நடந்து போ, ஓடாதே!
ஒவ்வொரு நாளின் விடியலையும் அவள் வரவேற்பதை நான் காண்கிறேன். அவள் எங்கள் உள்ளூர் பவர் வாக்கர். நான் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, அவள் சாலையின் முனையில் இருப்பாள். பெரிய ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு, முழங்கால் உயரமான, வண்ணமயமான சாக்ஸ் போட்டுக்கொண்டு, அவளது கைகள் மற்றும் கால்களை மாறி மாறி இயக்கி நடந்து கொண்டு, எப்போதுமே ஒரு காலை தரையில் வைத்தவளாய் இருப்பாள். இந்த விளையாட்டு சாதாரணமான ஓடுகிற பயிற்சி விளையாட்டல்ல; இது வேறுபட்டது. பவர் வாக்கிங் என்பது ஒரு அவசியமான கட்டுப்பாட்டை உள்ளடக்கியது, ஓடுவதற்கான உடலின் இயற்கையான விருப்பத்தின் மறுசீரமைப்பு. இது ஓடுவது போல் தெரியவில்லை என்றாலும், ஓடுவதற்கு அல்லது ஜாகிங் செய்வதற்கு எவ்வளவு ஆற்றல், கவனம் மற்றும் சக்தி தேவையோ, இதை செய்வதற்கு அதைவிட அதிகம் தேவை. ஆனால் இது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பயிற்சி.
கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சக்தி - அதுதான் முக்கியம். பவர் வாக்கிங் போன்ற வேதாகம மனத்தாழ்மை பெரும்பாலும் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மை, அது இல்லை. தாழ்மை என்பது நம் பலங்களையும் திறன்களையும் குறைக்கவில்லை; மாறாக, ஒரு அதிகாலை பவர் வாக்கிங் செய்பவரை அவருடைய மனது எப்படி கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் என்று அனைத்தையும் கட்டுப்படுத்துகிறதோ, அதைப் போலவே மனத்தாழ்மை நம்மை கட்டுப்படுத்துகிறது.
“மனத்தாழ்மையாய் நட” என்ற மீகாவின் வார்த்தைகள் தேவனை மீறிப்போகும் நம்முடைய விருப்பத்தை கட்டுப்படுத்துகிறது. அவர் “நியாயஞ்செய்து இரக்கத்தை சிநேகி” என்று கூறுகிறார் (6:8). அத்தோடு ஏதாவது செய்ய வேண்டும், அதையும் விரைவாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டுவரக்கூடும். நம் உலகில் அன்றாட அநீதிகள் மிக அதிகமாக இருப்பதால் அது நியாயமானது. ஆனால் நாம் தேவனால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும். பூமியில் அவருடைய ராஜ்யத்தின் விடியலில் அவருடைய விருப்பத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதே நம்முடைய குறிக்கோள்.
எளியோருக்கு உதவுதல்
அவர் பெயர் ஸ்பென்சர். ஆனால் எல்லோரும் அவரை "ஸ்பென்ஸ்" என்று அழைக்கிறார்கள். அவர் உயர்நிலைப் பள்ளியில் மாநில தடகள சாம்பியனாக இருந்தார்; பின்னர் அவர் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் படித்தார். அவர் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றில் வசித்து வருகிறார், மேலும் ரசாயன பொறியியல் துறையில் மிகவும் மதிக்கப்படும் நபராக இருக்கிறார். ஆனால் இன்றுவரை ஸ்பென்ஸின் மிகப்பெரிய சாதனைகளை என்றூ நீங்கள் அவரிடம் கேட்டால், அவர் மேற்கண்ட விஷயங்களில் எதையும் குறிப்பிட மாட்டார். சில மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் தேவை மிகுந்த நாட்டிற்கு மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் நாட்ட்டின் வறுமை நிறைந்த பகுதிகளில் தான் நிறுவுவதற்கு உதவிய பயிற்சி திட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை பார்க்க உற்சாகமாக கூறுவார். அவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவரது வாழ்க்கை எவ்வளவு வளமானதாக இருந்தது என்பதையும் அவர் உங்களுக்குச் சொல்லுவார்.
