உலகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிக நேரமெடுத்து போய் சேர்ந்தடைந்த அஞ்சல் 89 வருடம் கழித்து பெறுநரிடம் போய் சேர்ந்தது. 2008ஆம் ஆண்டில் யுகேவை சேர்ந்த ஒருவருக்கு, அவர் முகவரியில் குடியிருந்தவருக்கு, 1918ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது. “ராயல் மெயில்”  முழுமையாக அனுப்பப்பட்ட இந்த அஞ்சல் இத்தனை வருடம் தாமதமான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகத்தின் தலைசிறந்த தொடர்புகொள்ளும் முறைகள் கூட நம்மை சில நேரங்களில் கைவிடலாம். ஆனால் வசனம் நமக்கு தெளிவாக கூறுவது என்னவென்றால் விசுவாசிகளின் ஜெபத்தை தேவன் கேட்காமல் போவதில்லை. யெகோவா தேவனுக்கும், பாகாலுக்குமுள்ள வித்யாசத்தை தெளிவாக எலியா 1 இராஜாக்கள் 18’ல் நிரூபித்தான்.  அங்கு உண்மையான தேவன் யார் என்று நிரூபிக்கும் பாகால் தீர்க்கதரிசிகளின் நீண்ட நேர ஜெபத்தை பார்த்து எலியா கேலி  செய்தான். “உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்” (வச. 27). அதன் பிறகு எலியா, அந்த மக்கள் விசுவாசத்திற்கு திரும்பும்படியாக தேவன் அவனுக்கு பதிலளிக்கும்படியாக ஜெபித்தான். அவர் வல்லமை மிகவும் தெளிவாக அங்கு விளங்கினது.

நம் ஜெபங்கள் எலியாவின் ஜெபத்தைபோல் உடனடியாக பதிலளிக்கப்படவில்லை என்றாலும், அவைகளை தேவன் கேட்டுகொண்டியிருக்கிறார்  என்று நிட்சயித்துகொள்வோம் (சங். 34:17). பரிசுத்தவான்களுடைய ஜெபங்களை, பொற்கலசங்களிலுள்ள தூபவர்கங்களைப் போல அவர் நம் ஜெபங்களை பொக்கிஷிமாக கருதுகிறார் (வெளி. 5:8) என்று வாசிக்கிறோம். தேவன் நம் ஜெபங்களை தம்முடைய சொந்த வழியிலும், விலைமதிப்பற்ற ஞானத்தினாலும் தகுந்த சமயத்தில் பதிலளிக்கிறார். பரலோகத்துக்கு அனுப்பின எந்த கடிதமும் தொலைந்துபோவதில்லை.