என் தோழி இரவில் விழித்துக்கொள்ளும் போது, அவள் “என் இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” என்ற பாடலின் வரிகளை நினைத்துக்கொள்வாள். அதை அவள் “நடு இரவின் பாடல்” என்றழைப்பாள் ஏனெனில் அவள் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அவரை நேசிக்க அவள் கொண்டிருந்த அநேக காரணங்களையும் அவளுக்கு அந்த பாடல் நினைவூட்டியது.

வாழ்க்கையில் தூக்கம் என்பது ஒரு அவசியமான, ஆனால் சிலசமயங்களில் மழுப்பலான பகுதியாகவும் உள்ளது. சிலநேரம் நம் வாழ்வில் அறிக்கையிடாத பாவங்களை நம் சிந்தைக்கு கொண்டுவரும் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை உணர்வோம், அல்லது நம் வேலை, நம் உறவுகள், நம் பொருளாதாரம், நம் ஆரோக்கியம், அல்லது நம் பிள்ளைகள் போன்றவற்றை நினைத்து கவலைப்பட ஆரம்பிப்போம். உடனே நிச்சயமற்ற, கவலை நிறைந்த ஒரு எதிர்காலம் நம் எண்ணங்களில் வட்டமிட துவங்கும். நாம் சுதாகரித்து நேரம் கடந்திருக்கும் என்றெண்ணி கடிகாரத்தை பார்ப்போம் ஆனால் படுத்து சில நிமிடங்களே ஆகியிருக்கும்.

நீதிமொழிகள் 3:19-24 ல், நாம் தேவனுடைய ஞானம், புத்தி மற்றும் நல் ஆலோசனை ஆகியவற்றை காத்துக்கொள்ளும்போது நித்திரையின் நற்பலன்களையும் நாம் பெறுவோமென்று சாலொமோன் ராஜா நம்மை அறிவுறுத்துகிறார். உண்மையில் அவர், “அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும்…நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.”(வ) என்பதில் உரிமை பாராட்டினார்.

ஒருவேளை நம் அனைவருக்குமே ஒரு “நடு இரவின் பாடலோ”, ஜெபமோ, அல்லது வேத வசனமோ மெல்லிய குரலில் ஒலித்து நம்மை நம்முடைய குழப்பமான சிந்தனைகளிலிருந்து மீட்டு தேவனையும், அவரது குணாதிசயத்தையும் உற்றுக்கவனிக்கும் சிந்தனைக்கு கொண்டுசெல்ல தேவைப்படுகிறது. சுத்தமான மனசாட்சியும், தேவனின் உண்மைத்தன்மைக்கு நன்றி நிறைந்த இதயமும், அன்புமே நமக்கு இனிமையான நித்திரையை கொண்டுவரும்.