ஜெபிக்கும் மனிதன்
என்னுடைய தாத்தா விசுவாசத்திலும் ஜெபத்திலும் உறுதியானவர் என்பதை என்னுடைய குடும்பத்தினர் நினைவுகூறுகின்றனர். ஆனால் அது எப்பொழுதும் அப்படி அல்ல. “நாம் சாப்பிடுவதற்கு முன் தேவனுக்கு நன்றி கூறப்போகிறோம்” என்று தன்னுடைய தகப்பனார் முதல்முறையாக தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிவித்ததை என் அத்தை நினைவுகூர்ந்தார். அவருடைய முதல் ஜெபம் சொற்பொழிவாற்றலுக்கு அப்பாற்பட்டிருந்தது. ஆனால் தாத்தா அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த ஜெபத்தைத் தொடர்ந்தார். அந்த நாள் முழுவதும் அடிக்கடி ஜெபித்துக்கொண்டிருப்பார். அவர் இறந்தப்பொழுது என்னுடைய கணவர் என் பாட்டிக்கு ஒரு ஜெபிக்கும் கரங்களின் அருங்காட்சிப் பொருளை கொடுத்து “தாத்தா ஒரு ஜெப வீரன்”என்று சொன்னார். தேவனைப் பின்பற்றவும் அவரோடு அனுதினமும் பேச அவர் எடுத்த முடிவு தாத்தாவை கிறிஸ்துவின் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாய் மாற்றியது.
ஜெபத்தைக் குறித்து வேதாகமத்தில் அதிகமாக சொல்லப்படுகிறது. மத்தேயு 6:9-13ல் இயேசு தம்மை பினபற்றுகிறவர்களுக்கு ஒரு ஜெபத்தின் மாதிரியைக் கொடுத்து, தேவன், அவர் யாராயிருக்கிறாரோ அவரை மனமார்ந்த துதியோடு நெருங்கக் கற்றுக்கொடுத்தார். நம்முடைய விண்ணப்பங்களை தேவனிடத்தில் கொண்டு செல்லும்போது, அவர் நமக்கு “அன்றன்றுள்ள ஆகாரத்தை” தருவார் என்று விசுவாசிக்கிறோம் (வச. 11). நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை செய்யும்போது, அவரிடத்தில் மன்னிப்பையும், சோதனைகளைத் தவிர்க்க உதவியையும் கேட்கிறோம் (வச. 12-13).
ஆனால் கர்த்தர் கற்பித்த ஜெபம் மட்டும் அல்லாமல் (பரமண்டல ஜெபம்), “எந்தச் சமயத்திலும் சகலவித வேண்டுதலோடும்” (எபேசியர் 6:18) நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஜெபம் மிகவும் முக்கியமானது. மட்டுமல்லாமல் ஜெபம், நாம் தேவனோடு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வாய்ப்பளிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 5:17-18).
தேவனிடம் பேச வேண்டும் என்ற வாஞ்சையினால் தாழ்மையுள்ள இருதயத்தோடு நெருங்கும்போது, அவரை இன்னும் அதிகமாய் நேசிக்கவும், அறிந்துக்கொள்ளவும் உதவி செய்வார்.
உன் கதை தேவனுக்குத் தெரியும்
என் சிநேகிதியுடனான மதிய உணவிற்கு பின், என் வீட்டிற்கு வரும் வழியில் அவருக்காய் சத்தமாய் தேவனிடத்தில் நன்றி சொன்னேன். நானே விரும்பாத என்னுடைய சில காரியங்களின் மத்தியிலும் அவள் என்னை நேசிக்கிறாள். என்னுடைய திறமைகள், சுபாவங்கள், எனக்கு பிடித்தவைகள் ஆகியவைகளை அறிந்த வெகு சிலரில் அவளும் ஒருத்தி. இருப்பினும் அவளிடத்திலும் மற்றவர்களிடத்திலும் நான் சொல்ல விரும்பாத என்னுடைய மறுபக்கம் சில உண்டு. நான் விரும்பத்தகாத நபராய், இரக்கமில்லாதவளாய், நேசிக்காதவளாய் இருந்த தருணங்கள் உண்டு.
