எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டென்னிஸ் பிஷ்ஷர்கட்டுரைகள்

தேவனின் கைரேகை

லீகன் ஸ்டீவன்ஸ் தன்னுடைய சகோதரன் நிக்கோடு சேர்ந்து மலையேறுவதில் ஆர்வமுள்ளவள். அவர்கள் இருவரும் மலையேறுவதில் அனுபவமிக்கவர்கள். வட அமெரிக்காவிலுள்ள மிக்கின்லெ என்ற மிக உயரமான மலையுச்சியை அடைந்தவர்கள். ஜனவரி 2008ல் கொலொரடோ மலையில் ஏற்பட்ட ஒரு பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் நிக் காயமடைந்தான், இருபது வயது நிரம்பிய லீகன் மரித்துப் போனாள். பின் நாட்களில் நிக், தன் சகோதரி லீகனின் பையொன்றிலிருந்து பயணக் குறிப்பொன்றைக் கண்டெடுத்தான். அதின் உள்ளடக்கத்தை வாசித்தபோது அவன் மிகவும் ஆறுதலையடைந்தான். அது முழுவதும் தியானங்கள், ஜெபங்கள், தேவனை மகிமைப்படுத்தல் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அதில் ‘‘நான் தேவனுடைய கரத்தால் செய்யப்பட்ட ஒரு கலை. ஆனால் தேவன் அதை இன்னமும் முடிக்கவில்லை. இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கின்றார்.... நான் என்மீது தேவனின் விரல் ரேகைகளைப் பதியப் பெற்றிருக்கிறேன்.  என்னைப் போல மற்றொருவர் ஒருபோதும் இருக்க முடியாது... என்னுடைய இந்த வாழ்வில் எனக்கொரு வேலையுள்ளது. அதனை வேறொருவர் நிறைவேற்ற முடியாது” என எழுதியிருந்தார்.

லீகன் இந்த உலகில் உடல் ரீதியாக இல்லையெனினும் அவள் விட்டுச் சென்ற பாரம்பரியம், அவளுடைய பயணக் குறிப்புகள் மற்றும் சவால்கள் யாவும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன.

நாம் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்டுள்ளோம். (ஆதி. 1:26) ஒவ்வொருவரும் ‘‘தேவனுடைய கரத்தினால் செய்யப்பட்ட கலை”. பவுல் அப்போஸ்தலன் கூறுவது போல. ‘‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபே. 2:10).

தேவன் நம்மை அவர் குறித்த நேரத்தில் அவருடைய சொந்த வழியில் பிறருக்கு உதவும்படி பயன்படுத்துகின்றார். எனவே நாம் அவரை மகிமைப்படுத்துவோம்.

வனாந்திரத்தில் உயிர் பிழைத்தல்

1960களில் கிங்ஸ்டன் டிரையோ என்று அழைக்கப்பட்ட இசைக் குழுவினர் “டெசட் பீட் என்ற பாடலை இயற்றி வெளியிட்டனர். அந்தப் பாடலில், ஒரு பாலைவனத்தை மிகுந்த தாகத்துடன் கடக்கும் ஒரு மந்தை மேய்ப்பன் பாலைவனத்தில் ஓர் அடி குழாயைக் காண்கிறான். அதன் அருகில் சென்ற பொழுது அந்தக் குழாயின் அருகில் ஒரு குறிப்பும் ஒரு ஜாடியில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பில், ஜாடியில் இருந்த தண்ணீரைப் பருகாமல் அதை அந்த அடிகுழாயிற்குள் ஊற்றி பின் குழாயை அடிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டிருந்தது. மிகுந்த தாகத்துடன் இருந்த அந்த மந்தை மேய்ப்பன், அவனது தாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்தக் குறிப்பில்  கூறியிருந்தபடியே அந்த ஜாடியில் இருந்த தண்ணீரைக் குழாய்க்குள் ஊற்றி பின் குழாயை அடித்தான். அவனது விசுவாசத்திற்கான வெகுமதியாக, குழாயில் இருந்து குளிர்ந்தநீர் அதிகமாக வந்தது. அந்த நீரைக் தாகம் தீரக் குடித்து திருப்தி அடைந்தான். அவன் அந்தக் குறிப்பில் கூறப்பட்டதை விசுவாசித்து செயல்படாமல் இருந்திருந்தால் அந்த ஜாடியில் இருந்த சூடான நீர் மட்டும் தான் கிடைத்திருக்கும். அது அவன் தாகத்தை தீர்த்திருக்காது.

அந்தப்பாடலின் கருத்து, இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் பயணம் பண்ணினதை எனக்கு நினைப்பூட்டியது. தாகத்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டபொழுது மோசே தேவனை நோக்கி முறையிட்டான். ஒரேபில் இருந்த கன்மலையை அவனது கோலால் அடிக்கும்படி தேவன் மோசேயிடம் கூறினார். மோசே தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து கீழ்ப்படிந்தான். கன்மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது.

