ஆதாம் மின்ட்டர் தேவையற்ற பழைய பொருட்களை வாங்கும், விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பழைய தேவையற்ற பொருட்களை வாங்கும், விற்கும் தொழில் செய்பவரின் மகனான இவர், அப்பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக உலகமெங்கும் சுற்றி வருகிறார். ‘பழைய தேவையற்ற பொருட்களால் நிறைந்த கோள்’ என்ற அவரது புத்தகத்தில், இக்குப்பைகளை மறு சுழற்சி செய்யும் தொழில் பல கோடி டாலர் கிடைக்கக் கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். உலகமெங்குமுள்ள தொழில் முனைவர்கள், பயன்படுத்த இயலாது என்று தள்ளப்பட்ட தாமிரக் கம்பிகள், அழுக்கான கந்தைத் துணிகள், உடைந்த பிளாஸ்டிக்குகள் இவைகளைத் தேடி கண்டு பிடித்து, அவற்றை மறுசுழற்சி செய்து மிகவும் பயனுள்ள புதிய பொருட்களை உண்டு பண்ணுகின்றனர்.

பவுல் அவரது வாழ்க்கையை இரட்சகராகிய கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தவுடன், அவரது திறமைகளையும், வெற்றிகளையும் குப்பையோடு ஒப்பிடுகிறார். ஆனால் இயேசு அவற்றைப் பயனுள்ள புதியவைகளாக மாற்றிவிட்டார். “ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” (பிலி. 3:7–8) என்று பவுல் கூறினார். யூத மார்க்கத்தின் நியாயப்பிரமாணங்களில் பயிற்றுவிக்கப்பட்ட பவுல் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களின் மேல் கோபம் கொண்டு மூர்க்கமடைந்தார் (அப். 9:1–2). கிறிஸ்துவினால் புதிதாக மாற்றப்பட்ட பவுல், அவரது பழைய மூர்க்கமாக செயல்பட்ட உடைந்துபோன சிக்கலான வாழ்க்கையை, பிறர்மேல் அன்புகாட்டும் கிறிஸ்துவின் அன்பாக மாற்றிவிட்டது (2 கொரி. 5:14–17).

உங்களுடைய வாழ்க்கை, பயனற்ற செயல்களால் ஆனது என்று நீங்கள் உணர்ந்தீர்களென்றால், தேவன் எப்பொழுதும் மீட்டெடுத்து புதுப்பிக்கும் பணியிலிருக்கிறார் என்பதை நினைவு கூருங்கள். நமது வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்தால், அவர் நம்மை புதிதாக மாற்றி அவருக்கும், பிறருக்கும் பயனுள்ளவர்களாக மாற்றி அமைப்பார்.