"இவர்களில் மிக சிறியவர்கள்." இந்த சொற்றொடரை மக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவர், எனினும்,, உலக வழக்கத்தின்படி, நமது சேவைக்கு கைம்மாறாக நமக்கு வழங்குவதற்கு சொற்பமாக வைத்திருப்பவர்கள் அல்லது ஒன்றும் இல்லாதவர்களை விவரிக்க இயேசு இதைப் பயன்படுத்தினார். அவர்கள் உலத்தால் பெரும்பாலும் கவனிக்கப்படாத - முற்றிலும் மறக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள். ஆயினும்கூட, "நீங்கள் [அவர்களுக்காக] எதை செய்தாலும், எனக்கே செய்தீர்கள்" (மத்தேயு 25:40) என்று சொல்வதன் மூலம் அவர்களை இயேசு அத்தகைய சிறந்த நிலைக்கு அந்த மக்களை உயர்த்துகிறார். இந்த “சிறியவர்களுக்கு” உதவி செய்வது கிறிஸ்துவுக்கு சேவை செய்வதற்கு சமம்: என்று கிறிஸ்து சொல்லும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டியதில்லை. இதை உண்மையில் எற்றுக்கொள்ள விருப்பமுள்ள இதயம் மட்டுமே போதும்.
எழுதுவதற்கான காரணம்
“கர்த்தர் என் உயர்ந்த கோட்டை…. நாங்கள் பாடல் முகாமிலிருந்து கிளம்பினோம்” செப்டம்பர் 7, 1943 அன்று எட்டி ஹில்லெஸம் அந்த வார்த்தைகளை ஒரு அஞ்சலட்டையில் எழுதி ரயிலில் இருந்து தூக்கி எறிந்தார். அவளிடமிருந்து நாம் கேட்கும், கடைசியாக பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள் அவை. அவள் ஆஷ்விட்சில் கொலை செய்யப்பட்டாள். பின்னர், ஹில்லெஸம் ஒரு சித்திரவதை முகாமில் (இரண்டாம் உலகப் போரின்போது) அனுபவித்த அவளது அனுபவங்களின் குறிப்பேடுகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. தேவனுடைய உலகின் அழகோடு, நாஜி ஆக்கிரமிப்பின் கொடூரங்கள் பற்றிய அவளுடைய கண்ணோட்டத்தை அவர்கள் தொகுத்தார்கள். நல்லது மற்றும் கெட்டதைப் படித்து நம்பும் அனைவருக்கும் ஒரு பரிசாக, அவளது குறிப்பேடுகள் அறுபத்தேழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அப்போஸ்தலனாகிய யோவான் பூமியில் இயேசுவின் வாழ்க்கையின் கடுமையான உண்மைகளை புறக்கணிக்கவில்லை; இயேசு செய்த நன்மை மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்கள் இரண்டையும் அவர் எழுதினார். அவரது சுவிசேஷத்தின் இறுதி வார்த்தைகள் அவரது பெயரைக் கொண்ட புத்தகத்தின் பின்னால் உள்ள நோக்கத்தைப் பற்றிய ஆழமான புரிதலைத் தருகின்றன. “இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு…. செய்தார்” (20:30).“ஆனால் நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும்இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறுகிறார் (வ 31). யோவானின் “குறிப்பேடு” வெற்றிக் குறிப்பில் முடிவடைகிறது: “இயேசுவே மேசியா, தேவனுடைய குமாரன்.” அந்த சுவிஷேச வார்த்தைகளின் பரிசானது விசுவாசிப்பதற்கும் “அவருடைய நாமத்தில் நித்திய ஜீவனை அடைவதற்கும்” நமக்கு வாய்ப்பளிக்கிறது.
சுவிசேஷம் தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் குறிப்பேடுகளாகும். அவை படிப்பதற்கும், விசுவாசிப்பதற்கும், பகிர்வதற்குமான வார்த்தைகள். ஏனெனில் அவை நம்மை ஜீவனுக்கு நேராக வழி நடத்துகின்றன. அவை நம்மை கிறிஸ்துக்கு நேராக வழி நடத்துகின்றன.