ஆனால் தேவனுக்கு என் முழு கதையும் தெரியும். மற்றவர்களிடம் பேசத்தயங்கும் விஷயத்தைக் கூட அவரிடம் நான் தயங்கமில்லாமல் பேசமுடியும்.
நம்முடைய சர்வ ஏகாதிபத்தியராகிய ஆண்டவரிடம் நமக்கு உள்ள உறவை சங்கீதம் 139 விவரிக்கிறது. அவருக்கு நம்மை முழுமையாய் தெரியும் (வச. 1). நம்முடைய வழிகளெல்லாம் அவருக்கு தெரியும் (வச. 3). அவர் நம்மை நம்முடைய குழப்பங்கள், கவலைகள், பாடுகள், சோதனைகள் ஆகியவைகளை எடுத்துக்கொண்டு அவரிடத்திற்கு வரும்படி அழைக்கிறார். நாம் அவரை முழுவதும் சார்ந்துகொள்ளும்போது, அவர் நம் வாழ்க்கையை மறுசீரமைக்கவும், நம்மை சோகத்தில் ஆழ்த்தும் நமது கதையை மாற்றி எழுதவும் அவரால் கூடும்.
மற்றெல்லாரைக் காட்டிலும் தேவன் நம்மை நன்றாய் அறிந்திருக்கிறார். அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார்! ஒவ்வொருநாளும் அவரிடத்தில் சரணடைந்து, அவரை முழுவதுமாய் அறிந்துகொள்ள முனையும்போது, அவருடைய நாமம் மகிமைக்காய் நம்முடைய கதையை மாற்றி எழுதுவார். அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒரு ஆசிரியர்.
தேவன் கொடுக்கும் மகிழ்ச்சி
திவ்யா வீதியில் நடக்கும்போதெல்லாம் எதிர்படுபவர்களை எல்லாம் புன்முறுவலோடு எதிர்கொள்வது வழக்கம். சிநேகிக்கும் முகங்களை பார்க்க விரும்புபவர்களை அவள் வரவேற்கும் விதம் அப்படியாக இருந்தது. பல வேளைகளில் பெரும்பாலானோரின் உண்மையான புன்னகை அவளுக்கு பதிலாக கிடைக்கும். முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டபின், அவளுடைய முகத்தை யாரும் பார்க்க முடியாததால், அவள் சிரிப்பையும் யாரும் பார்க்கமுடியாது என்பதை அவள் உணர்ந்தாள். அது கடினம் என்றாலும் “நான் அதை நிறுத்தப்போவதில்லை, நான் சிரிப்பதை மற்றவர்கள் என் கண்களின் மூலமாய் பார்க்கட்டும்” என்று தீர்மானித்தாள்.
இந்த தீர்மானத்திற்கு பின் ஒரு சிறிய அறிவியல் பூர்வமான காரியம் உண்டு. வாயின் இருபுறமுள்ள தசைகளும் கண்களை சுறுக்கச்செய்யும் தசையும் இணைந்தே செயல்படும். இதனை “டுசென்னே” புன்னகை என்று அழைப்பர். அதற்கு, “கண்களால் சிரிப்பது” என்றும் அர்த்தம் உண்டு.
நீதிமொழிகள், “கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கட்டும்” என்றும் “மனமகிழ்ச்சி நல்ல ஓளஷதம்” (15:30; 17:22) என்றும் குறிப்பிடுகிறது. பெரும்பாலான நேரத்தில் தேவ பிள்ளைகளாகிய நம்மிடத்திலிருந்து வெளிப்படுகிற புன்னகை நாம் பெற்றிருக்கிற உன்னதமான மகிழ்ச்சியிலிருந்து வெளிப்படுகிறது. அது, அதிகமான பாரத்தை சுமக்கிற மக்களை உற்சாகப்படுத்தவும், வாழ்க்கையில் கேள்வியோடு பயணிக்கிறவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் நம் வாழ்க்கையிலிருந்து வழிந்தோடும் தேவனுடைய வரமாய் இருக்கிறது. நாம் உபத்திரவத்தைச் சந்திக்கும்போது என் மகிழ்ச்சி புன்னகையில் பிரதிபலிக்கும்.
