ஐம்பது பைசா, ஒன்று அல்லது இரண்டு ரூபாய், எப்போதாவது ஐந்து அல்லது பத்து ரூபாய். அதுதான் அவரது படுக்கைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். அவர் ஒவ்வொரு மாலையும் தன்னுடைய பாக்கெட்டை காலி செய்து உள்ளிருப்பவைகளை அங்கே விட்டுவிடுவார், ஏனென்றால் அவருக்குத் தெரியும் அவர்கள் அங்கேள வருவார்கள் என்று அவர்கள் என்றால் அவருடைய பேரக்குழைந்தகள். பல வருடங்களாக குழந்தைகள் வந்தவுடன் அவருடைய படுக்கைக்கு அருகில் செல்வதை கற்றுக்கொண்டிருந்தனர். அவர் அந்தச் சில்லறைக் காசுகளை வங்கியிலோ அல்லது சேமிப்பு கணக்கிலோ சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவைகளைத் தன் வீட்டிலுள்ள விலைமதிப்பற்ற சிறியவர்களுக்காக அதை விட்டுச் செல்வதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இதேப்போன்ற மனநிலைத்தான் லேவியராகமம் 23ல் நிலத்திலிருந்து அறுவடையைக் கொண்டுவரும்போதும் இருந்தது. தேவன், மோசேவின் மூலமாக, மக்களுக்கு மிகவும் எதிர்மறையான ஒன்றைச் சொன்னார் ‘வயலின் ஓரத்திலுள்ளதை முற்றிலுமாக அறுக்காமலும் சிந்திக்கிடக்கிற கதிர்களை முற்றிலும் பொறுக்காமலும் இருங்கள்” (வச. 22). முக்கியமாக ‘அவைகளை விட்டுவிடவேண்டும்”. இந்த கட்டளை, தேவன் முதலிடத்தில் அறுவடைக்குப் பின்னால் இருந்தார் என்பதையும் எளியவர்களுக்கும், பரதேசிகளுக்கும் உணவளிக்க தம்முடைய ஜனங்களைப் பயன்படுத்தினார் என்றும் மக்கள் நினைவுகூர்ந்தனர்.

இப்படிப்பட்ட ஒரு சிந்தனை நிச்சயமாக நம் உலகின் விதிமுறை அல்ல. ஆனால் இப்படிப்பட்ட மனநிலைத் தான் தேவனின் நன்றியுள்ள பிள்ளைகளின் தன்மையாகும். அவர் உதாரத்துவமுள்ள இருதயத்தில் மகிழ்கிறார். பெரும்பாலாக அது உங்கள் அல்லது என் மூலமாய் வருகிறது.