ஒளியை நம்புங்கள்
மாபெரும் சூறாவளி என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது. வளிமண்டல அழுத்தம் குறைந்து குளிர்கால புயல் விரைவாக தீவிரமடையும்போது இப்படித்தான் நடக்கும். இரவு நேரத்தில் காற்று வீசும். தூசி நிறைந்த சூழ்நிலை விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட பார்க்க இயலாததாக ஆக்கிவிட்டது. ஆனால் உங்கள் மகள் உங்கள் வீட்டிற்கு விமானத்தில் பயணித்து வரும் போது, நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறீர்கள். நீங்கள் கூடுதல் உடைகள் மற்றும் தண்ணீரை எடுத்து செல்வீர்கள். (நீங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டால்). மிக மெதுவாக வாகனம் ஓட்டு வீர்கள். நிறுத்தாமல் பிரார்த்தனையும் செய்வீர்கள் இறுதியாக, உங்கள் முகப்பு விளக்குகளை நம்புவீர்கள். சில நேரங்களில் நீங்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்றதை அடையமுடியும்.
அவருடைய மரணம் சம்பந்தப்பட்ட ஒரு புயலை இயேசு தன் ஞானத்தால் முன்னறிவித்தார் (1 யோவா. 12:31-33). அது தம்மை பின்பற்றுபவர்களுக்கு உண்மையுள்ளவர்கவும், சேவை செய்பவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கிறது. இப்பொழுது இருட்டாக போகிறது, பார்க்க கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கிறது.. ஆகவே இயேசு அவர்களை பார்த்து "ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்" என்று சொன்னார் (வச. 36). அவர்கள் முன்னோக்கிச் சென்று உண்மையாக இருக்க ஒரே வழி அதுதான்.
இயேசு இன்னும் சிறிது காலம் மட்டுமே அவர்களுடன் இருப்பார். ஆனால் விசுவாசிகளுக்கு தேவ ஆவியானவர் வழியை ஒளிர செய்வதற்கான நிலையான வழிகாட்டியாக இருக்கிறார். நாமும் கிட்டத்தட்ட பார்க்க சாத்தியமற்ற காலங்களை எதிர்கொள்வோம். ஆனால் ஒளியினிடத்தில் விசுவாசமாயிருப்பதின் மூலம் நாம் முன்னோக்கி செல்லலாம்.
வெள்ளம் வந்த போது
அமெரிக்காவில் மேற்கத்திய மாநிலமான நான் வசிக்கும் கொலராடோ பாறைகளால் ஆன மலைகளுக்கும் வருடாந்திர பனிப்பொழிவுக்கும் பிரசித்தி பெற்றது. எனினும் எங்கள் மாநிலத்தில் ஏற்படும் மோசமான இயற்கை பேரழிவு பணியினால் அல்ல, மழையினால் ஏற்படுவது. ஜூலை31, 1976ல் அன்று உல்லாசபோக்கிடமான எஸ்டஸ் பார்க்கில் பெரிய தோம்ப்ஸன் (Big Thompson) என்ற வெள்ளம் வந்தது. கால்நடைகளை சேர்க்காமல் 144 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தது. இந்த பேரழிவை தொடர்ந்து சாலைகளும் நெடுஞ்சாலைகளின் அடித்தளங்களை பற்றிய ஆய்வுகள் நடைபெற்றன. பாதிக்கப்படாத இடங்களின் சுவர்கள் கான்கிரீட்டினால் கட்டப்பட்டிருந்தது. அதாவது உறுதியான வலிமையான அடித்தளம் இருந்தது.