திட்டங்கள் உள்ளதா?
பதினெட்டு வயது நிரம்பி காடன், கல்வி உதவித்தொகையில் தனக்கு ஒரு கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தான். உயர்நிலைப் பள்ளியில் ஒரு வளாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த அவன், புதிய சூழலில் இதேபோன்ற ஊழியத்தில் பங்கேற்க எதிர்பார்த்தான். அவன் தனது பகுதிநேர வேலையிலிருந்து பணத்தை மிச்சப்படுத்தினான். மேலும் ஒரு புதிய வேலையில் சிறந்த முன்னிலைப் பெற்றான். அவன் சில குறிக்கோள்களை மனதில் வைத்திருந்தான், எல்லாமே அட்டவணைபடி சரியாக நடந்து கொண்டிருந்தது.
பின்னர் 2020 வசந்த காலத்தில் எற்பட்ட ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடி எல்லாவற்றையும் மாற்றியது.
தனது முதல் செமஸ்டர் ஆன்லைனில் இருக்கக்கூடும் என்பதை பள்ளி நிர்வாகம் கேடனுக்கு தெரியப்படுத்தியது. அவனுடைய கல்லூரி வளாக ஊழியம் நிறுத்தப்பட்டது. அவனுடைய வேலை வாய்ப்பும் வறண்டுவிட்டது. அவன் விரக்தியடைந்தபோது, அவனது நண்பர், “ஆமாம், அவர்கள் வாயில் குத்து விழும் வரை அனைவருக்கும் ஒரு திட்டம் உள்ளது” என்ற ஒரு பிரபலமான குத்துச்சண்டை வீரரின் வார்த்தைகளை அவனுக்கு நினைவுபடுத்தினான்.
நீதிமொழிகள் 16, நாம் நம் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவிக்கும்போது, அவர் நம்முடைய திட்டங்களை உறுதிப்படுத்துவார், அவருடைய சித்தத்தின்படி காரியங்களைச் செய்வார் (வச. 3-4) என்று கூறுகிறது. இருப்பினும் உண்மையான அர்ப்பணிப்பு சற்று கடினமாக இருக்கும். இது நம்முடைய காரியத்தை நாம் சுயாதீனமாய் நம்முடைய போக்கில் செய்யாமல், தேவனின் வழிநடத்துதலுக்கான திறந்த இதயத்தை வரவேற்கிறது (வச. 9, 19:21).
நிறைவேறாத கனவுகள் ஏமாற்றத்தைத் தரக்கூடும். ஆனால் நம் எதிர்காலத்தைக் குறித்த நம்முடைய குறுகிய பார்வை, எல்லாம் அறிந்த தேவனுடைய திட்டத்தை எப்போதுமே ஈடுகட்ட முடியாது. நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போது, முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காணாதபோதும் அவர் நம் நடைகளை இன்னும் அன்பாக வழிநடத்துகிறார் என்பதில் உறுதியாக இருக்க முடியும் (16:9).
அக்கினியினால் தூண்டப்படுதல்
சோர்வுற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள், காலை உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டபோது, பணியாளர் இவர்கள் செய்திகளில் தோன்றினவர் என்று அடையாளம் கண்டு, அவர்கள் ஒரு கிடங்கின் தீயை எதிர்த்துப் ஒரு இரவு முழுவதும் போராடினார்கள் என்பதை உணர்ந்தார். தனது பாராட்டுக்களைக் காட்ட , அவர் அவர்களின் ரசீதில் ஒரு குறிப்பை எழுதினார், “உங்கள் காலை உணவு இன்று என்னிடம் உள்ளது. நன்றி . . . மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவும், எல்லோரும் விட்டு ஓடும் இடங்களுக்கு ஓடியதற்காகவும் . . . . நெருப்பால் தூண்டப்பட்டு, தைரியத்தால் இயக்கப்பட்டீர்கள், நீங்கள் எவ்வளவு சிறந்த ஒரு உதாரணம்."
