும் விலங்கிடப்பட்டவர்களாய் இருக்கின்றவர்களின் கதறலை கேட்க, மனதுருக்கத்தோடு இயேசு காத்திருக்கின்றார். விடுதலை இருதயத்தில் ஏற்பட வேண்டும். நம்மை பாவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்பதை விசுவாசிக்கிறவர்களே, அவருடைய மரணம், உயிர்த்தெழுதலின் மூலம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.