நம் வாழ்வின் முக்கியமான கேள்வி வெள்ளம் வருமா என்பதல்ல, எப்பொழுது வரும் என்பது தான். சிலசமயங்களில் நாம்முன்னெச்சரிக்கை பண்ணபடுகிறோம். ஆனால் அநேக நேரத்தில் நாம் அறியாமல் இருக்கும்போது நாம் தாக்கப்படுகிறோம். இயேசு இதை குறித்து ஒருவன் தன் வார்த்தைகளை கேட்பதினால் மாத்திரமல்ல சுவிசேஷத்தின்படி வாழ்வதினாலும் நம் அடித்தளமானது உறுதியாக்கப்படுகிறது (லூக்கா 6:47). அந்த பயிற்சி முறையானது ஒரு விதத்தில் கான்க்ரீடை நம் வாழ்வில் ஊற்றுவதை போன்றது. நாம் உறுதியாக கட்டப்பட்டிருப்பதால் வெள்ளம் வரும்போது நாம் அசைக்கப்படுவதில்லை. இந்த பயிற்சி இல்லை என்றால் நம் வாழ்க்கை சரிவுக்கும் அழிவுக்கும் சுலபமாக பாதிக்கக் கூடியதாக மாறிவிடும். முட்டாளாக செயல்படுவதற்கும் ஞானமாக செயல்படுவதற்கும் இதுவே வித்தியாசம். அவ்வப்போது நம்மை நாம் நிதானித்து அஸ்திபாரத்தை ஸ்திரப்படுத்துவது நல்லது. இயேசு நம் பலவீனமான பகுதிகளை ஸ்திரப்படுத்தி நம்மை வெள்ளம் மேற்கொள்ளாத படி நம்மை பலப்படுத்துவாராக.
கொஞ்சம் பின்னால் விடுங்கள்
ஐம்பது பைசா, ஒன்று அல்லது இரண்டு ரூபாய், எப்போதாவது ஐந்து அல்லது பத்து ரூபாய். அதுதான் அவரது படுக்கைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். அவர் ஒவ்வொரு மாலையும் தன்னுடைய பாக்கெட்டை காலி செய்து உள்ளிருப்பவைகளை அங்கே விட்டுவிடுவார், ஏனென்றால் அவருக்குத் தெரியும் அவர்கள் அங்கேள வருவார்கள் என்று அவர்கள் என்றால் அவருடைய பேரக்குழைந்தகள். பல வருடங்களாக குழந்தைகள் வந்தவுடன் அவருடைய படுக்கைக்கு அருகில் செல்வதை கற்றுக்கொண்டிருந்தனர். அவர் அந்தச் சில்லறைக் காசுகளை வங்கியிலோ அல்லது சேமிப்பு கணக்கிலோ சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவைகளைத் தன் வீட்டிலுள்ள விலைமதிப்பற்ற சிறியவர்களுக்காக அதை விட்டுச் செல்வதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
இதேப்போன்ற மனநிலைத்தான் லேவியராகமம் 23ல் நிலத்திலிருந்து அறுவடையைக் கொண்டுவரும்போதும் இருந்தது. தேவன், மோசேவின் மூலமாக, மக்களுக்கு மிகவும் எதிர்மறையான ஒன்றைச் சொன்னார் 'வயலின் ஓரத்திலுள்ளதை முற்றிலுமாக அறுக்காமலும் சிந்திக்கிடக்கிற கதிர்களை முற்றிலும் பொறுக்காமலும் இருங்கள்" (வச. 22). முக்கியமாக 'அவைகளை விட்டுவிடவேண்டும்". இந்த கட்டளை, தேவன் முதலிடத்தில் அறுவடைக்குப் பின்னால் இருந்தார் என்பதையும் எளியவர்களுக்கும், பரதேசிகளுக்கும் உணவளிக்க தம்முடைய ஜனங்களைப் பயன்படுத்தினார் என்றும் மக்கள் நினைவுகூர்ந்தனர்.
இப்படிப்பட்ட ஒரு சிந்தனை நிச்சயமாக நம் உலகின் விதிமுறை அல்ல. ஆனால் இப்படிப்பட்ட மனநிலைத் தான் தேவனின் நன்றியுள்ள பிள்ளைகளின் தன்மையாகும். அவர் உதாரத்துவமுள்ள இருதயத்தில் மகிழ்கிறார். பெரும்பாலாக அது உங்கள் அல்லது என் மூலமாய் வருகிறது.
