ஆஷ்ட்டன் மற்றும் ஆஸ்டின் சாமுவேல்சன் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்கிற வாஞ்சையுடன் தங்கள் கல்லூரி படிப்பை முடித்தார்கள். இருப்பினும் சபையின் பாரம்பரிய ஊழியத்துக்கு அழைப்பு இன்னும் வரவில்லை என்று இருவரும் உணர்ந்தார்கள். ஆனாலும் உலகத்துக்கு உதவி செய்ய என்ன தடை என்று தேவன் தந்த அறிவையும்,திறன்களையும் கொண்டு பசியினால் வாடும் குழந்தைகளுக்கு உதவ இருவரும் பிரயாசப்பட ஆரம்பித்தார்கள்.

2014ஆம் ஆண்டில் ஒரு உணவகத்தை திறந்தார்கள். அது  மற்ற உணவகத்தை போலில்லாமல் “ஒன்று வாங்கினால், ஒன்று கொடுக்கப்படும் ” என்கிற தத்துவத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. விற்கும் ஒவ்வொரு  உணவிலிருந்து ஒரு பங்கு அந்த குழந்தைகளுக்கென்று வழங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள அக்குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரம் அளிப்பதற்கு நன்கொடையாக  அந்த தொகை கொடுக்கப்படுகிறது.  

“ஒரு வேளை உணவு” என்கிற அடிப்படையில் பசியாயிருக்கும் குழந்தைகளின் வறுமையை போக்குவதில் பங்குள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதே இருவரின் இலக்காயிருந்தது.

மத்தேயு 10’ல் மறைவாக்கப்பட்ட  எந்த உவமையையும் இயேசு கூறவில்லை, மிக வெளிப்படையாக தேவபக்தியைக்குறித்து – வார்த்தைகளினால்லல்ல செயல்களினாலே உறுதியாக்கப்படும் என்று போதிக்கிறார் (வச. 37-42). 

சிறியவர்களுக்கு கொடுப்பதே அந்த சாமுவேல் சகோதரர்களுக்கு நோக்கமாயிருக்கிறது. இதுவும் பக்திக்கேதுவான ஒரு செயலாக  கருதப்படுகிறது. சிறியவர்களுக்கு என்று குறிப்பிடும்போது அது வயதுக்குட்பட்டதல்ல. இவ்வுலகம் சிறியதாய் பார்க்கும் எந்த ஆத்துமாவுக்காகவும் நாம் கொடுக்கும்படி கிறிஸ்து நம்மை அழைக்கிறார். பொருளாதாரத்தில் குறைபாடுள்ளவர்கள், கைதிகள், அகதிகள் என்று உலகம் குறையாய் பார்க்கும் எல்லா மனிதர்களுக்கு கொடுக்கும்படி நம்மை அழைக்கிறார். எதை கொடுக்கும்படி அழைக்கிறார் ? ஒரு கலசம் தண்ணீர் இதில் சேருமானால், ஒரு வேளை  உணவும் இதில் உள்ளடங்கும்.