ஆனால், இஸ்ரவேல் மக்கள் மோசேயின் விசுவாசத்தில் தொடர்ந்து நிலையாகப் பின்பற்றவில்லை. அது மிகவும் வருந்தத்தக்கதாகும். இறுதியில் கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்கு பிரயோஜனப் படவில்லை என்று எபிரெயர் 4:2ல் எழுதப்பட்டபடி ஆயிற்று.

சில சமயங்களில் வாழ்க்கை வறண்ட பாலைவனம் போலக் காணப்படும். ஆனால், தேவன் தமது கடினமான சூழ்நிலைகளில் கூட செயல்பட்டு, நமது ஆன்மீகத் தாகத்தை தீர்க்கிறார். தேவனுடைய வார்த்தைகளை விசுவாசத்துடன் நம்பினால், நமது அன்றாடக் தேவைகளுக்காக ஜீவ தண்ணீரையும், கிருபையையும் பெருக்கெடுத்து ஓடும் ஆறாக நாம் அனுபவிக்கலாம்.

பேசும் மரம்

ஆங்கில இலக்கியத்தின் ஆதி கால கிறிஸ்தவ கவிதைகளில் “த டிரீம் ஆப் த ரூட்” (சிலுவையின் கனவு) என்னும் கவிதையுண்டு. ரூட் (Rood) என்னும் வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையாகிய ‘ராட்’ (Rod) அல்லது ‘போல்’ (Pole) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. அது கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை குறிக்கிறது. இந்த பழைய கவிதை இயேசுவின் சிலுவை மரணத்தை சிலுவையின் கண்ணோட்டத்தில் இருந்து கூறுகிறது. சிலுவை செய்ய பயன்படுத்தப்படும் மரம், தான் தேவகுமாரன் கொல்லப்படுவதற்கு பயன்படப்போவதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிற அனைவருக்கும் மீட்பளிக்கும்படி அம்மரத்தின் உதவியை நாடி அப்பணியில் அதனை சேர்த்துக் கொள்கிறார்.

ஏதேன் தோட்டத்திலே, நம்முடைய ஆவிக்குரிய பெற்றோர் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டு மனுக்குலம் பாவத்திற்குள் விழ ஒரு மரம்தான் ஆதாரமாக விளங்கியது. மேலும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவம் போக்க தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினபொழுது, அவர் நம் சார்பில் சிலுவை மரத்திலே அறையப்பட்டார். கிறிஸ்து, “தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”
(1 பேதுரு 2:24).

இரட்சிக்கப்படும்படி கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும், சிலுவை தான் திருப்புமுனை. மேலும் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், இது நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையாக்கிய தேவகுமாரனுடைய தியாகபலியை குறிப்பிடும் பிரசித்திபெற்ற சின்னமாக விளங்குகிறது. நம் மேல் தேவன் வைத்துள்ள சொல்லி முடியாத அதிசயமான அன்பின் சான்றாக சிலுவை விளங்குகிறது.

இருதயங்களை சீர்செய்தல்

சமீபத்தில், சில ஆடைகளை சரிசெய்ய துணிதைக்கும் ஒரு பெண்ணின் கடைக்குச் சென்றேன். நான் அக்கடையில் நுழையும் பொழுது அதன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பதாகைகளை பார்த்தவுடன் நான் மிகவும் உற்சாகமடைந்தேன். அந்தப் பதாகைகள் ஒன்றில் “நாங்கள் உங்கள் ஆடைகளை சரிசெய்வோம், ஆனால் உங்கள் இருதயத்தை கடவுளால் மட்டும் தான் சரிசெய்ய இயலும்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகில் உயிர்த்தெழுந்த இயேசு, அழுதுகொண்டிருந்த மகதலேனா மரியாளுக்கு கொண்டிருந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பதாகையில் “ஜெபம் உங்களுக்கு தேவைப்படுகிறதா? நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஜெபிக்கிறோம்” என்று குறிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடைக்கு சொந்தக்காரப் பெண் அந்தக் கடையை 15 ஆண்டுகளாக நடத்தி வருவதாகக் கூறினாள். “இங்கு பல்வேறு இடங்களில் குறிக்கப்பட்டுள்ள விசுவாச வார்த்தைகளால் தேவன் எப்படியாகக் கிரியை செய்துள்ளார் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறோம். சிறிது நாட்களுக்கு முன்பாக, இதே இடத்தில் ஒருவர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளார். தேவன் கிரியை செய்வதை பார்க்கும்பொழுது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினாள். நானும் ஒரு கிறிஸ்தவன் என்று அவளிடம் கூறி, அவள் பணி செய்யும் இடத்தில் இப்படியாக கிறிஸ்துவை அறிவித்து வருவதைக் குறித்து பாராட்டினேன்.