உடைக்கப்பட்டவரின் ஜெபம்
'பரலோகப் பிதாவே, நான் ஒரு ஜெபிக்கிற மனிதன் அல்ல, ஆனால் நீர் இங்கிருந்து என் ஜெபத்தை கேட்பவரானால், திக்கற்றவனாய் இருக்கிறேன். எனக்கு வழி காட்டும்". இட்ஸ் எ வண்டர்ஃபுல் லைஃப் என்ற தரமான திரைப்படத்தின் உடைந்துபோன பாத்திரமான, ஜார்ஜ் பெய்லி என்ற பெயரில் நடிக்கும் கதாபாத்திரத்தின் ஜெபம். இப்போது புகழ் பெற்ற அந்தக் காட்சியில், பெய்லியின் கண்கள் கண்ணீரால் நிரம்பினது. அந்த ஜெபம் ஸ்க்ரிப்டின் ஓரு பகுதியல்ல, ஆனால் அவர் அந்த ஜெபத்தை சொல்லும்போது, 'எங்கு செல்வது என்று வழி தெரியாத மக்களின் தனிமையையும், நம்பிக்கையற்ற தன்மையையும் நான் உணர்ந்தேன்" என்று கூறினார். அது அவரின் இருதயத்தை உடைத்ததாக ஸ்டீவார்ட் கூறினார்.
பெய்லியின் ஜெபம் 'எனக்கு உதவும்" என்பதே. சங்கீதம் 109ல் அதே தான் சொல்லப்பட்டுள்ளது. தாவீது அடுத்து செய்வதறியாத, சிறுமையும் எளிமையுமானவனும், இருதயம் குத்தப்பட்டவனாயும் (வச. 22), மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போனவனுமாய் இருந்தான் (வச. 24). அவன் சாயும் நிழலைப்போல அகன்று போனான் (வச. 23). தன் பகைவர்களுக்கு முன்பாக நிந்தையுள்ளவனாய் உணர்ந்தான் (வச. 25). இப்படிப்பட்ட தீவிர உடைந்த நிலையில் அவருக்கு வேறு எவரும் இல்லை. ஆண்டவரிடம் தனக்கு வழி காட்டும்படி, 'என் தேவனாகிய கர்த்தாவே எனக்கு சகாயம் பண்ணும்" (வச. 26) என்று கூக்குரலிட்டார்.
நம் வாழ்வில் உடைந்துப் போகும் தருணங்கள் இதை பற்றி கூறுகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் ஜெபிப்பது கடினமானதாகி விடுகிறது. நம் அன்பான தேவன் நாம் உதவிக்காக ஏறெடுக்கும் சாதாரண ஜெபத்திற்கும் பதில் கொடுப்பார்.
ஒரு வேளை உணவு
ஆஷ்ட்டன் மற்றும் ஆஸ்டின் சாமுவேல்சன் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்கிற வாஞ்சையுடன் தங்கள் கல்லூரி படிப்பை முடித்தார்கள். இருப்பினும் சபையின் பாரம்பரிய ஊழியத்துக்கு அழைப்பு இன்னும் வரவில்லை என்று இருவரும் உணர்ந்தார்கள். ஆனாலும் உலகத்துக்கு உதவி செய்ய என்ன தடை என்று தேவன் தந்த அறிவையும்,திறன்களையும் கொண்டு பசியினால் வாடும் குழந்தைகளுக்கு உதவ இருவரும் பிரயாசப்பட ஆரம்பித்தார்கள்.
2014ஆம் ஆண்டில் ஒரு உணவகத்தை திறந்தார்கள். அது மற்ற உணவகத்தை போலில்லாமல் "ஒன்று வாங்கினால், ஒன்று கொடுக்கப்படும் " என்கிற தத்துவத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. விற்கும் ஒவ்வொரு உணவிலிருந்து ஒரு பங்கு அந்த குழந்தைகளுக்கென்று வழங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள அக்குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரம் அளிப்பதற்கு நன்கொடையாக அந்த தொகை கொடுக்கப்படுகிறது.
