1960களில் கிங்ஸ்டன் டிரையோ என்று அழைக்கப்பட்ட இசைக் குழுவினர் “டெசட் பீட் என்ற பாடலை இயற்றி வெளியிட்டனர். அந்தப் பாடலில், ஒரு பாலைவனத்தை மிகுந்த தாகத்துடன் கடக்கும் ஒரு மந்தை மேய்ப்பன் பாலைவனத்தில் ஓர் அடி குழாயைக் காண்கிறான். அதன் அருகில் சென்ற பொழுது அந்தக் குழாயின் அருகில் ஒரு குறிப்பும் ஒரு ஜாடியில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பில், ஜாடியில் இருந்த தண்ணீரைப் பருகாமல் அதை அந்த அடிகுழாயிற்குள் ஊற்றி பின் குழாயை அடிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டிருந்தது. மிகுந்த தாகத்துடன் இருந்த அந்த மந்தை மேய்ப்பன், அவனது தாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்தக் குறிப்பில்  கூறியிருந்தபடியே அந்த ஜாடியில் இருந்த தண்ணீரைக் குழாய்க்குள் ஊற்றி பின் குழாயை அடித்தான். அவனது விசுவாசத்திற்கான வெகுமதியாக, குழாயில் இருந்து குளிர்ந்தநீர் அதிகமாக வந்தது. அந்த நீரைக் தாகம் தீரக் குடித்து திருப்தி அடைந்தான். அவன் அந்தக் குறிப்பில் கூறப்பட்டதை விசுவாசித்து செயல்படாமல் இருந்திருந்தால் அந்த ஜாடியில் இருந்த சூடான நீர் மட்டும் தான் கிடைத்திருக்கும். அது அவன் தாகத்தை தீர்த்திருக்காது.

அந்தப்பாடலின் கருத்து, இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் பயணம் பண்ணினதை எனக்கு நினைப்பூட்டியது. தாகத்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டபொழுது மோசே தேவனை நோக்கி முறையிட்டான். ஒரேபில் இருந்த கன்மலையை அவனது கோலால் அடிக்கும்படி தேவன் மோசேயிடம் கூறினார். மோசே தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து கீழ்ப்படிந்தான். கன்மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது.

ஆனால், இஸ்ரவேல் மக்கள் மோசேயின் விசுவாசத்தில் தொடர்ந்து நிலையாகப் பின்பற்றவில்லை. அது மிகவும் வருந்தத்தக்கதாகும். இறுதியில் கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்கு பிரயோஜனப் படவில்லை என்று எபிரெயர் 4:2ல் எழுதப்பட்டபடி ஆயிற்று.

சில சமயங்களில் வாழ்க்கை வறண்ட பாலைவனம் போலக் காணப்படும். ஆனால், தேவன் தமது கடினமான சூழ்நிலைகளில் கூட செயல்பட்டு, நமது ஆன்மீகத் தாகத்தை தீர்க்கிறார். தேவனுடைய வார்த்தைகளை விசுவாசத்துடன் நம்பினால், நமது அன்றாடக் தேவைகளுக்காக ஜீவ தண்ணீரையும், கிருபையையும் பெருக்கெடுத்து ஓடும் ஆறாக நாம் அனுபவிக்கலாம்.