நாம் அனைவருமே நாம் பணிசெய்யும் இடங்களில் அந்த தையல்கார பெண்மணியைப்போல தைரியமாக செயல்பட இயலாது. ஆனால் பிறர் எதிர்பாராத முறையில் அவர்களிடம் அன்பு, பொறுமை, இரக்கம் காண்பிப்பதன் மூலம் புதிய செயல்முறைத் திட்டங்களை நாம் கண்டறியலாம். அந்த தையல் கடையை விட்டுவந்ததிலிருந்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத். 5:14) என்று இயேசு கூறினதை வாழ்ந்து காண்பிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அவசரகால ஜெபம்

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள், உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் 81வது தளத்தில், தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்டான்லி பிரேம்நாத் (Stanley Praimnath) ஒரு விமானம் தன்னை நோக்கி பறந்து வருவதைக் கண்டு, “தேவனே, என்னால் இது கூடாத காரியம்! நீர் பார்த்துக்கொள்ளும்!” என்று அவசரமாக ஒரு ஜெபத்தை செய்துவிட்டு தன்னுடைய மேஜையின் கீழ் பாதுகாப்பு கருதி விரைவாய் ஒளிந்துக்கொண்டார்.

மோசமான விமான தாக்குதலின் விளைவால், ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் ஸ்டான்லி மாட்டிக்கொண்டார். சுவர் போல மூடியிருந்த அக்குப்பை மேட்டிற்குள்ளிருந்து,…

புதியதாக வனைய நொறுக்கப்படுதல்

இரண்டாவது உலகப்போரின் பொழுது என் தந்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் தென் பசிபிக் பகுதியில் பணியாற்றினார். அக்காலத்தில் என் தந்தை சமயக் கோட்பாடுகளை வெறுத்து,“நான் நடப்பதற்கு ஊன்றுகோல் தேவையில்லை” என்று கூறுவார். ஆனால் ஆவிக்குரிய காரியங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஓர் நாளில் பெற்றுக்கொண்டார். மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க என் தாய் பிரசவ வார்டுக்குள் சென்று விட்டார். புதிதாகப் பிறக்கப்போகிற ஓர் தம்பியையோ அல்லது தங்கையையோ சீக்கிரம் பார்க்கப் போகிற உணர்வுகளுடன் நானும் என் சகோதரனும் படுக்கைக்குச் சென்றோம். மறுநாள் காலை படுக்கை…

மீட்டெடுக்கும் தொழில்

ஆதாம் மின்ட்டர் தேவையற்ற பழைய பொருட்களை வாங்கும், விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பழைய தேவையற்ற பொருட்களை வாங்கும், விற்கும் தொழில் செய்பவரின் மகனான இவர், அப்பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக உலகமெங்கும் சுற்றி வருகிறார். ‘பழைய தேவையற்ற பொருட்களால் நிறைந்த கோள்’ என்ற அவரது புத்தகத்தில், இக்குப்பைகளை மறு சுழற்சி செய்யும் தொழில் பல கோடி டாலர் கிடைக்கக் கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். உலகமெங்குமுள்ள தொழில் முனைவர்கள், பயன்படுத்த இயலாது என்று தள்ளப்பட்ட தாமிரக் கம்பிகள், அழுக்கான கந்தைத் துணிகள், உடைந்த பிளாஸ்டிக்குகள்…

நித்தியகாலமாய் நிலைத்திருக்கும் தேவனுடைய வார்த்தை

2வது உலகமகா யுத்தத்தின் துவக்க காலத்தில் போலந்திலுள்ள வார்சா, ஆகாய மார்க்கமாக குண்டு மழை பொழிந்ததால் தரைமட்டமானது. சிமெண்ட் கட்டிகள், சிதைந்த நீர்குழாய்கள், கண்ணாடித்துண்டுகள் போன்றவை அந்த பெரு நகரத்தில் சிதறிக்கிடந்தது. நகரின் நிர்வாக வணிக அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் சிதைவுண்ட கட்டிடங்களில் ஒன்று இன்னும் அசையாது நிமிர்ந்து நிற்கிறது. அது ஆங்கிலேயே மற்றும் வெளிநாடுகளின் வேதாகம சங்கத்தின் “போலந்திலுள்ள தலைமைச் செயலகமாகும்.” வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை (மத் 24:35) என்ற வசனம் அங்கு சிதைந்து நிற்கும் சுவரில்…

ஹாலிவுட் மலைகளில் உள்ள சிலுவை

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள தென் கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் அனைவரின் மனதில் தோன்றும் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் “டின்செல்டவுன்”க்கு சிமெண்டால் செய்யப்பட்ட நட்சத்திரங்களின் கால் தடங்களைப் பார்க்கவும், அவ்வழியாகக் கடந்து செல்லும் பிரபலங்களை ஓர் முறை பார்க்கவும் வருகிறார்கள். இவ்வாறு வரும் பார்வையாளர், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றுமோர் அடையாளத்தையும் பார்க்காமல் இருக்கவே முடியாது.

ஹாலிவுட் மலைகளில் இலகுவாகக் கண்டு கொள்ளக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாக, நித்தியத்தை முக்கியப்படுத்திக் காட்டும் அடையாளம் ஒன்று அங்கு உண்டு…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார். 

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6)என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர். 

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம். 

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார். 

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன. 

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது. 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.