"ஒரு வேளை உணவு" என்கிற அடிப்படையில் பசியாயிருக்கும் குழந்தைகளின் வறுமையை போக்குவதில் பங்குள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதே இருவரின் இலக்காயிருந்தது.
மத்தேயு 10'ல் மறைவாக்கப்பட்ட எந்த உவமையையும் இயேசு கூறவில்லை, மிக வெளிப்படையாக தேவபக்தியைக்குறித்து - வார்த்தைகளினால்லல்ல செயல்களினாலே உறுதியாக்கப்படும் என்று போதிக்கிறார் (வச. 37-42).
சிறியவர்களுக்கு கொடுப்பதே அந்த சாமுவேல் சகோதரர்களுக்கு நோக்கமாயிருக்கிறது. இதுவும் பக்திக்கேதுவான ஒரு செயலாக கருதப்படுகிறது. சிறியவர்களுக்கு என்று குறிப்பிடும்போது அது வயதுக்குட்பட்டதல்ல. இவ்வுலகம் சிறியதாய் பார்க்கும் எந்த ஆத்துமாவுக்காகவும் நாம் கொடுக்கும்படி கிறிஸ்து நம்மை அழைக்கிறார். பொருளாதாரத்தில் குறைபாடுள்ளவர்கள், கைதிகள், அகதிகள் என்று உலகம் குறையாய் பார்க்கும் எல்லா மனிதர்களுக்கு கொடுக்கும்படி நம்மை அழைக்கிறார். எதை கொடுக்கும்படி அழைக்கிறார் ? ஒரு கலசம் தண்ணீர் இதில் சேருமானால், ஒரு வேளை உணவும் இதில் உள்ளடங்கும்.
உலகில் என்ன கோளாறு?
“இந்த உலகில் என்ன கோளாறு?” என லண்டன் டைம்ஸ் செய்தித்தாள் இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில் தன்னுடைய வாசகர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்பியது. இந்த உலகத்தில் என்னதான் கோளாறு?
சரியான கேள்வி அல்லவா? அதற்கு சிலர் சொல்லலாம்: “உனக்கு நேரம் இருக்கிறதா?, சொல்லுகிறேன்”. அது சரியான பதில் தான்; ஏனென்றால் உலகத்தில் மிகுந்த தவறுகள் காணப்படுகின்றன. அந்த செய்தித்தாளுக்கு அநேக பதில்கள் வந்தன; அதில் ஒன்று இரத்தின சுருக்கமாக மின்னியது. மற்றவர்களை பழிக்கும் தன்மைக்கு மாறாக, எழுத்தாளரும், கவிஞரும், தத்துவ ஞானியுமான G.K. செஸ்டர்டன் எழுதின நாலு வார்த்தைகள் மனதை கவர்ந்தன: “அருமை ஆசிரியர்களே நான் தான்”.
இந்த கதை உண்மையோ அல்லவோ என்பதை விவாதிக்கலாம். ஆனால் அந்த பதிலோ உண்மைதான். செஸ்டர்டன் பிறப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்னே பவுல் என்று ஒரு அப்போஸ்தலர் இருந்தார். அவர் ஒன்றும் ஒழுக்கத்தின் சிகரம் அல்ல. தன்னுடைய குறைகளை ஒத்துக்கொண்டார்: “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்” (வச. 13). “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என்று சொல்லிய பின் “அவர்களில் பிரதான பாவி நான்” என்று அறிக்கையிடுகிறார். பவுலுக்கு உலகத்தில் என்ன கோளாறு என்று நன்றாக தெரியும். அதை எப்படி சரிப்படுத்தலாம் என்றும் அவருக்குத் தெரியும்: “கர்த்தரின் கிருபை” இது எவ்வளவு உண்மை! இந்த நீடித்த உண்மை நம்முடைய கண்களை கிறிஸ்துவினுடைய மீட்பின் அன்பிற்கு நேராக ஏறெடுக்கிறது.