பழைய ஏற்பாட்டில், மூன்று இளைஞர்களின் செயல்களில் தைரியத்தின் ஒரு உதாரணத்தைக் காண்கிறோம்: சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ (தானியேல் 3). பாபிலோனிய ராஜாவின் சிலையை வணங்குவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, இந்த இளைஞர்கள் தைரியமாக அதை மறுத்ததன் மூலம் தேவன் மீதுள்ள அன்பைக் வெளிப்படுத்தினர். அவர்களின் தண்டனை அக்கினிச்சூளைக்குள் வீசப்பட வேண்டும் என்பதே. ஆனாலும் அந்த இளைஞர்கள் பின்வாங்கவில்லை: “நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை,…பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை. (வச. 17-18).
தேவன் அவர்களை மீட்டார், அவர்களுடன் நெருப்பிலேயும் கூட உலாவினார் (வச. 25-27). இன்று நம்முடைய தீக்கனையான சோதனைகளிலும், தொல்லைகளிலும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது. அவரால் முடியும்.
ஆதரவின் வழியாக
ஜனவரி 28, 1986 அன்று, அமெரிக்க விண்வெளி விண்கலம் சேலஞ்சர் புறப்பட்ட எழுபத்து மூன்று வினாடிகளில் உடைந்துபோனது. தேசத்திற்கு ஆறுதல் அளிக்கும் உரையில், ஜனாதிபதி ரீகன் "ஹை பிளைட்" என்ற கவிதையில் இருந்து, அதில் இரண்டாம் உலகப் போரின் விமானியான ஜான் கில்லெஸ்பி மாகி எழுதியுள்ள " விண்வெளியின் மிகைப்படுத்தப்படாத புனிதத்தன்மை" மற்றும் தனது கையை நீட்டி "தேவனின் முகத்தை" தொடும் உணர்வு பற்றி மேற்கோள் காட்டினார்.
தேவனின் முகத்தை நாம் உண்மையில் தொட முடியாது என்றாலும், சில சமயங்களில் நாம் அனுபவிக்கிற பிரம்மிக்கத்தக்க சூரிய அஸ்தமனம் அல்லது இயற்கையின் அமைதியான சூழல் அவர் அருகில் உள்ளார் என்ற சிறந்த உணர்வை நமக்கு அளிக்கிறது. சிலர் இந்த தருணங்களை “மெல்லிய இடங்கள்” என்று அழைக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் பிரிக்கும் இடைவெளி கொஞ்சம் மெல்லியதாக காணப்படுகிறது. தேவனை கொஞ்சம் நெருக்கமாக உணர்கிறோம்.
இஸ்ரவேலர்கள் பாலைவன வனாந்தரத்தில் தேவனின் அருகாமையை உணர்ந்ததால் ஒரு "மெல்லிய இடத்தை" அனுபவித்திருக்கலாம். தேவன் பாலைவனத்தின் வழியாக அவர்களை வழிநடத்த பகலில் மேக ஸ்தம்பத்தையும் இரவில் அக்கினி ஸ்தம்பத்தையும் வழங்கினார் (யாத்திராகமம் 40: 34-38). அவர்கள் பாளையத்திலே தங்கினபோது, "கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று" (வச. 35). அவர்களின் எல்லா பிரயாணங்களிலும், தேவன் அவர்களுடன் இருந்ததை அவர்கள் அறிந்தார்கள்.
தேவனின் படைப்பின் நம்பமுடியாத அழகை நாம் ரசிக்கும்போது, அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது நமக்கு நனவாகிறது. நாம் ஜெபத்திலே அவருடன் பேசும்போது, அவரது வார்த்தைகளை கேட்கும்போது, வேதவசனங்களைப் படிக்கும்போது, எந்த நேரத்திலும் மற்றும் எங்கும் அவரோடு உள்ள ஐக்கியத்தில் மகிழலாம்.
