“கர்த்தர் என் உயர்ந்த கோட்டை…. நாங்கள் பாடல் முகாமிலிருந்து கிளம்பினோம்” செப்டம்பர் 7, 1943 அன்று எட்டி ஹில்லெஸம் அந்த வார்த்தைகளை ஒரு அஞ்சலட்டையில் எழுதி ரயிலில் இருந்து தூக்கி எறிந்தார். அவளிடமிருந்து நாம் கேட்கும், கடைசியாக பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள் அவை. அவள் ஆஷ்விட்சில் கொலை செய்யப்பட்டாள். பின்னர், ஹில்லெஸம் ஒரு சித்திரவதை முகாமில் (இரண்டாம் உலகப் போரின்போது) அனுபவித்த அவளது அனுபவங்களின் குறிப்பேடுகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. தேவனுடைய உலகின் அழகோடு, நாஜி ஆக்கிரமிப்பின் கொடூரங்கள் பற்றிய அவளுடைய கண்ணோட்டத்தை அவர்கள் தொகுத்தார்கள். நல்லது மற்றும் கெட்டதைப் படித்து நம்பும் அனைவருக்கும் ஒரு பரிசாக, அவளது குறிப்பேடுகள் அறுபத்தேழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அப்போஸ்தலனாகிய யோவான் பூமியில் இயேசுவின் வாழ்க்கையின் கடுமையான உண்மைகளை புறக்கணிக்கவில்லை; இயேசு செய்த நன்மை மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்கள் இரண்டையும் அவர் எழுதினார். அவரது சுவிசேஷத்தின் இறுதி வார்த்தைகள் அவரது பெயரைக் கொண்ட புத்தகத்தின் பின்னால் உள்ள நோக்கத்தைப் பற்றிய ஆழமான புரிதலைத் தருகின்றன. “இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு…. செய்தார்” (20:30).“ஆனால் நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும்இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறுகிறார் (வ 31). யோவானின் “குறிப்பேடு” வெற்றிக் குறிப்பில் முடிவடைகிறது: “இயேசுவே மேசியா, தேவனுடைய குமாரன்.” அந்த சுவிஷேச வார்த்தைகளின் பரிசானது விசுவாசிப்பதற்கும் “அவருடைய நாமத்தில் நித்திய ஜீவனை அடைவதற்கும்” நமக்கு வாய்ப்பளிக்கிறது.

சுவிசேஷம் தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் குறிப்பேடுகளாகும். அவை படிப்பதற்கும், விசுவாசிப்பதற்கும், பகிர்வதற்குமான வார்த்தைகள். ஏனெனில் அவை நம்மை ஜீவனுக்கு நேராக வழி நடத்துகின்றன. அவை நம்மை கிறிஸ்துக்கு நேராக வழி நடத்துகின்றன.