அன்பான கடிந்துகொள்ளுதல்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என் அப்பா தனது படதொகுப்பில் சிறந்து விளங்க முயன்றார். அவரது ஆர்வம் தவறுகளைத் தேடுவது மட்டுமல்ல, தெளிவு, தர்க்கம், நிலையான ஓட்டம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் நகலை சிறந்ததாக்குவதாகும். அப்பா தனது திருத்தங்களை குறிப்பிட சிவப்பு நிற எழுதுகோலை விட ஒரு பச்சை எழுதுகோலையே பயன்படுத்தினார். பச்சை எழுதுகோலை “நட்பாக” அவர் உணர்ந்தார். அதே நேரத்தில் சிவப்பு நிற அடிக்கோடுகள் ஒரு புதிய அல்லது நம்பிக்கையற்ற எழுத்தாளரைக் பதற்றமளிக்கும் என்றெண்ணினார். ஒரு சிறந்த வழியை மென்மையாகச் சுட்டிக்காட்டுவதே அவரது நோக்கம்.
இயேசு மக்களை கடிந்துக்கொண்டபோது, அன்பில் அவர் அவ்வாறு செய்தார். சில சூழ்நிலைகளில்-பரிசேயர்களின் மாய்மாலத்தை அவர் எதிர்கொண்டது போன்றவற்றில் (மத்தேயு 23) - அவர் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார், ஆனாலும் அவர்களுடைய நலனுக்காகதான். ஆனால் அவரது தோழியான மார்த்தாளின் விஷயத்தில் ஒரு மென்மையான கடிந்துக்கொள்ளுதல் மட்டுமே தேவைப்பட்டது (லூக்கா 10: 38–42). அவருடைய கண்டிப்புக்கு பரிசேயர்கள் மோசமாக பதிலளித்தாலும் மார்த்தாள் அவருடைய அன்பான சிநேகிதர்களில் ஒருவராக இருந்தார். (யோவான் 15:31-32).
திருத்தம் சங்கடமாக இருக்கக்கூடும், நம்மில் சிலர் இதை விரும்புகிறோம். சில நேரங்களில், நமது பெருமை காரணமாக, அதை சந்தோஷமாகப் பெறுவது கடினம். நீதிமொழிகள் புத்தகம் ஞானத்தைப் பற்றி அதிகம் பேசுகிறது, மேலும் “கடிந்து கொள்ளுதலைக் கேட்பது” ஞானத்திற்கும் புரிதலுக்கும் ஒரு அடையாளம் என்றும் குறிக்கிறது. (15: 31-32).
தேவனுடைய அன்பான கடிந்துக்கொள்ளுதல் நம் திசையை சரிசெய்யவும், அவரை மிகவும் நெருக்கமாக பின்பற்றவும் உதவுகிறது. அதை மறுப்பவர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள் (வச. 10), ஆனால் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் அதற்கு பதிலளிப்பவர்கள் ஞானத்தையும் புத்தியையும் பெறுவார்கள் (வச. 31-32).
விசுவாச முதலீடுகள்
தனது பன்னிரண்டாவது கிறிஸ்மஸ் தினத்தன்று, அந்தச் சிறுவன் மரத்தினடியில் பரிசுகளை திறக்க ஆவலுடன் காத்திருந்தான். அவன் ஒரு புதிய பைக்கிற்காக எதிர்நோக்கி கொண்டிருந்தான். ஆனால், அவனது நம்பிக்கை பொய்த்துப் போனது. கடைசியாக அவன் பெற்றது ஒரு அகராதி. முதல் பக்கத்தில் எழுதியிருந்ததை அவன் படித்தான். “அம்மா மற்றும் அப்பாவிடமிருந்து சார்லஸ்க்கு, 1958. அன்புடனும் பள்ளியில் உனது சிறந்த பணிக்கான மிக அதிக நம்பிக்கையுடனும்."
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த சிறுவன் பள்ளியில் சிறப்பாக செயலாற்றினார். கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் விமான பயிற்சி பெற்றார். அவர் வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு விமானி ஆனார். தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கும், இயேசுவை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தனது வேட்கையை நிறைவேற்றினார். இப்போது இந்தப் பரிசைப் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தான் நன்கு உபயோகித்திருந்த அகராதியை தனது பேரக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார். இது அவரது எதிர்காலத்தில் பெற்றோரின் அன்பான முதலீட்டின் அடையாளமாக மாறியது. அவர் அதை இன்னும் பொக்கிஷமாகக் கருதுகிறார். அனால் கடவுள், வேதாகம வசனங்களை பற்றி தினம்தோறும் அவருக்கு கற்பிப்பதன் மூலம் தனது நம்பிக்கையை வளர்ப்பதில் தன் பெற்றோர் செய்த அன்றாட முதலீட்டிற்கு அவர் இன்னும் அதிகமான நன்றியுள்ளவராக இருக்கின்றார்.
உபாகமம் 11 வேதாகமத்தின் வார்த்தைகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது."அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அதுகுறித்து பேசுவீர்களாக" (வச. 20).
இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவர் சிறுவனாக இருந்தபோது நடப்பட்ட நித்திய மதிப்புகள் வாழ்நாள் முழுவதும் அவரது இரட்சகருக்கான சேவையில் மலர்ந்தன. கடவுளின் செயல்பாட்டின் மூலம், ஒருவரின் ஆத்தும வளர்ச்சியில் நமது முதலீடு எவ்வளவு பலனளிக்கும் என்பதை யார் அறிவார்.
சிறிய மீன்
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த ஒரு தம்பதியினருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தங்கள் ஊரிலே வசித்து வந்தார். அநேக முறை இயேசுவின் அன்பைக் குறித்து அவருக்கு பகிர்ந்து வந்தனர். அவரின் இரட்சிப்பையும் குறித்து அவருக்கு அறிவித்து வந்தனர். இப்படிப்பட்ட மிகப் பெரிய உண்மையை உணர்ந்தும் தம் வாழ்க்கையை வேறொரு மதத்தின் நிமித்தம் விசுவாசத்திற்கு தம்மை ஒப்புக்கொடுக்க தயங்கினார். சிறிதளவு அவர் பண ரீதியாகவும் யோசித்தார். தாம் வழிபடும் மதத்தின் ஒரு தலைவராக இருந்தபடியால் பணப்பற்றாக்குறை தயக்கமும் அவர் மத சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் மரியாதை விடும் என்ற பயமும் இருந்தது.
வருத்தத்துடன் அந்த தம்பதியினிரடம் “ஓடுகிற நதியில் கைகளைக் கொண்டு மீன் பிடிப்பவனைப் போல் இருக்கிறேன். சிறிய மீன் ஒன்றை பிடித்து விட்டிட்டேன், ஆனால் பெரிய மீன் ஒன்று போவதைப் பார்க்கிறேன். அந்த பெரிய மீனை பிடிப்பதற்கு இந்த சிறிய மீனை நான் விட வேண்டியதாய் இருக்கிறது.!”
மத்தேயு 19-ல் இருக்கும் அந்த பணக்கார வாலிபனும் இதே போல் ஒரு சூழ்நிலையில் தான் காணப்பட்டான். இயேசுவிடம் வந்து “நித்திய ஜீவனை பெற நான் என்ன செய்ய வேண்டும்?” (வச 16) என்று கேட்க்கும்போது ஆர்வத்துடன் கேட்பது போல் இருந்தாலும் தன ஜீவனை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைக்க மனதில்லை. அவன் பணத்தில் மாத்திரம் ஐஸ்வர்யாவானாக இருக்கவில்லை, தம் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் மிகவும் பெருமை உடையவனாய் இருந்தான்.நித்திய ஜீவனை அடைய வாஞ்சித்தாலும், இயேசுவை வெறுத்து மற்றவைகளை நேசித்தவனாக காணப்பட்டான்.
தாழ்மையுடன் நம் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்து, அவர் நமக்களித்த இலவச இரட்சிப்பை ஏற்றுக்கொண்டால், “என்னை பின்பற்றி வா” என்று அழைக்கிறார்.